- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilவரவரன்னு வறட்சியா இருக்க உங்க சருமத்தை வழுவழுன்னு மாற்ற வாழைப்பழம் ஒன்று போதும். மேக்கப் போடாமலேயே...

வரவரன்னு வறட்சியா இருக்க உங்க சருமத்தை வழுவழுன்னு மாற்ற வாழைப்பழம் ஒன்று போதும். மேக்கப் போடாமலேயே உங்கள் கன்னம் டால் அடிக்கும்.

- Advertisement -

டல்லடிக்கும் உங்கள் கன்னங்களை அப்படியே டால் அடிக்க வைப்பதற்கு சூப்பரான ஒரு அழகு குறிப்பு. ஆமாங்க வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இந்த ஃபேஸ் பேக் தயார் செய்து, கன்னங்களில் தடவி பாருங்கள். ஒரு சில நாட்களில் வறட்சியாக இருக்கக்கூடிய உங்க சருமம் அப்படியே மேக்கப் போடாமலேயே பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். எந்த செலவும் கிடையாது எந்த கெமிக்கலும் கிடையாது. பள்ளிக்கூடம் போகும், சின்ன பெண் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை பயன்படுத்தலாம். அழகின் மீது ஆர்வம் உள்ளவர்கள் இந்த குறிப்பை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வழுவழு கன்னங்களைப் பெற வாழைப்பழ ஃபேஸ் பேக்:
நன்றாக பழுத்த வாழைப்பழம் ஒன்றை தோலுரித்து துண்டு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இதோடு அரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன், தேன் 2 ஸ்பூன், ஊற்றி விழுதாக இதை அரைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

இந்த பேக்கை தொடும்போதே அவ்வளவு வழுவழுப்பாக இருக்கும். முகத்தில் போட்டுக்கொள்ள ஆசையாக இருக்கும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை மேக்கப் இல்லாமல் சுத்தமாக கழுவி விட்டு, இந்த ஃபேஸ் பேக்கை முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். குறிப்பாக வாயை சுற்றி இருக்கும் கருவளையம், கண்ணை சுற்றி இருக்கும் கருவளையம் இந்த இடத்தில் கவனம் செலுத்தி இந்த பேக்கை போடுங்க.

பிறகு 20 நிமிடங்கள் கழித்து பேக் டிரை ஆகிவிடும். டிரையான பேக்கை முகத்தில் ஈரம் செய்து கொண்டு உங்கள் கையை வைத்து நன்றாக 5 நிமிடம் வட்ட வடிவில் முகத்தை மசாஜ் செய்து கொடுங்கள். பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவி விட்டு, உங்கள் சருமத்திற்கு ஏற்ப மாய்சரைசர் போட்டு அப்படியே தூங்கச் செல்லலாம். மறுநாள் காலை எழுந்து பார்த்தால் உங்கள் முகத்தில் அப்படி ஒரு க்ளோ தெரியும்.

- Advertisement -

வாரத்தில் இரண்டிலிருந்து மூன்று நாட்கள் இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வர சருமம் வறட்சித் தன்மையிலிருந்து மீண்டு நல்ல ஈரப்பதத்தை பெறும். சூப்பரான ஹேர் பேக்குங்க. உங்கள் சருமத்தில் பத்திலிருந்து பதினைந்து நாட்களில் நல்ல வித்தியாசத்தை உணரலாம். குறிப்பாக சன்டேன் ஆகி கருப்பாயிட்டீங்க. அப்படின்னா இந்த பேக்கை சன்டேன் ஆன இடங்களில் போட்டால் அந்த கருமை நிறம் சீக்கிரமே நீங்கிவிடும். கை கால் பாதங்கள் கழுத்து பகுதியில் கூட இந்த பேக்கை போட்டு பலன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே: எவ்வளவு கருப்பாக இருப்பவர்களையும், 30 நாட்களில் வெள்ளையாக மாற்ற இந்த 1 பொருள் போதும். நீங்க ஆளே அடையாளம் தெரியாம அப்படியே தலைகீழா மாறிடுவீங்க.

இனி பழுத்த வாழைப்பழத்தை எக்காரணத்தைக் கொண்டும் தூக்கி போடாதீங்க. பேக் ஆக செய்து இப்படி சருமத்தின் மேல் போட்டு உங்களுடைய அழகுக்கு இன்னும் கூடுதல் அழகு சேர்த்துக் கொள்ளுங்கள். அழகு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

சற்று முன்