இனி முடி வளரவே வளராதுன்னு முடிவு செய்தவர்கள் கற்றாழையை வாரத்தில் இரண்டு முறை மட்டும் இப்படி ட்ரை பண்ணி பாருங்க. அப்புறம் நீங்களே இனி ஒரு முடி கூட எனக்கு கொட்டவே கொட்டாதுன்னு சொல்லுவீங்க.

- Advertisement -

ஒரு சிலர் முடி வளர ஆயில் ஷாம்பூ என எதை பயன்படுத்தினாலும் ஒரு அளவிற்கு மேல் முடி வளரவே வளராது. அது மட்டும் இன்றி முடி உதிர்வும் நிற்காது. இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த கற்றாழையை பயன்படுத்தி பாருங்கள். ஒரு முடி கூட உதிராமல் போவதுடன், முழங்காலை தொடும் அளவிற்கு முடி நீளமாக வளரும். அதற்கு கற்றாழை எண்ணெய் எப்படி தயாரிப்பது என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பொதுவாக முடி வளர நாம் எந்த ஒரு முறையையும் முயற்சி செய்வதற்கு முன்பாக நம்முடைய வாழ்வியல் முறை சரியானதாக இருக்க வேண்டும். நல்ல தூக்கம், சத்து மிகுந்த சாப்பாடு, அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, மன அழுத்தம் அதிகம் இல்லாமல் இருப்பது போன்றவற்றை கடைபிடிப்பது மிகவும் அவசியம். இத்துடன் இரும்புச் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.இதையெல்லாம் கடைப்பிடிப்பதுடன் இந்த ஒரு எண்ணையையும் தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக முடி நன்றாக வளரும்.

- Advertisement -

இந்த எண்ணெய் தாயரிக்க சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், அத்தோடு ஒரு பெரிய கற்றாழை மடலை எடுத்து அலசிய பிறகு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இவ்வளவு மட்டும் தான் நமக்கு தேவைப்படும் பொருட்கள்.

இப்பொழுது ஒரு சின்ன கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய கற்றாழை மடல்களை சேர்த்து கற்றாழை மூழ்கும் வரை தேங்காய் எண்ணெய் சேர்த்துக் அப்படியே வைத்து விடுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் பேன் வைத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதிக்கும் பொழுது நீங்கள் ஏற்கனவே எடுத்து வைத்த கற்றாழை, தேங்காய் எண்ணெய் கிண்ணத்தை இந்த தண்ணீரில் வைத்து டபுள் பாயில் முறையில் சூடு படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த எண்ணெய் நன்றாக சூடு ஆனவுடன் அடுப்பில் இருந்து எடுத்து ஒரு ஸ்பூன் வைத்து கற்றாழை அனைத்தையும் எண்ணெயில் மசித்து விடுங்கள் அதன் பிறகு வடிகட்டினால் கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெயுடன் கலந்து ஒரு நல்ல ஜெல் பதத்திற்கு கிடைக்கும். இளஞ்சூட்டுடன் உங்கள் தலைமுடியில் தேய்த்து ஐந்து நிமிடம் வரையில் அப்படியே மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளித்து விடுங்கள். அதன் பிறகு மைல்டான ஷாம்பூ அல்லது சீயக்காய் போன்றவற்றை பயன்படுத்தி எப்பொழுதும் போல் தலைக்கு குளித்து விடுங்கள்.

இந்த ஜெல்லை பொருத்தவரையில் நீங்கள் பயன்படுத்தும் முன்பு புதிதாக தயாரித்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஒரு வேளை நீங்கள் தயார் செய்த எண்ணெய் மீந்து விட்டால், அதை பிரிட்ஜில் வைத்து மறுமுறை பயன்படுத்தும் முன்பு இதே போல் டபுள் பாயில் முறையில் லேசாக சூடு படுத்தி பின்னர் தான் தேயிக்க வேண்டும் அப்படியே தேய்க்க கூடாது.

இதையும் படிக்கலாமே: குளிர்காலத்தில் உங்கள் உதடு மென்மையை இழந்து சுரசுரப்பாக மாறுகிறதா? இதை செய்து பாருங்கள் உங்கள் உதடு சிகப்பாகவும் மென்மையாகவும் மாறிவிடும்.

இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை கட்டாயமாக செய்ய வேண்டும். இப்படி பயன்படுத்தும் போது இரண்டு வாரத்திற்குள்ளாகவே உங்களுக்கு முடி உதிர்வது முற்றிலுமாக நின்று புதிய முடிகள் அதிகமாக வளர தொடங்கி விடும்.

- Advertisement -