மகாலட்சுமி உங்களை விட்டு விலகாமல் அன்றாட வாழ்வில் இருக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்

lakshmi
- Advertisement -

பல வருடங்கள் நாங்கள் நன்றாக இருந்தோம், ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்தோம், எங்களின் சொந்த பந்தங்களும் எங்களுடன் நன்றாக உறவு கொண்டிருந்தனர், எங்கள் பிள்ளைகளின் படிப்பு மிகவும் அருமையாக இருந்தது ஆனால் அவை அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. வாங்கிய சொத்துக்கள் அனைத்தும் கைவிட்டுப் போனது, சொந்த பந்தங்கள் ஆதரவு இல்லாமல் போய்விட்டனர், அதிக கஷ்டம் வந்து விட்டது, மனதில் மகிழ்ச்சி இல்லை இப்படி வேதனையில் மூழ்கி தங்களின் கஷ்ட காலத்தை நினைத்து வருந்திக் கொண்டு இருப்பவர்கள் அதற்கான காரணம் என்ன என்றும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். இவ்வாறான நிலைமை நமக்கு வருவதற்கு நாம் தான் காரணமாக அமைந்திருப்போம். நமது சிந்தனையை தெளிவாக வைத்திருந்தால் இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து நிச்சயம் விடுபட்டிருக்க முடியும். அதற்கு ஜோதிடம் வாயிலாக கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கின்றன. அவை என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cash

ஜோதிடத்தின் அடிப்படையில் ஒவ்வொரு கட்டத்தின் திசைகளும் மாறுகின்ற பொழுது நமது வாழ்க்கை நிலைமையும் மாறுவதற்கான சந்தர்ப்பமும் உண்டாகின்றது. அவ்வாறான நேரங்களை சரிவர கவனித்து அந்த சமயங்களில் சற்று கவனமாக நடந்திருக்கவேண்டும். இவ்வாறான மாற்றங்களின் போது மகாலட்சுமியின் அருள் நம்மை விட்டு விலகுவதற்கான சந்தர்ப்பமும் உண்டாகும்.

- Advertisement -

சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள படி சரியான வாழ்க்கை முறையை நமது அன்றாட வாழ்வில் கடைப்பிடித்தால் மட்டுமே லட்சுமி தேவியின் நம்மை விட்டு விலகாமல் இருப்பாள். இப்படி சாஸ்திரங்களில் கூறப்பட்ட வாழ்வியல் முறைகளை நமது முன்னோர்கள் சரியாக பின்பற்றி வந்தார்கள். ஆனால் இப்பொழுது பார்த்தோம் என்றால் அந்த வாழ்க்கை முறை எங்கே என்று தேட வேண்டி இருக்கிறது. அவ்வாறு நாம் அனைத்தையும் தொலைத்து விட்டோம்.

sunrise

அப்படி கவனமாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களில் முதலாவதாக காலையில் சூரியன் உதயமாகும் நேரத்திலும், மாலையில் சூரியன் அஸ்தமனமாகின்ற நேரத்திலும் உறங்குவது என்பது கூடாது. இதற்காகத்தான் நமது முன்னோர்கள் காலை, மாலை இருவேளையும் இந்த நேரத்தில் வாசல் கூட்டி, பெருக்கி, சாணம் மெழுகி, கோலமிட்டு பூஜையறையில் பூஜை செய்வது என்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

- Advertisement -

அடுத்ததாக நம்மிடம் பொன் பொருள் எல்லாமே இருக்கின்ற பொழுது கோபத்தில் என்ன சம்பாதித்து என்ன பலன் நிம்மதி என்பது இல்லையே எனும் வார்த்தையை சொல்லக்கூடாது. இவ்வாறு சொல்வதன் மூலம் மகாலட்சுமி தேவி நம்மை விட்டு விலகி விடுவாள். அடுத்ததாக இந்த 6 உணவு வகைகளை இரவில் உண்பதை தவிர்க்க வேண்டும். அவை கெட்டித்தயிர், கஞ்சி, இஞ்சி, கீரை, நெல்லிக்காய், பாகற்காய் இவற்றை இரவு நேரத்தில் உண்பதன் மூலம் உடலில் நோய் வருவதுடன், மகா லட்சுமி தேவியும் நமது அருகிலிருந்து சென்று விடுவாள்.

scolding-mother

அடுத்ததாக நம்மை பெற்றவர்கள், வயதானவர்கள் போன்றவர்களை அவர்களின் மனது புண்படும்படி கடுஞ்சொற்கள் கூறி காயப்படுத்தக் கூடாது. இவ்வாறு வயதில் பெரியவர்களானாலும் சரி, சிறியவர்கள் ஆனாலும் சரி அவர்களானாலும் சரி மனதை காயப்படுத்தி விட்டோம் என்றால் மகாலட்சுமி தேவி சற்றும் யோசிக்காமல் நம்மை விட்டு விலகி விடுவாள். இவ்வாறு சொத்துக்களை இழந்தவர்கள் இங்கு குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு தவறை நிச்சயமாக செய்திருப்பார்கள். எனவே நாம் நமது வாழ்க்கையில் இவற்றை தவறாமல் கடைப்பிடித்து வந்தால் நமது வாழ்வில் உண்டாகும் சரிவினை தவிர்க்க முடியும்.

- Advertisement -