வற்றாத செல்வம் பெருக தை 1ஆம் தேதி வீட்டில் குறைவில்லாமல் நிறைவாக இருக்க வேண்டிய 10 பொருட்கள் என்ன தெரியுமா?

pot-water-salt-lakshmi
- Advertisement -

வற்றாத செல்வம் பெருக தை மாதத்தில் இந்த பொருட்கள் வீட்டில் குறைவில்லாமல், எப்போதும் நிறைவாக இருக்க வேண்டியது அவசியமாகும். மகாலட்சுமி வாசம் செய்யும் இந்த 10 பொருட்கள் வீட்டில் குறைவாக இருந்தால் அந்த வீட்டில் செல்வமானது அதிகம் சேராமல் அப்படியே தேங்கி நிற்கும். எனவே வற்றாத ஆறு போல உங்கள் வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சியும், செல்வமும் நிறைந்திருக்க எந்தெந்த பொருட்களை நிறைவாக வைத்திருக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முதலாவதாக அன்னபூரணி வாசம் செய்யும் அரிசி வைத்திருக்கும் பானையை நிறைவாக வைத்திருக்க வேண்டும். அரிசி குறைந்து இருந்தால் நீங்கள் அரிசி வைக்கும் பாத்திரத்தில் அரிசியை முழுவதுமாக நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அரிசியைப் போலவே பருப்பு வகைகளில் ஏதாவது ஒன்றை கட்டாயம் நிறைவாக வைத்திருக்க வேண்டும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு என்று உங்களிடம் எந்த பருப்பு வகையாக இருந்தாலும் ஏதாவது ஒன்றை மட்டும் நிறைவாக தழும்ப வைத்திருங்கள்.

- Advertisement -

மகாலட்சுமியின் ஸ்வரூபமாக விளங்கும் கல் உப்பு எப்பொழுதும் நிறைவாக இருக்க வேண்டும். இந்த பொங்கல் தினம் வெள்ளிக்கிழமையில் வந்துள்ளதால் இன்றைய நாளில் கல் உப்பை கடையில் புதிதாக வாங்கி நிறைவாக ஜாடியில் கொட்டி வைக்கலாம். இதனால் இல்லத்தில் செல்வமானது பன்மடங்கு பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. சர்க்கரை அல்லது வெல்லம்! சர்க்கரையை விட வெல்லத்தை எப்போதும் இல்லத்தில் நிறைவாக வைத்திருந்தால் செல்வ சேர்க்கை ஏற்படும். இனிக்க செய்யும் இந்த வெல்லத்தை இந்த நாளில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

குபேர பகவானுக்கு மிகவும் பிடித்த ஊறுகாயை குறைவில்லாமல் இந்த நாளில் வாங்கி வைப்பது செல்வ சேர்க்கையை உண்டு பண்ணும். குபேரன் ஒரு வீட்டில் வாசம் செய்ய வேண்டுமென்றால் அந்த வீட்டில் சுத்தமும், ருசியான ஊறுகாயும் இருந்தாலே போதும் என்பார்கள். எனவே ஊறுகாய் பாட்டில் ஒன்றை முழுவதுமாக நிரம்பியிருக்குமாறு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் எப்பொழுதும் குறையாமல் வைத்திருக்க வேண்டும். கடலை எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் என்று நீங்கள் எந்த எண்ணையை பயன்படுத்தினாலும் சரி, நீங்கள் ஒரு வகையான எண்ணெயை மட்டும் முழுவதுமாக நிறைந்து இருக்குமாறு வைத்திருக்க வேண்டும்.

மஞ்சள் மற்றும் குங்குமம் இந்த இரண்டும் எப்போதும் குறைவில்லாமல் நிறைந்து இருக்க வேண்டும். மஞ்சள், குங்குமம் நீங்கள் பாக்கெட்டாக வாங்கினாலும் அதனை ஒரு சிறிய கிண்ணத்தில் தான் பயன்படுத்த போகிறீர்கள் எனவே இல்லை என்று சொல்லாத அளவிற்கு மஞ்சள், குங்குமத்தை கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மங்கலப் பொருட்களான இந்த இரண்டு பொருளும் வீட்டில் எப்போதும் நிறைவாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு பானை தண்ணீராவது முழுதாக நிரம்பி இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். நிறைகுடம் இருக்கும் இல்லத்தில் செல்வ சேர்க்கை பன்மடங்கு பெருகும் என்கிற ஐதீகம் உண்டு. எனவே ஏதாவது ஒரு பானையில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்குமாறு கவனித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக செம்பு பாத்திரத்தில் தண்ணீரை இது போல் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவிலான செம்பு பானை ஆக இருந்தாலும் பரவாயில்லை. தண்ணீரை தளும்ப தளும்ப வைத்திருந்தால் வறுமை உண்டாகாது.

பசுவிலிருந்து பெறப்படும் சுத்தமான பசு நெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பொங்கலுக்கு பொதுவாக இந்த பொருட்களை எல்லாம் வாங்கி வைப்பது வழக்கம் தான் என்றாலும் வெள்ளிக்கிழமையுடன் கூடிய இந்த தைத்திருநாள் அன்று வீட்டில் குறைவில்லாமல் இருக்க வேண்டிய பொருட்களும் இவை தான். எனவே இந்த 10 பொருட்களும் இல்லை என்று கூறாமல், இந்நாளில் நிறைவாக வைத்திருங்கள் செல்வத்தை பெருக செய்யுங்கள்.

- Advertisement -