முடி கொட்டுவதை தடுத்து நிறுத்தும் குமட்டிக்காய் அழகு குறிப்பு

hair
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் வயதானவர்களுக்கு மட்டுமல்ல, சிறு வயதில் இருப்பவர்களுக்கு கூட தலையில் முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. அதனால் சின்ன வயதிலேயே தலையில் அங்கே ஆங்காங்கே வழுக்கையாக வெளியில் தெரிகிறது. இதனால் நிறைய ஆண்கள் பெண்கள் இளவையதினர் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். அழகு என்றால் அதில் முதன்மை இடத்தில் இருப்பது தலைமையில் இருக்கக்கூடியது இந்த முடி தான்.

அதுவே கொட்டுது என்றால் என்ன செய்வது. இதை சரி செய்ய செயற்கையான வைத்தியம் நிறைய இருக்கிறது. ஆனால் அந்த காலத்திலேயே இயற்கையான முறையில் சித்தர்கள் சொல்லி வைத்த இந்த அழகு குறிப்பை பற்றி உங்களுக்கு தெரியுமா. தெரிஞ்சி வச்சுக்கோங்க. தேவை என்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு இந்த அழகு குறிப்பு செட் ஆச்சு, முடி வளர்கிறது என்னும் பட்சத்தில் இதை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -

கொட்டும் முடியை நிறுத்தக்கூடிய குமட்டிக்காய்

இந்த குமட்டிக்காய் கிராமப்புறங்களில் நிறைய கிடைக்கும். நீங்கள் நகர் புறங்களில் இருந்தால் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்ளலாம். இது பார்ப்பதற்கு குட்டி தர்பூசணி போல இருக்கும். பச்சை நிறத்தில் மஞ்சள் நிற கோடுகளை கொண்டது. இதில் ரொம்ப ரொம்ப கசப்பு தன்மை அதிகமாக இருக்கிறது.

வேப்பிலைக்கு இணையான கசப்பு என்று கூட சொல்லலாம். இந்த குமட்டி காயை எப்படி தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு காண பயன்படுத்த போகின்றோம் என்பதை பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம். குமட்டி காயை நன்றாக அரைத்து அந்த பேஸ்டை எடுத்து வழுக்கை உள்ள இடத்தில் தேய்த்தால் வழுக்கையில் ஒரு சில நாட்களில் முடி வளரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உங்களுடைய தலையில் இப்படி எங்கேயாவது வழுக்கை இருந்தால் அந்த இடத்தில் சின்னதாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த சின்ன இடத்தில் மட்டும் இந்த குமட்டிக்காய் பேஸ்ட்டை தடவி பாருங்கள். உங்களுக்கு எந்த சரும பிரச்சனையும் வரவில்லை.

இந்த குமட்டிக்காய் உங்களுடைய சருமத்திற்கு செட்டாகுது எனும் பட்சத்தில் வாரத்தில் மூன்று நாள் என்ற கணக்கில் இதை பயன்படுத்தி வர வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலையில் இந்த குமட்டி காய் பேஸ்ட்டை போடுங்க. அதேபோல ஒரு மாதம் இந்த குறிப்பை பின்பற்றி வரும்போது நல்ல ரிசல்ட் உங்களுக்கு தெரியும்.

- Advertisement -

சில பேருக்கு தலையில் நிறைய பொடுகு பேன் பிரச்சனை இருக்கும். அதற்கு இந்த குமட்டி காயை நன்றாக அரைத்து, அந்த கலவையை தலை முழுவதும் தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்து, ஐந்து நிமிடங்கள் கழித்து தலைக்கு ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு குளித்து விட்டால் பொடுகு பிரச்சனை உடனடியாக நீங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

முடி ஆரோக்கியமாக செழிப்பாக உதிராமல் வளர வேண்டும் என்றால், குமட்டிக்காய் எண்ணெயை கூட நாம் பயன்படுத்தலாம். முதலில் 250ml செக்கு தேங்காய் எண்ணெயை கடாயில் ஊற்றி வெதுவெதுப்பாக சூடு செய்யுங்கள். அதில் இரண்டு குமட்டி காய்களை நன்றாக அரைத்து போட்டு, மிதமான தீயில் சூடு செய்து 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

இது நன்றாக ஆறிய பிறகு எண்ணெயை மட்டும் வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து தினமும் தலைக்கு தடவி வந்தாலும் முடி ஆரோக்கியமாக வளரும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். அது மட்டுமல்லாமல் இந்த குமட்டி காயை அந்த காலத்தில் புண்களை ஆற்றவும் பயன்படுத்தி வந்தார்கள். சில பேருக்கு சருமத்தில் கொப்பளங்கள் சிரங்குகள் வரும் அல்லவா.

இதையும் படிக்கலாமே: முக சுருக்கம் நீங்கி இளமை தோற்றம் பெற உதவும் பூ.

அந்த காயம் ஆற வேண்டும் என்றாலும் இந்த குமட்டி காயை அரைத்து பூசி கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். மேலே சொன்ன இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -