வாசலுக்கு நேராக இந்த ஒரு பொருள் மட்டும் இருக்கவே கூடாது. பணம் வீண் விரயம் ஆவதற்கு இதுவும் ஒரு காரணம் தான்.

tap
- Advertisement -

மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வருகை தரக்கூடிய இடம் இந்த நிலை வாசல் படி. நிலைவாசல் படியை எந்த அளவிற்கு பக்தியோடு பராமரித்து வருகின்றோமோ, அந்த அளவிற்கு நம்முடைய வீட்டில் நிம்மதி சந்தோஷம் லட்சுமி கடாட்சம் எல்லாம் நிலைத்து நிற்கும். இந்த நிலை வாசல் படிக்கு நேராக வெளிப்பக்கம் இருக்கக் கூடாத விஷயம் என்ன என்பதை பற்றியும், ஒரு வேலை இப்படிப்பட்ட தவறான வாஸ்து உங்களுக்கு அமைந்துவிட்டால், இதற்கு என்ன தீர்வு என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். அதாவது நிலை வாசலுக்கு உள்ளே நீங்க இருக்கீங்க. நிலை வாசல் கதவை திறந்ததும், நீங்கள் பார்க்கும் இடத்தில், நேராக இந்த பொருள் கட்டாயம் இருக்கக் கூடாது. அது எந்த பொருள்.

நிலை வாசலை திறந்த உடன் உங்கள் வாசலுக்கு எதிராக கிணறு கட்டாயம் இருக்கக் கூடாது. பெரும்பாலும் நிறைய பேர் வீட்டில் இன்றைய சூழ்நிலையில் இந்த கிணறு கிடையாது. ஆனால் தண்ணீரை தரக்கூடிய அடிபம்ப், தண்ணீர் குழாய், இவைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இப்படி தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் நிலை வாசலுக்கு நேராக வெளியில் இருந்தால் வீட்டில் பணம் தங்காது.

- Advertisement -

சில பேர் வீட்டில் தண்ணீர் தொட்டி கூட இப்படி நிலை வாசலுக்கு எதிரே இருக்கும். தண்ணீர் கொடுக்கக்கூடிய தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிலை வாசப்படிக்கு நேர் எதிராக அமைந்து விட்டால் என்ன செய்வது. உங்களுடைய வீட்டு நிலை வாசலுக்கு எதிரே கிணறு இருப்பதாக வைத்துக் கொள்வோம். சம்பளம் வாங்கிய உடன் ஒரு ரூபாயை கொண்டு போய் அந்த கிணற்றில் உள்ள தண்ணீரில் போட்டுவிட்டு வந்து விடுங்கள். மாதம் தோறும் இப்படி செய்யலாம்.

அடிபம்ப், தண்ணீர் குழாய், தண்ணீர் தொட்டி இருந்தால் அதற்குப் பக்கத்தில் 1 ரூபாய் நாணயத்தை லேசாக மண்ணைத் தோண்டி புதைத்து விட்டு வந்து விடலாம். இப்படி செய்தால் இந்த வாஸ்து தோஷத்தால் வரக்கூடிய பிரச்சனைகள் நமக்கு குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. (தண்ணீர் நிரப்பி வைக்கும் தொட்டியாக இருந்தால் அதற்குள்ளும் ஒரு ரூபாய் நாணயத்தை எப்போதும் போட்டு வைக்கலாம். மாதம் தோறும் ஒரு ரூபாய் நாணயம் போட்டு வையுங்கள். பழைய ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.)

- Advertisement -

இது தவிர உங்களுடைய வீட்டில் டேங்க், டேப் இவைகளில் தண்ணீர் சொட்டி கொண்டே இருக்கக் கூடாது. சில வீடுகளில் டாக்கில் ஓரங்களில் விரிசல் இருக்கும். அந்த ஓரங்களில் இருந்து நீர் கசிவு இருந்து வந்தால், அந்த வீட்டிலும் பணம் தண்ணீர் போல கரையும். தண்ணீரை செலவு செய்வதில் சிக்கனம் காட்ட வேண்டும். சில பெண்கள் சிங்கிள் பைப்பை திறந்து விட்டால் தண்ணீர் பாட்டுக்கு போய்க் கொண்டே இருக்கும். பாத்திரம் தேய்க்கும் போது பத்து மடங்கு தண்ணீரை அதிகமாக பயன்படுத்துவார்கள். இது மிக மிக தவறு.

இலவசமாக நிறைய தண்ணீர் உங்களுக்கு கிடைக்கிறது என்றாலும் அதை அளவோடு தான் பயன்படுத்த வேண்டும். ஒரு துணி துவைக்க, பத்து பக்கெட் தண்ணீர் பயன்படுத்துவது, ஒரு ஆள் குளிக்க பத்து பக்கெட் தண்ணீரை ஊற்றுவது போன்ற பழக்க வழக்கங்கள் இருக்கவே கூடாது. தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யக்கூடிய வீட்டில் நிச்சயம் பணமும் சிக்கனமாக இருக்கும். வீண்விரையும் ஆகாது. மேலே சொன்ன குறிப்புகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -