நாம் செய்த பாவங்கள் அத்தனையும் நீங்க, மகாலட்சுமி நம் வீடு தேடி வருகை தர, இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

ulakku
- Advertisement -

உலகில் உள்ள அனைத்து பொருட்களிலும் குடி கொண்டு இருப்பவள் மகாலட்சுமி தேவி. அது மட்டும் அல்லாமல் தனம், தானியம், சந்தானம், சௌபாக்கியம், வைராக்கியம், தைரியம், வெற்றி, மன அமைதி என அனைத்தையும் அள்ளி தருபவளும் மகாலட்சுமியே. இவ்வாறு அனைத்தையும் தருகின்ற லட்சுமிதேவியை வீட்டில் வரவைப்பதற்கான செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்தையும் முறையாக செய்ய வேண்டும். இதற்கு நம் வீட்டில் உள்ள பொருட்களை எவ்வாறு முறையாக பயன்படுத்தினால் மகாலட்சுமியின் அருளைப் பெறமுடியும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பல வீடுகளின் நிலை வாசலில் மஞ்சள், குங்கும பொட்டு வைத்து மாவிலை தோரணம் கட்டும் பழக்கத்தை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இதற்கு காரணம் மகாலஷ்மி தாயை அவர்களுக்கு பிடித்த பொருட்களை வைத்து வரவழைப்பதேயாகும். அதேபோல் வீட்டில் உள்ள மஞ்சள் குங்குமம் உப்பு அரிசி இனிப்பு போன்ற மகாலட்சுமிக்கு விருப்பமான பொருட்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலமாகவும் லட்சுமி தேவியை வீட்டிற்குள் வரவழைக்க முடியும்.

- Advertisement -

மாதம்தோறும் வருமானம் வாங்கிய உடனேயே முதலில் வாங்க வேண்டிய ஒரு பொருள் மஞ்சள். இந்தப் பொருளில் மகா லட்சுமி தேவி வாசம் செய்வதால் உங்களின் வருமானம் பல மடங்காக உயர்ந்து கொண்டே இருக்கும். வெள்ளிக்கிழமை தோறும் கல்லுப்பை வாங்கி வீட்டிற்குள் வைப்பதன் மூலம் உங்கள் வீடுகளில் செல்வம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.

salt

கல் உப்பை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் நிரப்பி அதனை நிலை வாசற் படியின் வலது பக்கத்தில் வைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமி தேவியை எளிதில் வீட்டிற்குள் வரவழைக்க முடியும்.

- Advertisement -

மாதம் தோறும் அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் கல் உப்பினை வாங்கி அதனை ஒரு மஞ்சள் பையில் போட்டு வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்து வர வேண்டும். இவ்வாறு நீங்கள் சேர்த்து வைக்கும் உப்பினை உங்கள் குலதெய்வக் கோவிலுக்குச் செல்லும் பொழுது எடுத்துச் சென்று அங்குள்ள குளத்திலோ, அல்லது நீர் தொட்டியிலோ கரைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது உங்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்துக்கொண்டு எங்களின் பாவங்களையும், நாங்கள் தெரியாமல் செய்த தவறுகளையும் மன்னித்து எங்களது குடும்பத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை சிறப்பாகவும், உடல் நலன் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

padi

வீட்டில் அரிசி போட்டு வைக்கும் பாத்திரத்தில் அரிசியை அளப்பதற்காக பித்தளை அல்லது வெள்ளி உழக்கினை பயன்படுத்தவேண்டும். எவர் சில்வர் அல்லது பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்துதல் கூடாது. வெள்ளி பாத்திரத்தில் நாம் எதை வைக்கிறோமோ அது பல மடங்காகப் பெருகிக் கொண்டே செல்லும். அதே போல் வியாபார ஸ்தலங்களிலும் வெள்ளிக் கிண்ணத்தில் நாணயங்களைப் போட்டு வைப்பதால் அவை பல மடங்காக உயர்ந்து கொண்டே இருக்கும்.

இனிப்பு சுவை மிக்க பொருட்கள் மகா லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தவை. எனவே அம்பிகையைத் தொழுது கல்கண்டு, தேன், பழங்கள் இவற்றை நெய்வேத்தியமாக படைத்து பூஜை செய்யும்பொழுது மகாலட்சுமி தாயார் மனம் மகிழ்ந்து நம் வீடு தேடி வருவாள்.

குறிப்பு: வெள்ளிக்கிழமையாக இருந்தாலும் அன்று அமாவாசை தினமாக இருந்தால் தவறியும் உப்பினை வாங்கி விடக்கூடாது

- Advertisement -