6 பலன்களை தரக்கூடிய ஒரு வழிபாடு. இதை வீட்டிலேயே மிக எளிமையாக மாதத்தில் ஒரே ஒருமுறை கூட செய்தால் போதும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் குடும்பத்தில் வளர்ச்சியும் நிச்சயம் உண்டு.

Murugan
- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்க வேண்டும் என்றும், எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். அவ்வாறு வளர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்திட நாம் நமது வீட்டிலேய செய்ய கூடிய ஒரு வழிபாடு முறை தான் வேல் வழிபாடு (Vel vazhipadu in Tamil). இந்த வேல் வழிபாட்டை செய்வதன் மூலம் அந்த ஆறுமுகனின் அருளால் 6 விதமான பலன்களை ஒருசேர நாம் பெற முடியும். வாருங்கள் இந்த வேல் வழிபாட்டை எப்படி செய்வதென்றும், இதனால் நமக்கு கிடைக்க கூடிய பலன்கள் என்ன என்பது குறித்தும் விரிவாக பார்ப்போம்.

“வேலுண்டு வினையில்லை” என்ற கூற்றுக்கு ஏதுவாக, வேலை வணங்குபவர்களுக்கு எந்த தீவினைகளும் நெருங்காது என்பார்கள். மேலும் அன்னை பார்வதி தேவையால் அசுரரை அழிப்பதற்காக முருகனுக்கு வழங்கப்பட்டது தான் வேல் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட வேலை நாம் நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்குவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -

வேல் வழிபாடு முறை – Vel vazhipadu murai in Tamil

நம் வசதிக்கு ஏற்ப ஏதாவது ஒரு உலோகத்தால் ஆன வேலை முதலில் வாங்கி வர வேண்டும். பிறகு நாம் அதற்க்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் எப்படி அபிஷேகம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம். அபிஷேகம் செய்வதற்கு காய்ச்சாத பால், விபூதி, பன்னீர், சந்தனம், குங்குமம் தேவைப்படும்.

முதலில் வேலை சுத்தமான தண்ணீரால் கழுவவேண்டும். பிறகு ஒரு செம்பு தட்டை வைத்து அதன் மேல் செம்பாலான பாத்திரத்தை வைத்து அதில் பச்சரிசியை நிரப்பி அதன் நடுவே வேல் நிற்பது போல வைக்க வேண்டும். பிறகு காய்ச்சாத பாலை ஊற்றி அபிஷேகம் செய்து, வேலின் நடுவில் சந்தனம் குங்குமம் வைத்து கற்பூர ஆராதனை காட்ட வேண்டும்.

- Advertisement -

பிறகு தண்ணீரை ஊற்றி அதை கழுவி விட வேண்டும். அடுத்ததாக விபூதியை வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு பன்னீரையும் சந்தனத்தையும் ஒன்றாக கரைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் முடிந்த பிறகு வேலை அரிசியில் இருந்து எடுத்து சுத்தமான துணியைக் கொண்டு துடைக்க வேண்டும். பிறகு செம்பு பாத்திரத்தில் இருக்கும் அரிசியை எடுத்து வேறொரு தட்டில் கொட்டிவிட்டு, செம்பு பாத்திரத்தை சுத்தமான துணியை கொண்டு துடைத்துவிட்டு அதில் புதியதாக பச்சரிசியை நிரப்பிவிட்டு வேலை மீண்டும் அதில் நிற்க வைக்க வேண்டும். தட்டில் இருக்கும் அபிஷேக நீரை நாம் தீர்த்தமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

அபிஷேகம் முடிந்த பிறகு நாம் வேலுக்கு அலங்காரம் செய்ய வேண்டும். அலங்காரம் முடிந்த பிறகு அர்ச்சனை செய்ய துவங்கலாம். அர்ச்சனை செய்ய செவ்வரளி பூ அல்லது பன்னீர் ரோஜா சிறந்தது. வேல் பதிகத்தை பாடி அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் 108 முறை “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்யலாம்.

- Advertisement -

நெய்வேத்தியமாக வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் மற்றும் தேங்காய் வைக்கலாம். தங்கள் வசதிக்கேற்ப சர்க்கரைப் பொங்கல், பாசிப்பருப்பு பாயாசம் என்றும் கூட செய்யலாம். இந்த வேல் வழிபாட்டில் கடைசியாக நாம் மறக்காமல், கண்டிப்பாக கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டை நாம் காலையிலோ அல்லது மாலையிலோ செய்யலாம். மேலும் இந்த வழிபாட்டை செய்யக்கூடிய நாட்களாக கருதப்படுவது முருகனுக்கு உகந்த நாட்களான சஷ்டி, கிருத்திகை, விசாக நட்சத்திரம் உள்ள நாட்கள், பரணி நட்சத்திரம் உள்ள நாட்கள், செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை போன்றவை ஆகும். இந்த நாட்கள் அனைத்திலும் செய்ய இயலாதவர்கள் மாதம் ஒரு முறையோ அல்லது வாரத்தில் ஒருமுறையோ இந்த பூஜையை மேற்கொண்டு வரலாம்.

பொதுவாக பூஜை அறையில் வேலை வைத்து வணங்குபவர்கள் அந்த வேலின் கூர்மையான நுனியில் எலுமிச்சம் பழத்தை சொருகி வைக்க வேண்டும். காரணம், கூர்மையாக இருந்தால் அது ஆயுதமாக கருதப்படும். அதன் மேல் நாம் எலுமிச்சம் பழத்தை வைக்கும் பொழுது அது காக்கும் ஆயுதமாக மாறிவிடும்.

மிகவும் சிறிய வேலாக இருந்து அதில் எலுமிச்சம் பழத்தை வைக்க முடியவில்லை என்றால் அந்த கூர்மையான பகுதியில் சந்தனத்தை கெட்டியாக குழைத்து வைக்கலாம். இப்படி சரியான முறையில் வேல் வழிபாட்டை செய்வதன் பலனாக குடும்பம் வளர்ச்சி அடையும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஞானத்துடன் இருப்பார்கள். வீட்டில் இருக்கும் தடங்கல்கள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். பயம், கடன் நீக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த ஜென்மத்தில் சொந்த வீடு வாங்கவே முடியாது என்பவர்கள் கூட, இதை எழுதினால், சொர்க்கத்துக்கு நிகரான சொந்த வீடு கட்டலாம்.

குறிப்பு: நாம் அபிஷேகம் செய்த பிறகு எடுத்து வைத்த அரிசியை காக்கை குருவிகளுக்கோ அல்லது எறும்பிற்க்கோ வைக்கலாம். அதை பிறர் கால்படும் இடத்தில் கொட்டக்கூடாது.

- Advertisement -