இந்த ஆன்மீக குறிப்புகளை சரியாக பின்பற்றி வர எப்பொழுதும் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்

poojai
- Advertisement -

வீட்டில் செல்வம் தங்க பல வழிகள் உள்ளது அதிலும் சில வாஸ்து முறைப்படி சில விஷயங்களை செய்து வந்தால் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும் என்பதை கண் கூடாக பார்க்க முடியும்   வீட்டு உரிமையாளர் என்ற முதற்தகவலை நம் வீட்டிற்கு வரும் அனைவரும் பார்க்கும் வகையில், வாசலில் பெயர் பலகை வைப்பது நல்லது. இவ்வாறு வைப்பதன் மூலம் நாம் தான் வீட்டின் உரிமையாளர் என்ற, அந்த உணார்வு மற்றவர்கள் மனதில் வரும்போது அது நமக்கு பாசிடிவ் எனர்ஜியாக மாறி விடுகிறது.  வாருங்கள் இவ்வாறு வீட்டில் எப்பொழுதும் நேர்மறை சத்து நிறைந்திருக்க செய்ய வேண்டிய சில செயல்களைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தினமும் காலை மாலை என இரண்டு வேலையும் வீட்டில் விளக்கேற்றி வழிப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை நம்மால் உணர முடியும். மங்களம் தரும் ஸ்வஸ்திக், ஓம் போன்ற சின்னங்களை பூஜை அறையில் வைத்து வணங்கி வரும் போது மேலும் வளம் வரும்.

- Advertisement -

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று, பூஜை செய்து ஒரு எலுமிச்சை பழத்தை ஒரு டம்ப்ளரில் வைத்து வந்தால் நம் வீடு மற்றும் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் மீதான கண் திருஷ்டி விலகி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று வாரம் ஒரு முறை, ஒரு எலுமிச்சை பழத்தை மாற்றி வைப்பதும் நல்லது.

வீட்டு பூஜை அறையில் கங்கை நீர் கொண்ட கலசம் வைத்து வணங்கி வந்தால், அனைத்து விதமான கெட்ட சக்திகளையும் அகற்ற முடியும்…நீங்கா வளம் வந்தடையும். வீடு பரிசுத்தமானதாக விளங்கும்.  ஸசனிக்கிழமை மட்டும் இதை செய்துடுங்க.

- Advertisement -

ஒரே ஒரு எழுமிச்சை செய்யும் “ஐஸ்வர்யம்” பாருங்க. வீட்டில் செல்வம் தங்க பல வழிகள் உள்ளது அதிலும் சில வாஸ்து முறைப்படி சில விஷயங்களை செய்து வந்தால் வாழ்வில் பல நன்மைகள் நடக்கும் என்பதை கண் கூடாக பார்க்க முடியும்.

அதேபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிரம்ம முகூர்த்தத்தில் ஒரு மண் அகல் விளக்கில் உப்பு வைத்து, அதன் மீது சிறிய அகல் விளக்கில் அட்சதை சேர்க்க வேண்டும். அதற்கு மேல் ஒரு விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு வாரம் தோறும் செய்து வர வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் நமது வீட்டை விட்டு அகன்று விடும். வீட்டில் அனைத்து விதமான நேர்மறை சக்திகளும் நிறைந்துவிடும்.

- Advertisement -