நாளை 26/1/2023 வாய்ந்த வசந்த பஞ்சமி! இழந்த சொத்துக்கள் கிடைக்கவும், புது வீடு கட்டி குடியேறவும், ஞானம் பெறவும் பஞ்சமியில் இந்த கடவுளை இப்படி வழிபடலாமே!

saraswathi-varahi-vilakku
- Advertisement -

பஞ்சமி திதிகளில் வசந்த பஞ்சமி மிகச் சிறந்த நாளாக கருதப்படுகிறது. நம்முடைய நாட்டில் எப்படி சரஸ்வதி பூஜை வெகு விமரிசியாக எல்லோருடைய வீடுகளிலும் புத்தகம், நோட்டு, பேனா எல்லாம் வைத்து பூஜை செய்து கொண்டாடப்படுகிறதோ, அதே போல வட மாநிலங்களில் வசந்த பஞ்சமியில் அன்னை சரஸ்வதி தேவியை வழிபடுவார்கள். அப்படிப்பட்ட இந்த நாளில் நாளை வியாழன் கிழமையில் வாஸ்து நாளும் கூடி வருவதால் இழந்த சொத்துக்கள் திரும்ப பெறவும், புது வீடு கட்டி குடியேற வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த கடவுளை வழிபட்டு பயன்பெறலாம். இப்படியான அற்புதமான தகவல்களை தொடர்ந்து தெரிந்து கொள்ள இந்த ஆன்மீக குறிப்பு பதிவை நோக்கி பயணியுங்கள்.

செய்யும் செயல்கள் பன்மடங்கு பெருக பஞ்சமி திதியில் வராஹி அம்மனை வழிபடுவார்கள். பகைவர்கள் ஒழியவும், நம்மை எதிர்த்து வரக்கூடிய பிரச்சனைகளை ஒழித்துக் கட்டவும் என்றும் பஞ்சமியில் வராகி அம்மனை வழிபடுதல் சிறப்பு! நாளை மாலை 5.11 மணி வரை வசந்த பஞ்சமி நிலவுகிறது.

- Advertisement -

இந்த நாளில் சரஸ்வதி தேவி தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. புனித நதிகளில் நீராடுவது, மஞ்சள் நிற வஸ்திரம் அணிவது, மஞ்சள் நிற மாலைகள் சூட்டி சரஸ்வதி தேவியை வழிபட்டால் கலைகளில் சிறந்து விளங்கலாம். கல்வியில் பேரும் புகழும் பெற்றுக் கொள்ளலாம் என்பது வட இந்திய கலாசாரத்தில் நம்பிக்கையாக இருந்து வருகிறது. நம் நாட்டில் சரஸ்வதி தேவியை வெண்ணிற மலர்களால் அலங்கரித்து தேங்காய், பழம், பால் பாயாசம் நைவேத்தியம் வைத்து சரஸ்வதி அஸ்டோத்திரம் உச்சரித்து வழிபடுவார்கள்.

இழந்த சொத்துக்களை மீண்டும் பெறவும், புதிய வீடு கட்டி குடியேறவும் நினைப்பவர்கள் வசந்த பஞ்சமியில் சரஸ்வதி தேவியை மட்டுமல்லாமல், வராகி தேவியையும் வழிபடுவது முறையாகும். தை மாதத்தில் வரக்கூடிய இந்த வசந்த பஞ்சமி வளர்பிறையில் வருவதால் எண்ணிய எண்ணங்கள் யாவும் வளர்ந்து கொண்டே செல்லும், நம்முடைய செயல்கள் யாவும் பெருகும் என்பது நம்பிக்கை. இந்நாளில் வசந்தங்கள் வீச பக்தியுடன் இறைவழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

- Advertisement -

மகாராஷ்டிரா, ஒரிசா, அசாம், பீகார், காஷ்மீர் போன்ற வட இந்திய மாநிலங்களில் வசந்த பஞ்சமியில் மஞ்சள் நிற உடையை உடுத்திக் கொள்கின்றனர். மேலும் மஞ்சளை பிள்ளையார் பிடித்து வைத்து பிள்ளையாரை பழிபட்டு பின்னர் சரஸ்வதியையும் வழிபட வேண்டும். வசந்த பஞ்சமியில் வராகி அம்மனை நினைத்து விரதம் இருந்து மாலை வேளையில் நல்லெண்ணையில் இரண்டு அகல் விளக்குகள் ஏற்றி வைத்து உளுந்து வடை, சுக்கு போட்ட பானகம், மிளகு போட்ட தயிர் சாதம், சுண்டல், கிராம்பு, பச்சை கற்பூரம், ஏலக்காய் போட்ட பால், கருப்பு எள்ளுருண்டை, சக்கரை வள்ளிக்கிழங்கு, தேன், குங்குமப்பூ, மிளகு தோசை போன்றவற்றில் நைவேத்தியங்களை விருப்பம் போல படைத்து வழிபடுலாம்.

இதையும் படிக்கலாமே:
இந்த தீபம் ஏற்றினால் படிக்காத பிள்ளைகள் கூட புத்தி கூர்மையாகி படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இப்போதே இந்த தீபத்தை ஏற்றினால் வரும் தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

சொத்து பிரச்சனைகள், பகைவர்கள் தொல்லை, நில அபகரிப்பு, நிலம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபெறவும், உங்களிடம் இருந்து ஏமாற்றி வாங்கிய சொத்துக்கள் திரும்பக் கிடைக்கவும் இந்த வசந்த பஞ்சமி நாளில் வராகி அம்மனை வழிபடலாம். வராகி அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி மனதார தரிசித்து வழிபட்டும் வரலாம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குரு குலம் சென்று கல்வி பயில துவங்கியது இந்த வசந்த பஞ்சமியில் தான் என்று புராணங்கள் குறிப்பிடுகிறது எனவே புதிதாக கல்வி, கலைகளை துவங்குபவர்கள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள நினைப்பவர்களும் இந்நாளில் சரஸ்வதி தேவியை வழிபட்டு ஆரம்பிக்கலாம்.

- Advertisement -