இந்த 5 விஷயங்களை உங்களுடைய வீட்டில் கடைப்பிடித்தால், அழியா ஐஸ்வர்யத்தை பெற்று விடலாம். கஷ்டம் நஷ்டம் என்ற வார்த்தைக்கு உங்கள் வீட்டில் இடம் இருக்காது.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

கஷ்டமும் நஷ்டமும் சேர்ந்து இருப்பது தான் நம்முடைய வாழ்க்கை. இருப்பினும் நமக்கு வரக்கூடிய கஷ்ட நஷ்டங்களை எதிர்கொள்ளும் அளவிற்கு நமக்கு சக்தி இருக்க வேண்டும். கஷ்டமும் நஷ்டமும் விருந்தாளி போல வந்து போகலாமே தவிர, நிரந்தரமாக அது நம் வீட்டில் குடியிருக்கக் கூடாது. சரி கஷ்ட நஷ்டத்தை நம் வீட்டில் தங்க விடாமல் தடுக்க நாம் என்னென்ன விஷயங்களை எப்படி கடைப்பிடிக்க வேண்டும். தெரிந்து கொள்வோமா.

முதலில் நம்முடைய வரவேற்பறையில் நாம் அடிக்கடி பார்க்கூடிய இடத்தில் ஆடை ஆபரணங்களுடன் இருக்கும் பெருமாளும் மகாலட்சுமி தாயாரின் படம் இருக்கவேண்டும். இருவரும் சேர்ந்து இருக்கும்படி ஒரு பிரம்மாண்டமான படம் கிடைத்தால் அதை கொண்டு வந்து உங்கள் வரவேற்பறையில் மாட்டுங்கள். குறிப்பாக உங்கள் வீட்டிற்குள் நுழைபவர்கள் முதன்முதலில் வந்தவுடன் அவர்களுடைய கண்களில் இந்த படம் தெரிய வேண்டும். அப்படி மாட்டி வையுங்கள். இது உங்களுடைய வீட்டிற்கு ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய விஷயம்.

- Advertisement -

இரண்டாவது, அழகான உருளி. அதில் நிரம்ப நிரம்ப தண்ணீர். அந்த தண்ணீர் மணப்பதற்கு அதில் பச்சை கற்பூரம். அந்தத் தண்ணீரின் மேலே வண்ணவண்ண பூக்களை மிதக்கவிட்டு, அதில் ஒரு துளசி இலையைப் போட்டு வரவேற்பறையில் இந்த பெருமாள் லட்சுமி படத்திற்கு கீழே வைத்து விடுங்கள். பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கும். காண கண் கோடி தேவை. இது உங்கள் வீட்டிற்கு ஐஸ்வர்யத்தை கொட்டிக் கொடுக்கும்.

perumal1

மூன்றாவது விஷயம். நிலை வாசல்படியில் மஞ்சள் குங்குமம் கட்டாயம் இருக்கவேண்டும். அந்த மஞ்சள் குங்குமம் கலைந்தோ அல்லது தூசி படிந்து இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதை துடைத்து விட்டு உடனடியாக புதியதாக மாற்றி விடுங்கள்.

- Advertisement -

நான்காவது விஷயம். நிலை வாசப்படி என்றுமே அசுத்தமாக இருக்க கூடாது. அதே சமயம் நிலை வாசல்படி சட்டமாக இருக்கட்டும், கதவாக இருக்கட்டும். அது விரிசல் விட்டு பழுதடைந்து இருக்கக்கூடாது. நிலை வாசல் கதவை மூடும் போதும் திறக்கும் போதும் ஒரு விதமான கீச்சு சத்தம் கேட்கவே கூடாது.

nilai-vasal

ஐந்தாவது விஷயம். உங்களுடைய நிலை வாசல் படியில் வேப்பிலையோ, மாஇலையோ ஏதாவது ஒரு இலையை கட்டி தொங்கவிட வேண்டும். அந்த இலைகள் காய்ந்தாலும் பரவாயில்லை. பத்து நாட்களுக்கு ஒருமுறை மாற்றினால் கூட போதுமானது. நிலைவாசல் சட்டத்தில் எக்காரணத்தைக் கொண்டும் ஆணியை அடித்து வைக்க வேண்டாம். அப்படியே அதில் ஆணி இருந்தால் அதைப் பிடுங்கி விட்டு அந்த ஓட்டையை கொஞ்சம் மஞ்சள் வைத்து அடைத்து விடுங்கள். நிலைவாசல் சட்டத்திற்கும் மேல் உள்ள சுவற்றில் தான் ஆணி அடிக்க வேண்டும்.

uruli

மேல் சொன்ன இந்த விஷயங்களைத் தவிர தினம் தோறும் பூஜை அறையில் தீபம் ஏற்றி வாசனை மிகுந்த சாம்பிராணி வத்தி ஏற்றி வைத்து விட்டாலே போதும். உங்களுடைய வீட்டில் கஷ்டம் நஷ்டத்திற்கு இடமிருக்காது. வீட்டை சுத்தமாக கூட்டி உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை அழகாக அடுக்கி அந்தந்த இடத்தில் வைத்தாலே போதும். வேறு என்ன வேணும். மனநிம்மதி உங்களிடம் நிரந்தரமாக குடிகொள்ளும். மேல் சொன்ன விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள் மன நிம்மதி தானாக தேடி வரும்.

- Advertisement -