கண்ணுக்குத் தெரியாத அமானுஷ்யமான எந்த ஒரு துர்சக்தியாலும் நமக்கும், நம் குடும்பத்திற்கும் பாதிப்பு வராது. விபூதியை நெற்றியில் இப்படி வைத்துக் கொள்ளுங்கள்.

thilagam
- Advertisement -

பொதுவாகவே வீட்டில் இருப்பவர்கள் வெளியே கிளம்பும்போது பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். நெற்றியில் திருநீறு அணிந்துகொண்டு வெளியே செல் என்று சொல்லுவார்கள். இப்படி நம்முடைய நெற்றியில் திருநீறு அணிந்து இருந்தால் நம்மை எந்த ஒரு கெட்ட சக்தியும் வந்து அண்டாது என்பது முன்னோர்களுடைய நம்பிக்கையாக இருந்து வந்தது. அந்த நம்பிக்கை உண்மையும் கூட. தினமும் திருநீறு அணிந்து வெளியில் செல்பவர்களுக்கு இந்த உண்மை நிச்சயம் புரிந்திருக்கும்.

ஆனால் இன்று நிறைய பேர் நெற்றியில் திருநீறு அணியும் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளி வந்து கொண்டிருக்கிறார்கள். கேட்டால் திருநீறு வைப்பது ஃபேஷன் இல்லை என்று சொல்கிறார்கள். முற்றிலும் தவறு. உங்களுடைய குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள். திருநீறு பூசிக் கொண்டு வெளியில் செல்வது நல்ல பழக்கம் என்பதை.

- Advertisement -

சரி நம்மை துர்சக்திகள் அண்டாமல் இருக்க கண்ணுக்கு தெரியாத அமானுஷ்ய சக்திகளின் மூலம் நம்முடைய உடம்புக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க விபூதியுடன் எந்த பொருளை கலந்து நெற்றியில் வைத்துக்கொண்டால் நல்லது என்பதை பற்றிய ஒரு சிறு குறிப்பை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வசம்பு. இந்த வசம்பு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வசம்பை வாங்கி நன்றாக காய வைத்து விட்டு, ஒன்றும் இரண்டுமாக உரலில் போட்டு இடித்து எடுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். வசம்பு பொடி வாங்குவதோடு வசம்பை நாமே வாங்கி பொடி செய்து கொள்வது சிறப்பு. அடுத்து ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலைகளை எடுத்து காயவைத்து தூள் செய்து அதையும் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு கைப்பிடி அளவு விபூதியை எடுத்துக் கொண்டால், ஒரு கைப்பிடி அளவு வசம்பு பொடி, 1/2 கைப்பிடி அளவு வேப்பம் பொடி இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து அந்த விபூதியில் இரண்டு காய்ந்த துளசி இலைகளை போட்டு திறந்த படி பூஜை அறையில் வைத்து விடுங்கள். குலதெய்வத்தை நன்றாக பிரார்த்தனை செய்து தீபம் ஏற்றி இந்த விபூதியை தயார் செய்து வைத்துக்கொண்டால் போதும்.

தினமும் வெளியில் செல்லும்போது வீட்டில் இருக்கும் பெரியவர்கள் குழந்தைகள் வயதானவர்கள் என்று எல்லோரும் இந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். குழந்தைகள் அனாவசியமாக நேரம் காலம் இல்லாமல் வெளியில் சென்றாலும் அவர்களுக்கு தீய சக்தியால் எந்த பாதிப்பும் ஏற்படாது. வயது வந்த பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளும் இந்த விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்வது ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும்.

சிறு குழந்தைகளுக்கு காத்து கருப்பு அண்டக் கூடாது என்பதற்காக வசம்பு காப்பை காலில் கட்டி வைத்திருப்பார்கள். அதே போலதான் இந்த வசம்பு விபூதியையும் நாம் தயார் செய்து நம்முடைய பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால் இந்த விபூதியை கொஞ்சமாக தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரை நிலைவாசலில், வீட்டின் மூலை முடுக்குகளில் தெளித்து விடுவது வீட்டிற்கு பாதுகாப்பு கவசமாகவும் இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -