ஒரு மிளகாய் கூட போடாத கார சட்னி எங்கேயாவது கேள்விப்பட்டு இருக்கீங்களா? 5 நிமிடத்தில் இதோ நாவை சுண்டி இழுக்கக்கூடிய சுவையில், இட்லி தோசைக்கு பக்கவான கார சட்னி ரெசிபி.

kara-chutney
- Advertisement -

அப்படியே நாக்கை சுல்லுன்னு இழுக்கக்கூடிய ஒரு கார சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றி தான் இன்றைய பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம். இட்லி தோசைக்கு பெரும்பாலும் இந்த கார சட்னி செம்மையான சைடு டிஷ்ங்க. வரமிளகாய் வைத்து தான் பெரும்பாலும் நாம் காரச் சட்னி அரைப்போம். இன்று வரமிளகாயை வைத்து கார சட்னி அரைக்க போவது கிடையாது. கொஞ்சம் வித்தியாசமாக காரத்துக்கு மிளகாய் தூள் சேர்த்து சட்னி அரைக்க போகின்றோம். இதனுடைய சுவை ரொம்ப ரொம்ப சூப்பரா தாங்க இருக்கும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ருசி தரும் காரச் சட்னி எப்படி அரைப்பது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

மீடியம் சைஸில் இருக்கும் வெங்காயம் – 4, பெரிய தக்காளியாக பழுத்த தக்காளி பழம் – 2, வரமிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன், வரமல்லி தூள் – 1/4 ஸ்பூன், மல்லித்தழை – 1 கைப்பிடி அளவு, தேவையான அளவு – உப்பு இந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம் தக்காளியை ஓரளவுக்கு வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் பொடியாக நறுக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. (உங்கள் காலத்திற்கு ஏற்ப வரமிளகாயை கொஞ்சம் கூடவோ குறைத்து சேர்த்துக் கொள்ளலாம். ரொம்பவும் காரத்தை குறைத்து விட்டால் சட்னியில் நல்ல சுவை இருக்காது.)

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் முதலில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயங்களை போட்டு 2 நிமிடம் போல வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்தவுடன் வெட்டி வைத்திருக்கும் தக்காளி பழங்களையும் போட்டு இரண்டிலிருந்து மூன்று நிமிடம் வதக்கி இதில் எடுத்து வைத்திருக்கும் வர மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு, சரியாக 30 செகண்ட் வதக்கி அடுப்பை உடனே அணைத்து விடுங்கள்.

அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு மிளகாய் தூள் தனியா தூள் போடுங்கள். அப்போதுதான் இந்த மிளகாய் தூள் கருகாமல் இருக்கும். இல்லையென்றால் அடிப்பிடித்து கருகிய வாடை வந்துவிடும். அடுப்பை அணைத்த பின்பு அந்த சூட்டிலேயே ஒரு கைப்பிடி எடுத்து வைத்திருக்கும் கொத்தமல்லி தழையை போட்டு, நன்றாக கலந்து அப்படியே ஆற வைத்து விடுங்கள். இந்த சட்னிக்கு தேவையான அளவு உப்பையும் போட்டுக் கொள்ளுங்கள். இப்போது இந்த விழுது நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

- Advertisement -

ரொம்பவும் தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது. இந்த சட்னி கொஞ்சம் திக்காகத்தான் இருக்க வேண்டும். அரைத்த சட்னியை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ‌இதற்கு ஒரு சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டும். இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெயில் கடுகு, உளுந்து, கருவாப்பிலை, பெருங்காயம், தாளித்து அடுப்பை அணைத்துவிட்டு இந்த சட்னியை கடாயில் ஊற்றி ஒரு முறை கலந்து விட்டீர்கள் என்றால், அருமையான காரச் சட்னி தயார்.

இதையும் படிக்கலாமே: முதுகு வலி, இடுப்பு வலி, முட்டி கால் வலி, எலும்பு தேய்மானம், முடி உதிர்வு பிரச்சினை அனைத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமா? தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த பால் 1 டம்ளர் குடிங்க.

இதற்கு நீங்கள் தனி மிளகாய் தூள் பயன்படுத்த வேண்டும். மிகக் குறைந்த அளவில் வரமல்லி தூள் சேர்க்கும் போது நல்ல வாசம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்பெஷல் கார சட்னியை சுடச்சுட இட்லி பக்கத்தில் வைத்து சாப்பிட்டு பாருங்கள். வேரளவில் டேஸ்ட் இருக்குங்க. ரெசிபி மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -