2 நிமிஷத்துல தக்காளி பொட்டுக் கடலை வேர்க்கடலை எதையுமே சேர்க்காம இவ்வளவு டேஸ்ட்டான ஒரு சட்னியை செய்யவே முடியாது. சுட சுட இட்லிக்கு இந்த சட்னி இருந்தா எத்தனை இட்லி சாப்பிட்டோம்னு தெரியாது.

coconut chutney
- Advertisement -

இந்த இட்லி தோசைக்கு பரிமாறப்படும் சட்னியில் எத்தனையோ வகைகள் கேள்வி பட்டிருக்கும். அதில் ரொம்பவே வித்தியாசமாக அதே நேரத்தில் ரொம்ப சுலபமாகவும் ருசியாகவும் செய்யக் கூடிய ஒரு சட்னி ரெசிபியை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த சட்னிக்கு நாம் பொட்டுக்கடலை வேர்க்கடலை தக்காளி எதையுமே சேர்க்காம ரொம்ப சுலபமா எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவியது – 1/4 கப், பூண்டு – 4 பல், புளி – சின்ன நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 8, கருவேப்பிலை -1 கொத்து, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், மீடியம் சைஸ் வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது, உப்பு – 1/4 டீஸ்பூன்

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி அரைக்க மிக்ஸி ஜாரில் தேங்காய் பூண்டு, புளி கொஞ்சம் கருவேப்பிலை உப்பு அனைத்தையும் சேர்த்து முதலில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த சட்னியை நல்ல மைய அரைத்து ஒரு பவுலில் மாற்றி விடுங்கள். இப்போது மிக்ஸி ஜாரில் கொஞ்சமா தண்ணீர் ஊற்றி அலசி அதையும் இந்த பௌலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அடுத்து இந்த சட்னிக்கு ஒரு தாளிப்பை தயார் செய்ய வேண்டும். அடுப்பில் கடாய் வைத்து சூடானவுடன் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிந்தவுடன் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரை வதக்கி கொள்ளுங்கள். இந்த சட்னிக்கு வெங்காயத்தை வதக்கி சேர்க்கும் பொழுது இன்னுமே சுவை பிரமாதமாக இருக்கும். அதன் பிறகு கறிவேப்பிலை போட்டு வதக்கிய பின் அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

கடைசியாக இந்த தாளிப்பை நாம் ஏற்கனவே அரைத்து வைத்த சட்னியில் ஊற்றி ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். இந்த சட்னி தண்ணீராக இருந்தால் தான் சாப்பிட ருசியாக இருக்கும். எனவே கொஞ்சம் தாராளமாகவே தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளலாம். சுட சுட இட்லியுடன் இந்த சட்னியை ஊற்றி சாப்பிட்டு பார்த்தால் சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வெங்காயம் தக்காளி தேங்காய் எதையுமே சேர்க்காம சிம்பிளான இந்த பொரியல் ரெசிபியை தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்கன்னா இப்ப இருக்க விலைவாசியை சூப்பரா சமாளிச்சிடலாம்.

தக்காளி பொட்டுக்கடலை,வேர்க்கடலை என எந்த வித பொருட்களையும் சேர்க்காமல் ரொம்ப சுலபமாக செய்யும் இந்த சட்னி ரெசிபி அவசர நேரத்திற்கு சட்டென்று செய்யக் கூடிய சிம்பிள் சட்னியாகவும் இருக்கும். ஒரு முறை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க அப்புறம் மறுபடியும் மறுபடியும் இந்த சட்னியை தான் செய்வீங்க.

- Advertisement -