குக்கரில் 2 விசில் வைத்தால் போதும். தெருவே மணக்கும் சூப்பரான தக்காளி குருமா தயார்.

veg-paya
- Advertisement -

ரொம்ப ரொம்ப ஈசியா மணக்க மணக்க இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஒரு தக்காளி குருமா ரெசிபி எப்படி செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெஜிடேரியன் பாயா சுவையில் அசத்தலாக இருக்கக்கூடிய ரெசிபி இது. கஷ்டப்பட வேண்டாம். 15 லிருந்து 20 நிமிடத்தில் குக்கரில் விசில் வைத்துவிடலாம். வாங்க அந்த சிம்பிளான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

veg-paya1

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் துருவிய தேங்காய் – 2 கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் – 4, பூண்டு பல் தோல் உரித்தது – 7, இஞ்சி சிறிய துண்டு – 2, மிளகு – 1 ஸ்பூன், சோம்பு – 2 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுது போல நன்றாக மைய அரைத்துக் கொள்ளவேண்டும். தேங்காய் திப்பி திப்பியாக தெரியக்கூடாது. இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது குருமாவை தாளித்து விடலாம். ஒரு குக்கரை எடுத்து அடுப்பில் வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை – 2 துண்டு, ஏலக்காய் கிராம்பு – 2, கல்பாசி – மிகச் சிறிய அளவு, சோம்பு – 1/2 ஸ்பூன், மிளகு – 1/2 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, இந்த பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

veg-paya2

அதன் பின்பு மீடியம் சைஸில் இருக்கும் – 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது சேர்த்து, வெங்காயத்தை நன்றாக பொன்னிறம் வரும் வரை வதக்கி விடுங்கள். அதன் பின்பு மீடியம் சைஸில் இருக்கும் 2 பழுத்த தக்காளி பழங்களை சேர்த்து ஒரே நிமிடம் இரண்டு முறை எண்ணெயில் வதக்கி விட்டு உடனடியாக அரைத்து வைத்திருக்கும் விழுதை குக்கரில் ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி, மீண்டும் ஒருமுறை கலந்து விட்டு, குக்கரை மூடி விடுங்கள். விசில் போட்டு விடுங்கள். இரண்டு விசில் வரட்டும். (தக்காளியைப் போட்டு குழையக்குழைய இந்த குருமாவுக்கு வதக்கக்கூடாது.)

- Advertisement -

விசில் வரும்போதே வாசம் வீட்டையே தூக்கும். சாப்பிட வயிறு சத்தம் போடும். பிரஷர் அடங்கியதும் திறந்து குருமாவுக்கு மேலே கொத்தமல்லி தழைகளைத் தூவி, சூடாக பரிமாறி பாருங்கள். பிறகு எத்தனை இட்லி, எத்தனை தோசை, எத்தனை சப்பாத்தி சாப்பிட்டாலும் கணக்கே தெரியாது உள்ளே இறங்கிக் கொண்டே இருக்கும். அந்த அளவிற்கு அருமையான சுவையான குருமா ரெசிபி இது. மிஸ் பண்ணாதீங்க. உங்க வீட்ல நிச்சயமா ட்ரை பண்ணி பாருங்க.

veg-paya3

பின் குறிப்பு: இந்த குருமாவில் மிளகாய்த்தூள் சேர்க்கக்கூடாது. பச்சை மிளகாய் காரம் மிளகு காரம் தான் ஹைலைட். உங்களுக்கு தேவைப்பட்டால் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் நூல்கோல் போன்ற மற்ற காய்கறிகளையும் இதில் சேர்த்து சமைத்துக் கொள்ளலாம். அப்போது வெங்காயத்தின் அளவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -