வீடு 24 மணி நேரமும் வாசமாக இருக்க செலவே செய்யாம செம்ம ஐடியா இது. நிறைய காசு செலவு பண்ணி ரூம் பிரெஷ்னர் வாங்கினால் கூட இப்படி ஒரு வாசம் வீட்டில் இருக்காது.

smell
- Advertisement -

நூற்றுக்கணக்கில் காசு கொடுத்து ரூம் ஃபிரஷ்னர் வாங்கி அடித்து விட்டாலும் அந்த வாசனை ஒரு சில மணி நேரம்தான் வீட்டில் நிலைத்து இருக்கும். வீட்டில் அசைவம் சாப்பாடு சமைத்தாலோ, அல்லது வேறு ஏதாவது துர்நாற்றம் வீசினாலோ, ஈரத் துணியை காய போட்டாலும் அதை சரி கட்ட நாம் எல்லோரும் பயன்படுத்துவது ரூம் ஃபிரஷ்னர். இந்த செயற்கையான வாசனை சில பேருக்கு அலர்ஜியை கொடுக்கும்.

மூடி வைத்த சமையலறை, மூடி வைத்த பெட்ரூம், என்று இந்த இடங்களில் எல்லாம் வீசக்கூடிய வாசனையை தவிர்ப்பதற்கு நம் கையாலேயே ஒரு வாசனை பொடியை தயார் செய்யப் போகின்றோம். இது முதல் குறிப்பு, இரண்டாவதாக, பூஜை அறையை கோவிலாக மாற்றுவதற்கு ஒரு வாசம் நிறைந்த பொடியையும் தயார் செய்யப் போகின்றோம். அதுவும் எளிமையாக கிடைக்கக்கூடிய மலிவான பொருட்களை வைத்து தான். வாசம் நிறைந்த பயனுள்ள இரண்டு வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

- Advertisement -

வீடு வாசமாக இருக்க வீட்டிலேயே ரூம் பிரெஷ்னர் தயாரிப்பது எப்படி:
இதற்கு நமக்கு தேவையான பொருள். பேக்கிங் சோடா, தசாங்க பவுடர், அக்தர். ஒரு சின்ன கிண்ணத்தில் பேக்கிங் சோடா 1 டேபிள் ஸ்பூன், தசாங்கம் பவுடர் 1/2 ஸ்பூன், அக்தர் 2 சொட்டு விட்டு, இதை நன்றாக கலந்து திறந்தபடி இதை எந்த இடத்தில் வைத்தாலும் சரி, இதனுடைய வாசம் அந்த இடம் முழுவதும் நிரம்பி இருக்கும்.

உதாரணத்திற்கு இரவு நேரத்தில் சமையலறையில் எல்லாம் இதை வைத்து விட்டால், மறுநாள் காலை சமையலறைக்குள் செல்லும்போது நம்முடைய மனதே லேசாகும் அளவிற்கு சமையல் அறை முழுவதும் இந்த வாசம் நிரம்பி இருக்கும். அசைவம் சமைத்த வாடையெல்லாம் சுத்தமாக இருக்கவே இருக்காது.

- Advertisement -

நான் தயார் செய்த இந்த பொடியை சின்ன டிஷ்யூ பேப்பரில் வைத்து சின்ன மூட்டையாக கட்டி பீரோவில் வைக்கலாம். புக் செல்பில் வைக்கலாம். கட்டிலுக்கு அடியில் வைக்கலாம். இப்படி எல்லாம் செய்தால் அந்த இடத்தில் துர்நாற்றம் வீசவே வீசாது. உங்கள் பீரோவில் இருக்கும் துணிமணிகள் எல்லாம் எப்போதும் வாசமாகவே இருக்கும். இந்த சின்ன டிப்ஸ் உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பார்க்கலாம்.

பூஜை அறையை கோவிலாக மாற்றும் வாசனை பொடி:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சோம்பு – 2 ஸ்பூன், ஏலக்காய் – 10, சந்தனம் – 3, பச்சை கற்பூரம் – 1 சின்ன துண்டு, ஜவ்வாது – 1/4 ஸ்பூன், விரலி மஞ்சள் – 2, இந்த பொருட்களை எல்லாம் போட்டு நைசாக பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை அரைக்கும் போதே நமக்கு இந்த பொடியின் வாசம் மனதை மயக்கும்.

- Advertisement -

அந்த அளவுக்கு சூப்பரான நறுமணம் வீசும் இந்த பொடியை சின்ன சின்ன கிண்ணத்தில் கொஞ்சமாக போட்டு, பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் திறந்தபடி வைத்து விட்டால், இந்த வாசம் பூஜையறை முழுவதும் நிரம்பி இருக்கும். வரவேற்புறையிலும் இந்த பொடியை திறந்தபடி வைக்கலாம். அரைத்த உடன் இந்த பொடியை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதை தேவைப்படும் போது ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு பன்னீர் அல்லது தண்ணீர் ஊற்றி குழைத்து பூஜையறையில் பூஜை ஜாமான்கள், சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்கும் போது, மஞ்சளுக்கு பதில் இதை வைத்து, அதற்கு மேலே குங்குமம் வைத்துப் பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: தசாங்கத்தை உங்கள் வீட்டில் ஏற்றுவதற்கு முன்பு ஒரு முறை இதை பாருங்க. பிறகு தசாங்கத்தை வாங்கி வந்து அப்படியே பூஜை அறையில், வைத்து ஏற்றவே மாட்டீங்க.

உங்கள் பூஜை அறையை அத்தனை மங்களகரமாக மாறிவிடும். வாசல் படிக்கு மஞ்சள் குங்குமம் வைப்போம் அல்லவா. அதற்கும் இந்த வாசனைப் பொடி பயன்படுத்தலாம். தெய்வீக நறுமணம் உங்கள் வீட்டில் எப்போதும் இருக்கும். மேலே சொன்ன பயனுள்ள இந்த இரண்டு வீட்டு குறிப்புகள் உங்களுக்கு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பார்க்கலாம்.

- Advertisement -