இனி வாழைப்பூ வாங்கி சமைச்ச பிறகு, அதோட தோலை கூட தூக்கி தூரப் போடாதீங்க. அதை வச்சு காய்ந்த ரோஜா செடியில் கூட பெரிய, பெரிய பூக்களை பூக்க வைக்கலாம். ஆச்சரியமா இருக்கா வாங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

rose plant
- Advertisement -

இந்த வாழைப் பூவை பொருத்த வரையில் உடலுக்கு மிகவும் நல்லது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்திற்கும் இந்த வாழைப்பூ ஒரு நல்ல மருந்து. அது மட்டும் இன்றி நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கூட இந்த வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிடும் போது குறைந்து விடும். அவ்வளவு சத்துக்கள் நிறைந்த இந்த வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இப்போது வாழைப்பூவை சமைத்த பிறகு மீதம் இருக்கும் தோலை செடிகளுக்கு எப்படி உரமாக மாற்றுவது என்பதை இந்த வீட்டு தோட்டம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வாழைப்பூவில் கூட்டு, பொரியல், வடை போன்ற பலவிதமான சமையல்களை செய்யலாம். இப்படி செய்யும் போது அதில் இருக்கும் நரம்பு பகுதியும், கண்ணாடி போல் இருக்கும் சின்ன தோல் பகுதியும் நீக்கி விட்டு தான் சமைப்போம். அத்துடன் இதற்கு மேல் இருக்கும் சிகப்பு நிற பெரிய இதழ்களையும் நீக்கி விடுவோம். இப்படி நீக்கிய இதழ்களை எல்லாம் நாம் தூக்கி தூர தான் போட்டு விடுவோம். இனி அது போல செய்யாமல், அதை வைத்து ஒரு நல்ல அருமையான உரத்தை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதை உரிந்த பிறகு தேவையானவற்றை எடுத்தது போக மீதம் இருக்கும் அனைத்தையும் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதற்கு காற்று போகாத ஒரு பிளாஸ்டிக் பாட்டில் அல்லது கண்ணாடி பாட்டில் உங்களிடம் எது உள்ளதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பாட்டிலில் நீங்கள் நறுக்கி வைத்த தோள்களை எல்லாம் போட்டு விடுங்கள். இதில் வாழைப்பூவின் தண்டை கூட சேர்த்துக் கொள்ளுங்கள். அதையும் கூட தூக்கி போட வேண்டாம்.

இப்போது இதில் தண்ணீரை சேர்க்க வேண்டும். அதற்கு நாம் சாதாரண தண்ணீர் சேர்க்காமல் அரிசி கலைந்த தண்ணீர், பருப்பு ஊற வைத்த தண்ணீர் போன்றவற்றை இதில் சேர்க்க வேண்டும். இந்தத் தண்ணீரில் தான் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. இதையெல்லாம் சேர்த்த பிறகு ஒரு நாள் முழுவதும் இதை அப்படியே மூடி வைத்து விடுங்கள். அடுத்த நாள் இது நன்றாக நொதித்து நுரையுடன் இருக்கும். இதை ஒரு வடிகட்டியில் நன்றாக வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரில் 1 பங்கு உரத்தண்ணீருக்கு 5 பங்கு தண்ணீரை சேர்த்து நன்றாக கலந்த பிறகு, இதை செடிகளின் வேர் பகுதியில் ஊற்றி விடுங்கள். அப்படியே ஸ்ப்ரே பாட்டில் இருந்தால் அதில் ஊற்றி இலைகளில் மீதும் தெளித்து விட்டால், இலைகளும் நல்ல பச்சை பசேர் என்று பெரிய பெரிய இலைகளாக வரும்.

இந்த தண்ணீரை வாரம் ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை செடிகளுக்கு கொடுத்து வரும் போது ரோஜா செடியில் இலைகளில் எல்லாம் காய்ந்து இருந்தால் கூட, அந்த இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிய தளிர்கள் வைத்து அதிக மொட்டுக்களுடன் பெரிய பெரிய பூக்களாக பூக்கள் இந்த உரம் பெரிய அளவில் உதவி செய்யும். இந்த தண்ணீரில் பாஸ்பரஸ், பொட்டாசியம், ஹைட்ரஜன் போன்ற பலவகை சத்துக்கள் உள்ளது.

இதையும் படிக்கலாமே: வெறும் பத்து ரூபாய் செலவில் உங்க தோட்டத்தில் இருக்க எல்லா செடிக்குமே உரம் தயார் பண்ணலாம் தெரியும்மா?. அப்புறம் பாருங்க உங்க தோட்டம் முழுக்க பூவும் காயும்மா தான் இருக்கும்.

சமைத்தது போக தேவையில்லை என நினைத்து தூக்கி போடும் இந்தப் பொருட்களை வைத்து செடிகளுக்கு செலவில்லாத அருமையான ஒரு உரத்தை தயாரிக்க முடியும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். நீங்களும் உங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள ரோஜா செடிக்கு இந்த உரத்தை கொடுத்துப் பாருங்கள். பூக்காத ரோஜா செடிகள் கூட பெரிய பெரிய பூக்களாக பூக்க வைக்க முடியும்.

- Advertisement -