சாஸ் எதுவும் இல்லாமலேயே வீட்டிலேயே, ஹோட்டல் ஸ்டைலில் வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ் செய்யலாம். இந்த ஐடியா மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா.

- Advertisement -

வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ் என்று சொன்னதுமே இதை ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் என்று சொல்லுவோம். அஜினோமோட்டோ, சோயா சாஸ், சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ், இப்படிப்பட்ட பொருட்கள் எல்லாம் சேர்க்காமல் சுவையாக நம்முடைய வீட்டில் ஃபிரைட் ரைஸ் செய்ய முடியாது. அதனால் ஹோட்டலுக்கு செல்வோம். ஆனால் ஒருமுறை உங்களுடைய வீட்டிலேயே சாஸ் எதுவும் ஊற்றாமல் பின் சொல்லக்கூடிய குறிப்பை பின்பற்றி வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் செய்து பாருங்களேன். சுவை அருமையாக இருக்கும். உங்களுடைய குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக இந்த பிரைட் ரைஸ் லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுக்கலாம். வாங்க நேரத்தை கடத்தாமல் இன்ட்ரஸ்டிங்கான இந்த ரெசிபி தெரிந்து கொள்வோம்.

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் பழுத்த தக்காளி பழம் – 1, பூண்டு தோல் உரித்தது – 4 பல், வரமிளகாய் – 1, பச்சை மிளகாய் – 1,  போட்டு இதை விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் – எண்ணெய் ஊற்றி, அரைத்த இந்த விழுதை ஊற்றி கலந்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு ஐந்து நிமிடம் பச்சை வாடை போகும் வரை வேக வைத்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து வடித்த சாதம் – 200 கிராம், அளவு நமக்கு தேவை. இரண்டு பேர் சாப்பிடும் அளவுக்கு உதிரி உதிரியான சாதம், பாஸ்மதி அரிசி, சாப்பாட்டு அரிசி, சீரக சம்பா அரிசி, எந்த சாதம் வேண்டும் என்றாலும் நீங்கள் பயன்படுத்தலாம் அது உங்களுடைய விருப்பம்.

இப்போது இந்த ஃபிரைட் ரைஸ் தாளித்து விடலாம். கொஞ்சம் அகலமான அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் – எண்ணெய் ஊற்றி, மிகப் பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 1 டேபிள் ஸ்பூன் போட்டு, இரண்டு வதக்கு வதக்கி விட்டு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் – 1/2 கைப்பிடி, முட்டைக்கோஸ் – 1 கைப்பிடி, குடைமிளகாய் – 1 கைப்பிடி, கேரட் பீன்ஸ் – 1 கைப்பிடி, எல்லாவற்றையும் ஓரளவுக்கு மெல்லிசாக நீள நீளமாக நறுக்கி போட்டு தேவையான அளவு – உப்பு, போட்டு வதக்கவும்.

- Advertisement -

எண்ணெயிலேயே இந்த காய்கறிகள் எல்லாம் வதங்கி முக்கால் பாகம் வெந்தவுடன், ஏற்கனவே அரைத்து வதக்கி வைத்திருக்கிறோம் அல்லவா, அந்த விழுதை காய்கறிகளோடு சேர்த்து கலந்து விட்டு, வடித்த சாதத்தை இதோடு கொட்டி மேலே சாதத்திற்கு தேவையான அளவு – உப்பு, மிளகுத்தூள் – 1 ஸ்பூன், தூவி எல்லா சாதத்தையும் மசாலா பொருட்களோடு கலந்து விடுங்கள். காய்கறிகளுடன் சேர்ந்து கலந்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: 2 நிமிஷத்துல தக்காளி பொட்டுக் கடலை வேர்க்கடலை எதையுமே சேர்க்காம இவ்வளவு டேஸ்ட்டான ஒரு சட்னியை செய்யவே முடியாது. சுட சுட இட்லிக்கு இந்த சட்னி இருந்தா எத்தனை இட்லி சாப்பிட்டோம்னு தெரியாது.

இறுதியாக வெங்காயத்தாழ் அல்லது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தலையை தூவி கூட ஏதாவது ஒரு கிரேவியை வைத்து பரிமாறினால் சூப்பரான பிரைட் ரைஸ் ரெடி.

- Advertisement -