தினமும் பயன்படுத்தும் பொருட்களில் இந்த பொருட்கள் மட்டும் இரும்பினால் இருக்கக் கூடாது தெரியுமா? இரும்பு ஆபத்தை தருமா?

iron-cot-sani-bagavan
- Advertisement -

இரும்பு என்னும் உலோகம் சனி பகவானுக்கு உரியது என்பதால் அதில் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. நீங்கள் அனுதினமும் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் இரும்பு அவ்வளவாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வது நல்லது. அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் இந்த பொருட்கள் இரும்பினால் அல்லாமல் இருந்தால் ரொம்பவே நல்லது என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அவை என்னென்ன? என்பதை தொடர்ந்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

பொதுவாகவே இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அடிக்கடி பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அதிலும் சமையல் பாத்திரங்கள் இரும்பினால் அல்லாமல் இருப்பது ரொம்பவே நல்லது. தோசைக்கல், வடசட்டி போன்றவை எல்லாம் இரும்பினால் ஆனதாக பயன்படுத்துவது உண்டு. மற்றபடி தண்ணீர் செம்பு, குடம் போன்றவற்றை இரும்பினால் ஆனதாக இல்லாமல் இருப்பது நல்லது. தண்ணீர் பயன்படுத்தும் இந்த பாத்திரங்கள் எல்லாம் மண்ணால் செய்யப்பட்டதாக இருப்பது தான் ஆரோக்கியம் தரும் மற்றும் குடும்பத்திற்கும் நல்லது.

- Advertisement -

பிளாஸ்டிக் குடங்களை பயன்படுத்துவதை விட செம்பு, பித்தளை போன்றவற்றில் தண்ணீரை நிரப்பி பயன்படுத்துவது ரொம்பவே நல்லது. குடும்பத்திற்கு சுபீட்சத்தை கொடுக்கக் கூடிய அம்சமாக இருக்கிறது. இவற்றை கேஸ் சிலிண்டர் மீது வைத்து பயன்படுத்தக்கூடாது. சிலர் கேஸ் சிலிண்டர் மீதுதான் குடத்தை வைத்திருப்பார்கள். இதுபோல செய்யவே கூடாது. வாயுவுடன் இந்த பொருட்கள் சேரக்கூடாது. பீரோ, கட்டில், ட்ரெஸ்ஸிங் டேபிள் போன்றவை மரத்தினால் ஆனதாக இருக்க வேண்டியது நல்லது. இந்த பொருட்கள் எல்லாம் சிலர் இரும்பினால் செய்யப்பட்டதாக வாங்கி வைத்திருப்பார்கள். கனமான இரும்பு பொருட்கள் வீட்டில் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல, எனவே இந்த மாதிரியான பொருட்களை மரத்தினால் செய்யப்பட்டதாக வாங்கி வைப்பது தான் ஆரோக்கியமானதும் கூட.

இரும்பு சம்பந்தப்பட்ட கனமான பொருட்களை சமையலறையில் வைக்கக்கூடாது. அதேபோல கட்டிலுக்கு அடியிலும் வைக்க கூடாது. இது கணவன் மனைவிக்குள் தேவையில்லாத சண்டை, சச்சரவுகளையும், எதிர்மறை ஆற்றல்களையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் துருப்பிடிக்காமல் இருக்க வேண்டும். துருப்பிடித்த இரும்பு பொருட்கள் வீட்டில் இருந்தால் அதுவும் ஆகாது என்பார்கள்.

- Advertisement -

இரும்பு பொருட்கள் இருந்த இடங்களில் ஒரு சில கரி துண்டுகளை போட்டு வைக்க வேண்டும் அல்லது சாக்பீஸ் போன்றவற்றை போட்டு வைத்தால் ஈரப்பதத்தை எல்லாம் உரிந்து வைத்துக் கொள்ளும். இதனால் இரும்பு பொருட்கள் துருப்பிடிக்காமல் நீண்ட காலம் பாதுகாப்பாக இருக்கும். இரும்பு பொருட்கள் வைக்கும் பொழுது பாதுகாப்பாக வைக்க வேண்டும். இரும்பு பொருட்களை வாகனங்களில் கொண்டு பயணிக்கும் நிலைமை ஏற்பட்டால் அப்பொழுதும் நீங்கள் சனி கவசமாக கையில் ஒரு கருப்பு கயிறை கட்டிக் கொண்டு வாகனம் ஓட்டினால் பாதுகாப்பானது.

இதையும் படிக்கலாமே:
சமையலறையில் உங்கள் வீட்டு அரிசி மூட்டையில் எப்போதுமே இந்த 2 பொருள் இருக்கட்டும். என்றென்றும் உங்களுக்கு அளவில்லா ஐஸ்வரியம் கிடைக்கும்.

வீட்டில் இருக்கக்கூடிய பூஜை பொருட்கள் அனைத்தும் பித்தளை அல்லது செம்பினால் ஆனதாக இருக்கலாம். கூடுதலாக வெள்ளியால் ஆன பொருட்களை கூட வைத்துக் கொள்ளலாம் ஆனால் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது. முழுமையாக இரும்பு கலக்கப்படாத பூஜை பொருட்களை பயன்படுத்தினால் தான் நல்லது. இவற்றையெல்லாம் கவனித்து இரும்பை பாதுகாப்பாக கையாண்டால் நிறைய நன்மைகள் நடக்கும்.

- Advertisement -