வெங்காயம் நீண்ட நாள் முளை விடாமல் இருக்க என்ன செய்யலாம்? கடலை எண்ணெய் கெட்டுப் போகாமல் இருக்க இதை போட்டு வையுங்கள்!

- Advertisement -

நம் அன்றாட உணவில் இருக்கும் ருசியின் ரகசியம் அதில் நாம் சேர்க்கும் உணவுப் பொருட்கள் தான் என்றாலும் கூட அதனை எந்த அளவிற்கு பக்குவமான முறையில் சேர்க்கிறோம்? எந்த அளவிற்கு அந்த பொருட்கள் எல்லாம் சுத்தமானது? என்பதை பொறுத்து தான் ருசியும் அமைகிறது. இப்படி நாம் உணவு பொருட்களை கையாளும் முறைகளை பற்றிய எளிய ரகசியங்களை தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால் நமக்கு இன்னும் சமையல் சுலபமாக இருக்கும். அது என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

chinna-vengayam

குறிப்பு 1
வெங்காயத்தை அதிக நாட்கள் முளை விடாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக சின்ன வெங்காயம் வெகு சீக்கிரமாகவே முளை விட ஆரம்பிக்கும். இதிலிருந்து அதனை பாதுகாக்க நாம் வெங்காயத்தை வாங்கி வந்தவுடன் அடிக்கும் வெயிலில் நன்றாக உலர்த்தி வைக்க வேண்டும். ஈரப்பதம் இல்லாமல் உலர்ந்து போன பின் வெங்காயத்தை ஸ்டோர் செய்து வைத்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அது மூளை விடாது.

- Advertisement -

குறிப்பு 2
எலுமிச்சை பழங்களை என்ன தான் நீங்கள் பத்திரப்படுத்தி வைத்தாலும் அது வெகு விரைவாக அழுகிப் போய் விடும் அல்லது காய்ந்து போய்விடும் அபாயம் உண்டு. தினமும் எலுமிச்சைப் பழத்தை பாலிதீன் கவரில் இருந்து எடுத்து ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு மீண்டும் அதனை துடைத்து ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் போதும், எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

groundnutoil 1

குறிப்பு 3
கடலை எண்ணை வாங்கும் பொழுது அதில் இருக்கும் இனிப்பு தன்மை காரணமாக வெகு விரைவாக கெட்டுப் போகும் அபாயம் உண்டு எனவே கடலை எண்ணெயுடன் கொஞ்சமாக புளியை சேர்த்து விட்டால் போதும், எவ்வளவு நாட்கள் ஆனாலும் கடலை எண்ணெய் சுவையும், குணமும் மாறாமல் அப்படியே இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4
வாழைக்காய் நீண்ட நாட்கள் வதங்கி போகாமலிருக்க அதனை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதற்குள் மூழ்கும்படி வைக்க வேண்டும். இவ்வாறு வைத்தால் நீண்ட நாட்கள் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

oorugaai-pickles

குறிப்பு 5
மாவடு, ஊறுகாய் போன்றவற்றை செய்து வைக்கும் பொழுது அது நீண்ட நாட்கள் கெடாமல், பூச்சி, புழுக்கள் வராமல் இருக்க செய்து முடித்த பின் அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய் கலந்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

குறிப்பு 6
சமையலுக்கு பயன்படுத்தும் கேரட் மற்றும் பீட்ரூட் போன்ற காய்கறிகள் சிறிது நாட்களில் வதங்கி போய்விடும். வதக்கிய காய்கறிகளை நம்மால் நறுக்குவது என்பது கடினமாகிவிடும். அந்த சமயத்தில் கொஞ்சம் உப்பு கலந்த நீரில் இவற்றை ஊற வைத்து பின்னர் நறுக்கினால் எளிதாக நறுக்க முடியும்.

potato

குறிப்பு 7
பாத்திரங்களில் இருக்கும் விடாப்பிடியான கரைகள் நீங்காத சமயங்களில் உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீர் இருந்தால் அவற்றை கொண்டு 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் கழுவிப் பாருங்கள் பாத்திரம் பளிச்சிடும்.

குறிப்பு 8
நீங்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுபவராக இருந்தால் வாழைப்பழம் கறுத்துப் போகாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்து விடுங்கள்! விரைவாக கறுக்காமல் புத்தம் புதியதாகவே இருக்கும்.

- Advertisement -