உங்கள் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஜாதகத்தில் இவை அவசியம்

jothidam

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் என்பது அவர்கள் இருவரும் பல சவால்கள் நிறைந்த இல்லற வாழ்வில் ஒன்றாக பயணித்து, அனைத்து வகையான இன்பங்களையும் பெற்று வாழ பெரியோர்களால் செய்து வைக்கப்படுகின்ற ஒரு சடங்காகும். அதிலும் இந்திய நாட்டில் திருமணத்தின் போது ஜோதிடம் முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக திருமணம் செய்ய விருக்கும் மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரின் ஜாதகத்தைக் கொண்டு பொருத்தங்கள் பார்த்த பின்பு, திருமணம் செய்யப்படுகிறது. ஜாதகத்தில் பல வகையான பொருத்தங்கள் இருந்தாலும் திருமணத்திற்கு 10 பொருத்தங்கள் மட்டுமே முக்கியமானதாகக் கருதி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதில் ஒன்று தான் அந்த வசியப் பொருத்தம். இதை பற்றி இங்கு விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Hindu Marriage

திருமணத்திற்கு மணமக்களுக்கான ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது பத்து பொருத்தங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில் அனைவருக்குமே பத்துக்கு பத்து பொருத்தங்கள் சரியாக இருக்கும் என்பது சாத்தியமில்லை. எனவே அந்த பத்தில் எட்டு பொருத்தங்கள் நன்றாக இருந்தாலே அந்த மணமக்களுக்கு திருமணம் செய்யலாம் என்று ஜோதிடர்கள் வரையறுத்துள்ளனர். அந்த எட்டு பொருத்தங்களிலும் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு, வசியப்பொருத்தம் ஆகிய ஆறு பொருத்தங்கள் இருப்பது மிகவும் அவசியம் என கூறப்படுகிறது.

வசிய பொருத்தம் என்பது இல்லற வாழ்வில் இணையவிருக்கும் கணவன் மற்றும் மனைவி, அவர்களின் ராசியின் அடிப்படையில் இயற்கையாகவே ஒருவரின் மீது ஒருவருக்கு ஏற்படும் ஈர்ப்பு, வசியம் போன்றவற்றை கூறும் ஒரு பொருத்தமாகும். இந்த வசிய பொருத்தம் நன்றாக இருந்தால் மட்டுமே அந்த தம்பதிகளின் இல்லற வாழ்வில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருவரும் இறுதி வரை ஒற்றுமையாக வாழும் சூழல் ஏற்படும். மணமக்கள் இருவருக்கும் வசியப் பொருத்தம் இல்லாவிட்டால் அந்தத் தம்பதிகளுக்குள் அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு பிரிந்து வாழ்தல், விவாகரத்து போன்றவை ஏற்படலாம். கீழே எந்தெந்த ராசிகளில் பிறந்த ஆண் மற்றும் பெண் ராசிகளுக்கு பொருத்தங்கள் உண்டு என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

jathagam astro

ராசிகளுக்கான வசிய பொருத்தம்

- Advertisement -

பெண் ராசி    ஆண் ராசி

மேஷம்         சிம்மம், விருச்சிகம்
ரிஷபம்         கடகம், துலாம்
மிதுனம        கன்னி
கடகம்          விருச்சிகம், தனுசு
சிம்மம்         மகரம்
கன்னி          ரிஷபம், மீனம்
துலாம்         மகரம்
விருச்சிகம்   கடகம், கன்னி
தனுசு           மீனம்
மகரம்          கும்பம்
கும்பம்         மீனம்
மீனம்           மகரம்

marriage

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண் ராசி மற்றும் பெண் ராசிகளில் மணப்பெண், மணமகளுக்கு பொருந்தக்கூடிய ராசியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு வசியப் பொருத்தம் உண்டு என்பதை கணக்கில் கொண்டு அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்யலாம். மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் மேலே சொல்லப்பட்டிருக்கும் ராசிகளில் பொருத்தம் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு வசியப் பொருத்தம் இல்லை என்பதை கணக்கில் கொண்டு அந்த திருமண வரனை தவிர்த்துவிடுவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
நாடி ஜோதிடத்தில் துல்லியமான பலன் கூறப்படுவதன் ரகசியம் என்ன

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Vasiya porutham in Tamil. It is also called as Jathagam kanippu in Tamil or Jothida palangal in Tamil or Thirumana poruthangal in Tamil or Jothida poruthangal in Tamil.