வாழ்க்கையில் அடி மேல் அடி வாங்கி துன்பப்பட்டு கொண்டு இருப்பவர்களா நீங்கள்? காரணம் என்ன வென்று தெரியாமலே கஷ்டப்படுபவர்களா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.

veerabathirar sad man
- Advertisement -

ஒருவர் வாழ்க்கையில் கஷ்டம் நேர்கிறது என்றால் அவர்களுடைய கர்ம வினைகளை காரணம் என்று கூறப்படுகிறது. சிலருக்கு தாங்கள் கஷ்டப்படுவதற்குரிய காரணம் என்னவென்று தெரியும். சிலருக்கோ எந்த காரணமும் இன்றி தாங்கள் கஷ்டப்பட்டு கொண்டே இருப்பதாக உணர்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்குரிய வழிபாட்டு முறையை தான் இந்த ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது நாம் செய்யும் நன்மைகளுக்கு மட்டுமல்ல நாம் செய்யும் தீமைகளுக்கும் பொருந்தும். இப்பொழுது நாம் என்ன செய்கிறோமோ அதை தான் பிற்காலத்தில் நாம் அனுபவிப்போம் என்று அனைத்து மதத்திலும் கூறப்படுகிறது. இதற்கு நேர் மாறாக தனக்குத் தெரிந்த வரையில் பிறருக்கு நன்மைகளை மட்டுமே செய்து இன்றளவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நபர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை காப்பாற்ற வரும் தெய்வமாக கருதப்படுபவர் வீரபத்திரர்.

- Advertisement -

சிவனின் அக்னியில் இருந்து தோன்றியவராக கருதப்படுபவரே அகோர வீரபத்ர சுவாமி. இவரை அக்னி வீரபத்திரர் என்றும் அழைப்பர். மேலும் இவர் சிவனின் மைந்தனாகவும் கருதப்படுகிறார். சிவனின் ஆணைக்கிணங்க தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மை செய்வதற்காகவே பூலோகத்தில் வீற்றிருக்கிறார். இவரை நாம் பெரிய ஆலயங்களிலும் காணலாம். கிராமத்தில் இருக்கக்கூடிய காவல் தெய்வ ஆலயங்களிலும் காணலாம்.

வீரபத்திரரை ஞாயிற்றுக்கிழமையிலும், செவ்வாய்க்கிழமையிலும் வழிபடலாம். மேலும் பௌர்ணமி தினத்தில் வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது. இவருக்கு மிகவும் பிடித்த நிறமாக கருதப்படுவது தூய்மையான வெள்ளை நிறம். இவருக்கு வெண்மையான மலர்கள் தான் பிடிக்கும். அதாவது நந்தியாவட்டம், மல்லிகை, அல்லி, முல்லை போன்ற மலர்கள். இவருக்கு புளியோதரை, உளுந்த வடை, தயிர் சாதம் போன்றவற்றை நெய்வேத்தியமாக வைக்கலாம்.

- Advertisement -

வீரபத்திரரை நம் வீட்டில் வணங்கும் முறை:
வீட்டில் ஒரு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அந்த தீபமானது கிழக்கு முகம் பார்த்தவாறு இருக்க வேண்டும். அந்த தீபத்தில் நாம் வீரபத்திரரை நினைத்து “வீரபத்திரரே தாங்கள் இந்த தீபத்தில் எழுந்தருளி எங்களுக்கு நல்வாழ்வு தர வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு அந்த தீபத்தில் அவரை ஆவாகனம் செய்ய வேண்டும். பிறகு வீரபத்திரரின் போற்றிகளை கூறி வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அவருக்கு பிடித்த நெய்வேத்தியத்தை வைத்து தூப தீப ஆராதனை காட்ட வேண்டும். எதிரிகளால் தீராத தொல்லை ஏற்பட்டு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் நபர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் வீரபத்திரரை செவ்வரளி மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பதன் மூலம் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வீரபத்திரரை வழிபடுவதால் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளையும் அவர் அகற்றுவார். பயத்தை நீக்கி தன்னம்பிக்கையை ஏற்படுத்துவார். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தையும் நீக்குவார். காரணமே இன்றி கஷ்டப்படுபவர்களின் கஷ்டங்களையும், துயரங்களையும் தீர்த்து வைப்பார். வாழ்க்கையில் முன்னேற நல்ல வழி காட்டுவார். தீராத கடனையும் தீர்த்து வைப்பார். எதிர்மறை சக்திகளால் ஏற்பட்ட துயரங்களில் இருந்து நம்மை காப்பாற்றுவார். அவரை வணங்கினால் எந்த விதமான எதிர்மறை சக்திகளும் நம்மை அண்டாது என்பதே உண்மை.

இதையும் படிக்கலாமே: சங்கு தீபத்தை இப்படி ஒரு முறை ஏற்றினால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைப்பதோடு பண மழையில் நனைந்து சகல சௌபாக்கியத்துடன் வாழலாம்.

வீரபத்திரர் என்ற பெயருக்கேற்ப வீரமான தெய்வம் நம்மை பத்திரமாக காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் அவரை நாம் வணங்கி நம் வாழ்வில் நன்மைகள் பல அடைவோம்.

- Advertisement -