பாரம்பரிய முறையில் சுவையான ‘வாழைப்பூ முருங்கைக்கீரை’ பொரியல். இதை விட சத்தான பொரியலை யாராலும் செய்யவே முடியாது.

poriyal4
- Advertisement -

வாழைப்பூ முருங்கைக்கீரை இரண்டிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளடங்கியுள்ளது. இது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து ஒரு பொரியல் செய்தால் அதில் நமக்கு எவ்வளவு சத்து கிடைக்கும். சொல்லவே முடியாது. அந்த அளவிற்கு ஹெல்தியான ஒரு பொரியல் ரெசிபியை இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். மிஸ் பண்ணாதீங்க. உங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாருக்கும் வாரத்தில் ஒரு முறையாவது இந்த பொரியலை செய்து கொடுங்க. சரி, வாங்க அந்த ரெசிபியை தெரிந்து கொள்வோம்.

இந்த பொரியல் செய்வதற்கு நாம் கஷ்டப்பட எதுவுமே கிடையாது. ஆனால் வாழைப்பூவையும், முருங்கைக் கீரையும் கொஞ்சம் முன்கூட்டியே வாங்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். மீடியம் சைசில் இருக்கக்கூடிய ஒரு வாழைப்பூ, இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக்கீரை நமக்கு தேவைப்படும்.

- Advertisement -

சுத்தம் செய்த வாழைப்பூவை பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சம் மோரை கலந்து வெட்டி வைத்திருக்கும் வாழைப்பூவை மோர் கலந்த இந்த தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழைப்பூ கருத்துப் போகாமல் இருக்கும்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன், இரண்டாக கிள்ளிய வரமிளகாய் – 4, இந்த பொருட்களை சேர்த்து முதலில் நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன், சேர்த்து வெங்காயத்தை கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி, வெட்டி வைத்திருக்கும் வாழைப்பூவை கடாயில் சேர்த்து மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு இந்த வாழைப்பூவை வேக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் தேவைப்படாது. வாழைப் பூவில் இருந்து தண்ணீர் விடும்.

வாழைப்பூ வேகட்டும். அதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், சோம்பு – 1/2 ஸ்பூன், சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கடாயில் இருக்கும் வாழைப்பூ பாதி வெந்து வந்ததும், மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை ஊற்றி நன்றாக கலந்து, ஒரு மூடி போட்டு மீண்டும் 2 நிமிடங்கள் போல வேக வைத்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக 2 கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை வாழைப்பூ பொரியலில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, சூட்டிலேயே கலந்து விட்டுக் கொண்டே இருந்தால், முருங்கைப்பூ மூன்றிலிருந்து நான்கு நிமிடத்திற்குள் நன்றாக வெந்து வந்துவிடும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். சுடச்சுட பரிமாறுங்கள். சுவைத்துப் பாருங்கள். இதைவிட ஆரோக்கியமான சுவைமிகுந்த வேறு ஏதேனும் பொரியல் உண்டா என்ன?

பின்குறிப்பு: இந்த பொரியலில் தேங்காய்க்கு பதிலாக பருப்பு சேர்த்தும் செய்யலாம். வர மிளகாய்க்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்தும் பொரியலை செய்தால் சுவையாக இருக்கும். உங்கள் விருப்பம் போல நீங்கள் விரும்பிய வகையில் இந்த பொரியலை மாற்றி செய்தும் சுவைத்துப் பாருங்கள். ஆனால் எப்படி செய்தாலும் வாழைப் பூவின் மகத்துவமும் முருங்கைக் கீரையின் மகத்துவமும் மாறப்போவது கிடையாது. மிஸ் பண்ணாம வாரத்திற்கு ஒரு நாளாவது இந்த பொரியலை உணவோடு சேர்த்துக் கொள்வது நம் ஆரோக்கியத்துக்கு நல்லது.

- Advertisement -