குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையா? குலதெய்வத்தை வீட்டிலிருந்தபடியே முறையாக இப்படி வழிபாடு செய்தால் குலதெய்வமே உங்கள் வீடு தேடி வரும்.

kalasam-kuladheivam
- Advertisement -

கடந்த 2 வருடங்களாக நிறைய பேரால் நீண்ட தூர பயணம் செய்து தங்களுடைய குலதெய்வத்தை தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. காரணம் லாக் டவுன் பிரச்சனையும் ஒன்று. இந்த சமயத்தில் உங்களுடைய வீட்டில் குலதெய்வத்தை நினைத்து எப்படி பூஜை செய்வது. குலதெய்வத்தை வீட்டிற்குள் எப்படி அழைப்பது என்பதைப் பற்றிய ஒரு சுலபமான வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

வீட்டில் குலதெய்வ பூஜை செய்வது எப்படி

இந்த பூஜையை, உங்களுடைய குலதெய்வத்திற்கு எந்த நாள் சிறந்த நாளோ, அந்த நாளில் செய்வது சிறப்பு. அம்மன் தெய்வமாக இருந்தால் வெள்ளிக்கிழமை. முனீஸ்வரன் அய்யனார் சாமி ஆக இருந்தால் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யலாம். இப்படி உங்கள் குலதெய்வத்துக்கு உகந்த நாளாக பார்த்து நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். முடிந்தால் உங்கள் அங்காளி பங்காளிகளை உங்களுடைய சொந்த காரர்களை இந்த பூஜைக்காக உங்களுடைய வீட்டிற்கு அழைப்பது மிக மிக சிறப்பு வாய்ந்தது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்து இந்த பூஜையை செய்தால் குலதெய்வம் மனம் மகிழ்ச்சி அடையும்.

kuladheivam

பூஜை அறையில் குலதெய்வம் திருவுருவப் படத்தை எடுத்து பிரதானமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த குலதெய்வத்திற்கு முன்னால் ஒரு வாழை இலையை விரித்து பச்சரிசியை பரப்பி அதன் மேல் ஒரு கலச சொம்பினை வைக்கவேண்டும். கலசத்துக்கு உங்கள் வீட்டு வழக்கப்படி மஞ்சள் குங்கும பொட்டு அல்லது விபூதி பட்டை போட்டு பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த சொம்பில் தண்ணீரை ஊற்றுங்கள். சுத்தமான நல்ல தண்ணீரை நிரப்ப ஊற்றி அந்த தண்ணீரில் துளசி இலைகளையும், ஒரு எலுமிச்சம் பழத்தையும், கொஞ்சம் மஞ்சள் பொடியையும் கலந்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக இந்த சொம்புக்கு உள்ளே இருக்கும் தண்ணீரில் மா இலைகள் 3 போட்டு விட்டு, அதன் மேலே ஒரு தேங்காயை நிறுத்தி விடுங்கள். தேங்காய்க்கு மஞ்சள் குங்குமப் போட்டு கட்டாயம் இடவேண்டும். இப்போது உங்களுடைய குலதெய்வத்தை அழைத்து இந்த கலசத்தில் ஆவாகனம் செய்ய போகிறீர்கள்.

kalasam

கலசத்தை தயார் செய்து விட்டு குலதெய்வத்தை மனதார நினைத்து, மண் அகல் தீபம் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு ஏற்றி வைக்க வேண்டும். அதன் பின்பும் வாசனை மிகுந்த சாம்பிராணி குலதெய்வத்திற்கு மிகவும் உகந்தது. இந்த சாம்பிராணி தூபத்தின் புகையை வீடு முழுவதும் போட்டு விட்டு விடுங்கள். உங்கள் வீடு அப்படியே கமகமன்னு இருக்கணும்.

poojai

உங்கள் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் இந்த கலசத்தின் முன்பு அமர்ந்து குலதெய்வத்தின் பெயரை மனதார உச்சரியுங்கள். குலதெய்வத்தை அழையுங்கள். ‘எங்களால் குலதெய்வக் கோவிலுக்கு வர முடியாத சூழ்நிலை. ஆகவே எங்கள் வீட்டு குல தெய்வமே, நீ வந்து இந்தக் கலசத்தில் அமர்ந்து எங்களுடைய குடும்பத்திற்கு அருள்புரிய வேண்டும்’. என்று குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து மனமுருகி வேண்டுதல் வைத்தாலே போதும். குலதெய்வம் அந்த கலசத்தில் ஆவாகனம் ஆகி உங்களுக்கு உண்டான அருளாசியை கொடுத்துவிடும். இறுதியாக தீப ஆராதனை காண்பிக்க வேண்டும். உங்கள் குல தெய்வத்திற்கு எந்த பிரசாதம் உகந்ததோ அதை நீங்கள் நிவேதியமாக செய்து வைத்துக் கொள்ளலாம்.

sambrani-kuladheivam

காலை மாலை எப்போது வேண்டுமென்றாலும் இந்த பூஜையை நீங்கள் செய்யலாம். ஒருநாள் இரவு மட்டும் அந்த கலச சொம்பு வீட்டு பூஜை அறையில் அப்படியே இருக்கட்டும். கலச சொம்பில் இருக்கும் தண்ணீரை மறுநாள் செடியில் ஊற்றி விடுங்கள். எலுமிச்சம் பழத்தை வெட்டி சாறு பிழிந்து உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் குடித்து விடுங்கள். கலசத்தில் வைத்த தேங்காயை உடைத்து, அந்த தேங்காவில் இனிப்பு பலகாரம் செய்து, உங்கள் வீட்டில் இருப்பவர்கள் மட்டும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். கலச சொம்புக்கு கீழே இருக்கும் பச்சரிசியை எடுத்து பொங்கல் சமைத்துக் கொள்ளலாம். அவ்வளவு தாங்க. உங்க குல தெய்வத்தை தேடி நீங்கள் செல்லவில்லை என்றாலும் சரி, இந்த பூஜையை குலதெய்வத்தை நினைவுகூர்ந்து வீட்டில் செய்தால், உங்கள் குலதெய்வம் உங்கள் வீடு தேடி நிச்சயம் வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -