ஒரே 1 தக்காளிப் பழத்தை வைத்து வெள்ளை முடியை கருப்பாக மாற்ற ஈஸியான ஒரு டிப்ஸ்.

hair2
- Advertisement -

இந்த நரை முடியை கருப்பாக மாற்றுவதற்கு எத்தனை போராட்டம். ஆனாலும் நிரந்தரமாக நரை முடியை கருப்பாக மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. எத்தனையோ வழிகளை பின்பற்றி பார்த்தாகிவிட்டது. முடி வெள்ளையாக தான் இருக்கிறது. ஹேர் டை அடித்தால் மட்டும் தான் முடிக்கு செயற்கையான கருப்பு நிறம் கிடைக்கிறது என்பவர்கள் இந்த குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க. ஒரே ஒரு தக்காளி பழத்தை வைத்து அதோடு இன்னும் சில பொருட்களை சேர்த்து தான் இந்த குறிப்பு சொல்லப்பட்டுள்ளது. பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. நிச்சயமாக நரை முடியானது ஒரு சில வாரங்களில் கருப்பாக மாறும்.

ஒரு பழுத்த பெரிய தக்காளியை நன்றாக துருவி பிழிந்து வடிகட்டி எடுத்தால் தக்காளி சாறு மட்டும் நமக்கு கிடைக்கும். அந்த தக்காளி சாறுடன் காபி பவுடர் – 2 டேபிள்ஸ்பூன், ஹென்னா பவுடர் – 2 டேபிள்ஸ்பூன் இந்த இரண்டு பொருட்களையும் மட்டும் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். தலையில் அப்ளை செய்யும் அளவிற்கு பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கலந்த இந்த கலவையை ஒரு அரை மணிநேரம் மட்டும் அப்படியே ஊற விட்டு, அதன் பின்பு உங்களுடைய தலையில் இந்த பேக்கை போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக வெள்ளை முடி இருக்கக்கூடிய இடத்தில் கவனம் செலுத்தி இந்த பேக்கை போட்டு விட்டு இரண்டு மணிநேரம் அப்படியே காய விட்டு விடுங்கள்.

அதன் பின்பு ஷாம்பு போடாமல் வெறும் தண்ணீரில் தலையை அலசி விடுங்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றி வந்தால் உங்களுடைய நரை முடியானது சீக்கிரத்தில் கறுப்பு நிறமாக மாற நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

கூடவே உங்களுக்கு கூடுதல் நேரம் கிடைத்தால் கருவேப்பிலை, செம்பருத்திப் பூ இலை, முருங்கை கீரை இந்த மூன்று பொருட்களையும் அதாவது 3 கீரைகளையும் நன்றாக அரைத்து தலையில் பேக் போட்டு வர வேண்டும். இளமையிலேயே நரை முடி வருவதற்கு காரணம் நம் உடம்பில் இருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஆக கூட இருக்கலாம்.

உடலுக்கு இரும்புச்சத்தை கொடுக்கக்கூடிய பொருட்களையும் சாப்பிட்டு வர வேண்டும். குறிப்பாக முருங்கைக்கீரை பேரிச்சம்பழம் கருவேப்பிலை பொடி நெல்லிக்காய் போன்ற பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது நம்முடைய நரைமுடி கருப்பாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

ஆகவே தலைமுடிக்கு மேலே போடக்கூடிய பேக்குடன் சேர்த்து உள்ளுக்கு சாப்பிட கூடிய பொருட்களைலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மேலே சொன்ன குறிப்பு உங்களுக்குப் பிடிச்சிருந்தா சரியாக நான்கு முறை ட்ரை பண்ணி பாருங்க‌‌. ஒரு வாரத்தில் இரண்டு முறை என்று, நான்கு முறையிலேயே உங்களுக்கு ரிசல்ட் தெரியும்.

- Advertisement -