மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய

mahalakshmi dheepam
- Advertisement -

நம்முடைய வழிபாடுகளில் மிக முக்கியமானது வீட்டில் விளக்கு ஏற்றுவது தான். ஏனெனில் தீப ஒளியில் தெய்வம் நிறைந்திருப்பதாக ஐதீகம் உண்டு. ஆகையால் தான் எந்த ஒரு வழிபாட்டின் போதும் முதலில் தீபம் ஏற்றி வைத்து அதன் பின்னர் வழிபடுகிறோம். பெரும்பாலும் தெய்வங்களின் திருவுருவப்படங்கள் இல்லை என்றாலும் கூட, தீப சுடரையே நாம் தெய்வமாகவே பாவித்து வழிபடுகிறோம்.

அத்தகைய தீபத்தை நாம் ஏற்றும் பொழுது மிகவும் சிரத்தையுடன் ஏற்ற வேண்டும். ஏனெனில் அது தான் நம்முடைய குடும்பத்தின் அனைத்து நலன்களையும் காக்கக்கூடியதாக அமைந்துள்ளது. அப்படி ஏற்றக் கூடிய தீபத்தை பற்றியும் அந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியவற்றைப் பற்றியும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

மாலையில் விளக்கு ஏற்றும் முன் செய்ய வேண்டியவை

வீட்டில் ஏற்றக்கூடிய தீபமானது காலை, மாலை இரண்டு வேலையும் கட்டாயமாக ஏற்ற வேண்டும் அது தான் நல்லது. அதிலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு சில வீடுகளில் காலையில் விளக்கு ஏற்றாமல் மாலையில் மட்டும் ஏற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

எப்படி இருப்பினும் காலை தீபம் ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். ஆனால் மாலையில் தீபம் ஏற்றும் போதும் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

மாலையில் தீபம் ஏற்றும் முன்பு கட்டாயமாக வீட்டை பெருக்கி குப்பைகளை நாம் வெளியில் போட்ட பிறகு தான் ஏற்ற வேண்டும். பல வீடுகளில் காலையில் ஒரு முறை சுத்தம் செய்து விட்டு மாலையில் மறுபடியும் கூட்டுவது இல்லை அப்படி செய்யக் கூடாது. அதுமட்டுமின்றி நாம் பகல் வேளையில் தூங்கி இருந்தால் மறுபடியும் எடுத்து அப்படியே சென்று தீபம் ஏற்ற கூடாது. கட்டாயமாக குளித்து விட்டு தான் ஏற்ற வேண்டும்.

அதே போல் தான் அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் அன்றைய தினம் மாலையில் குளித்த பிறகு தான் தீபம் ஏற்ற வேண்டும். அசைவம் சாப்பிட்டு விட்டு தீபம் ஏற்றலாமா? என்ற சந்தேகம் வரும் தாராளமாக ஏற்றலாம் ஆனால் குளித்து விடுங்கள். அடுத்ததாக மாலையில் தீபம் ஏற்றும் போது நம்முடைய சமையலறையில் எச்சில் பாத்திரங்கள் இருக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

மதியம் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை சுத்தம் செய்த பிறகு தான் மாலையில் தீபம் ஏற்ற வேண்டும். அடுத்து மதியம் துணிகளை துவைத்து காய வைத்து அதை வீட்டில் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அப்படி துவைத்த துணிகளையும் அழுக்கு துணிகளையும் வீட்டில் இது போல போட்டு வைத்த பிறகு தீபம் ஏற்றக் கூடாது.

துவைத்த துணிகளை மடித்து எடுத்து வைத்து விடுங்கள். துவைக்க வேண்டிய துணிகளை அதற்குரிய இடத்தில் போட்டு வைத்து விட வேண்டும். காலை நேரத்தில் எப்படி தீபம் ஏற்றும்பொழுது நல்ல நறுமணம் மிக்க பக்திகளை ஏற்றி தீபம் ஏற்றுகிறோமோ அதே போல் மாலை நேரத்திலும் வழிபட வேண்டும்வீட்டின் நிலை வாசலிலும் தீபம் ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தங்க நகை அதிகமாக சேர நெல்லிக் கொட்டை பரிகாரம்

இப்படி செய்யும் இல்லத்தில் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக தங்கி அருள் புரிவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பதிவில் உள்ள தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் பின்பற்றி பலன் அடையலாம்.

- Advertisement -