இப்படி ஒரு சுவையில் வாழைக்காயை வைத்து ஒரு பொரியலை வாழ்நாளில் சுவைத்திருக்க மாட்டீங்க. முற்றிலும் வித்தியாசமான சுவையில் வாழைக்காய் கார கறி ரெசிபி இதோ உங்களுக்காக.

varuval
- Advertisement -

இதை வாழைக்காய் கறி, வாழைக்காய் வறுவல், வாழைக்காய் பொரியல் என்று எந்த பெயர் வைத்து வேண்டுமென்றாலும் நாம் சொல்லலாம். வீட்டில் வாழைக்காய் இருந்தால் யோசிக்காமல் ஒரு முறை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. எந்த வகை சாதத்திற்கும் இந்த ரெசிப்பி சைட் டிஷ் ஆக சூப்பராக பொருந்தும். வாங்க நேரத்தை கடத்தாமல் அருமையான வாழைக்காய் வறுவல் எப்படி செய்வது என்று பார்த்து விடுவோம்.

செய்முறை

முதலில் மீடியம் சைஸில் இருக்கும் இரண்டு வாழைக்காயை தோல் சீவி க்யூப் வடிவத்தில் வெட்டி தண்ணீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் 1/2 ஸ்பூன், சோம்பு 1/2 ஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் 10 பல், விதையை நீக்கிய வர மிளகாய் 5, கருவேப்பிலை 2 கொத்து, நறுக்கிய பெரிய வெங்காயம் 1, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்கி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய தேங்காய் பல் 10 லிருந்து 15 போட்டு மீண்டும் லேசாக வதக்கவும்.

அடுத்தபடியாக 1/2 இன்ச் இஞ்சி, தோல் நீக்கிய பூண்டு 3, இடுக்கையில் போட்டு நன்றாக நசுக்கி இதில் சேர்க்கவும். அதையும் கொஞ்சம் பச்சை வாடை போக வதக்கி விடுங்கள். பிறகு மல்லித்தூள் 1 ஸ்பூன், மிளகுத்தூள் 1/2 ஸ்பூன், மிளகாய்த்தூள் 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கரம் மசாலா 1/2 ஸ்பூன், போட்டு எல்லா மசாலா பொருட்களையும் ஒரு முறை நன்றாக கலந்து விட்டு, நறுக்கி வைத்திருக்கும் வாழைக்காய் துண்டுகளை இதில் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

மசாலா பொருட்கள் எல்லாம் வாழைக்காயில் சேர்ந்து வந்ததும் இறுதியாக தண்ணீர் தெளித்து கலந்து விட்டு ஒரு மூடி போட்டு வாழைக்காயை வேக வைக்க வேண்டும். வாழைக்காயை கையில் எடுத்து மசித்துப் பார்த்தால் நசுங்க வேண்டும். அந்த அளவுக்கு வாழைக்காய் வெந்ததும் இறுதியாக தேங்காய் துருவல் 1 ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி, கலந்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: இப்படி மட்டும் மீனை பொரிச்சீங்கனா வெறும் நாலு ஸ்பூன் எண்ணெய் போதும். மசாலா கொஞ்சம் கூட உதிராம நல்லா மொறு மொறுன்னு பொரிச்சி எடுத்திடலாம். நாலு நாள் ஆனாலும் டேஸ்ட் மறக்காம இருக்கும்.

மணக்க மணக்க கம கமன்னு ஒரு வாழைக்காய் கறி தயார். இதை சுவைக்கும் போது நாவிற்கு அத்தனை ருசி தரும். யாருமே இதை வேண்டாம் என்று சொல்ல மாட்டாங்க. பிடித்தவர்கள் மிஸ் பண்ணாம கட்டாயம் இந்த ரெசிபி முயற்சி செய்து பார்க்கவும்.

- Advertisement -