இந்த சின்ன சின்ன குறிப்புகள் உங்கள் வீட்டையும் சமையல் அறையையும் சுத்தமாக வைக்கவும், வேலைகளை சுலபமாக்கவும் பயன்படும்

kitchen-cockroach
- Advertisement -

“கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்னும் பழமொழிக்கு ஏற்ப சின்ன சின்ன விஷயங்களாக இருந்தாலும், அவை பெரிய காரியங்களை கூட எளிதாக முடித்துவிட உதவியாக இருக்கின்றன. இவற்றை மட்டும் தெரிந்து வைத்து கொண்டால் போதும். வீட்டில் எந்த வித வேலையாக இருந்தாலும் அவற்றை எளிமையாக செய்து முடித்துவிட முடியும். அதே போல் தலைவலியாக இருக்கும் எவ்வளவு பெரிய விஷயங்களையும் கூட நாம் தெளிவாக யோசித்து சில காரியங்களை மேற்கொள்ளும் பொழுது அவற்றை எளிதில் சரி செய்து விட முடியும். இவ்வாறு உங்கள் வீட்டில் நீங்கள் எதிர் கொள்ளும் சமையல்பிரச்சனைகளை எப்படி சமாளித்து அதனை சரி செய்வது என்பதற்கான சில எளிய குறிப்புகளைப் பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kitchen

குறிப்பு: 1
சமையலில் பயன்படுத்தப்படும் இஞ்சியை ஒருமுறை பயன்படுத்திவிட்டு அப்படியே வைத்து விட்டால் அது காய்ந்து விடும். அல்லது பிரிட்ஜில் அதிக நாட்கள் வைத்திருந்தாலும் அவை அழுகி விடும். இவ்வாறு இஞ்சி அழிகி விடாமல் அதிக நாட்கள் நன்றாக இருக்க அதனை ஒரு வெள்ளை துணியில் சுற்றி தண்ணீர் பானையின் மீது வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

குறிப்பு: 2
துணிகளில் எண்ணெய் கறை அல்லது கடினமான கிரீஸ் கரைகள் பட்டுவிட்டால் அவை எளிதில் போகாது. இவற்றை சரி செய்ய இந்தக் கரைகளின் மீது சிறிதளவு நீலகிரி தைலம் தேய்த்து 5 நிமிடம் ஊற வைத்து பின்னர் கைகளினால் கசக்கினாலே போதும் இந்த கரைகள் விரைவில் மறைந்து விடும்.

blood-stain-in-cloth

குறிப்பு: 3
சில வீடுகளில் இரவானதும் பாத்ரூமில் இருந்து கரப்பான்பூச்சிகள் வெளிவர ஆரம்பிக்கும். இந்த சூழ்நிலையை சரிசெய்ய இரவு படுக்கும் முன்னர் சிறிதளவு பிளீச்சிங் பவுடரை பாத்ரூமில் தூவி விட்டால் கரப்பான் பூச்சிகள் வராமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு: 4
இப்பொழுதெல்லாம் நாம் கடைகளில் இருந்து வாங்கி வரும் காய்கறிகளை கூட நன்றாக கிருமிகள் அழியுமாறு சுத்தம் செய்து அதன் பிறகு தான் சமைக்க வேண்டும். இதற்காக குளிர்ந்த நீரில் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து அதனுள் காய்கறிகளை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் கழுவினால் கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும்.

குறிப்பு: 5
நாம் பல சூழ்நிலைகளில் அதிகமாக இந்த விஷயத்தை கேள்விப்பட்டிருப்போம். அவசரத்தில் ஷூ அணியும் போது அதனுள் இருக்கும் பூச்சி கடித்து விட்டது என்று. சில சமயங்களில் விஷப்பூச்சிகள் ஏதேனும் இருந்து அவை நம்மை கடித்து விட்டால் உயிரிழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சிறிதளவு கற்பூரத்தை ஷூவினுள் போட்டு வைத்தால் பூச்சிகள் எதுவும் அவற்றில் நுழையாமல் இருக்கும்.

mutton

குறிப்பு: 6
வீட்டில் அசைவம் சமைத்த பாத்திரங்களை எவ்வளவு அழுத்தமாக தேய்த்தாலும் அவற்றில் இருக்கும் அசைவ வாசனை அப்படியேதான் இருக்கும் இந்த வாசனையை அகற்ற சிறிதளவு புளியை நீரில் நனைத்து பாத்திரத்தை நன்றாக தேய்த்து விட்டு, அதன் பின்னர் சோப்பு போட்டு தேய்த்தோம் என்றால் அந்த வாசனை இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிடும்.

idli-rava3

குறிப்பு: 7
அதேபோல் இட்லி மாவு சீக்கிரத்தில் புளிக்காமல் இருக்க அதனை இறுக்கமான மூடி போட்ட பாத்திரத்தில் வைத்திருந்தால் சீக்கிரத்தில் புளிக்காது. இந்த குறிப்புகள் மிகவும் சின்ன எளிய விஷயங்களாக இருந்தாலும் அவை உங்களுக்கான வேலைகளை எளிதாக்க நிச்சயம் உதவும்.

- Advertisement -