ஓவர் நைட்டில் உலக அழகி பட்டம் உங்களுக்கு தான் கிடைக்கும். 1 நாளில் வெள்ளையாக இந்த டிப்ஸை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க.

face-curd-rice-flour
- Advertisement -

உலக அழகியாக வேண்டும் என்ற ஆசை எந்த பெண்ணுக்குத்தான் இருக்காது. உங்களுக்கும் வெள்ளையாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா. அதுவும் குறைந்த செலவில். யோசிக்காம இந்த டிப்ஸை ட்ரை பண்ணிப் பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய ஒரு சில பொருட்களை வைத்தே இந்த பேக்கை சுலபமாக தயார் செய்துவிடலாம். இந்த பேக்கை தயார் செய்து உங்களுடைய முகத்தில் போட்டு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவிப் பாருங்கள். இந்த பேக் போடுவதற்கு முன்பு இருந்த கலருக்கும், இந்த பேக் போட்ட பின்பு இருக்கக்கூடிய கலருக்கும் ஒரு ஷேட் நிச்சயமாக வித்தியாசம் தெரியும். நேரத்தைக் கடத்தாமல் குறிப்பை பார்க்கலாம் வாங்க.

மீடியம் சைஸில் இருக்கும் 4 உருளைக்கிழங்கை எடுத்து தோல் சீவி குக்கரில் போட்டு 2 விசில் வைத்து நன்றாக வேக வைத்து ஆற வைத்துவிடுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை தண்ணீரை வடித்து போட்டுக் கொள்ளுங்கள். இதை அரைக்க காய்ச்சாத பால், அல்லது தயிர் பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு ரொம்பவும் ட்ரை ஸ்கின் இருந்ததால் இருந்தால் தயிர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பால் தயிர் இரண்டுமே உங்களுடைய சருமத்திற்கு செட்டாகாது என்றால் ரோஸ் வாட்டர் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் ஊற்றி இந்த உருளைக்கிழங்கை அரைக்கக் கூடாது. அரைத்த இந்த உருளைக்கிழங்கை ஒரு பௌலில் மாற்றிக்கொள்ளுங்கள். இதோடு அரிசி மாவு 1/4 கப் அளவு போட்டு நன்றாக கலந்தால் பேஸ்டாக நமக்கு கிடைக்கும். அதாவது உங்களுக்கு உடம்பில் அப்ளை செய்து கொள்ளும் அளவிற்கு இந்த பேக்கை நீங்கள் தயார் செய்து கொள்ளலாம். கொஞ்சம் தளதளவென அல்லது கொஞ்சம் திக்காக அது நம்முடைய விருப்பம்தான். (மொத்தமாக 3 பொருள். வேக வைத்த உருளைக்கிழங்கு, அரைப்பதற்கு பால், அரிசிமாவு.)

உங்களுடைய முகத்தை சுத்தமாக கழுவித் துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த பேக்கை முகத்தில் கொஞ்சம் திக்காக போட்டுக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து முகத்தில் இருக்கும் பேக் டிரை ஆகியிருக்கும் அல்லவா. அதை தண்ணீர் தொட்டு நனைத்து மசாஜ் செய்ய வேண்டும். 5 நிமிடம் போல மசாஜ் செய்துவிட்டு அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள். சோப்பு போட்டு கழுவ கூடாது.

- Advertisement -

தேவைப்பட்டால் இந்த பேக்கை உடம்பு முழுவதும் அப்ளை செய்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். அல்லது கைகளுக்கு முகத்திற்கு மட்டும் கூட அப்ளை செய்து கொள்ளுங்கள். குறிப்பாக இந்த பேக்கை இரவு நேரத்தில் போட்டுவிட்டு முகத்தை கழுவி விட்டு அப்படியே தூங்கச் செல்லுங்கள்.

பேக் போட்ட பின்பு உடனே வெளியே வெயிலில் சென்றால் இந்த நிறம் சீக்கிரம் கருத்து போகத்தான் செய்யும். தொடர்ந்து இந்த பேக்கை போட்டு வர உங்களுடைய கலர் கூடிக்கொண்டே செல்லும். பிறகென்ன உலக அழகி பட்டம் உங்களுக்குத்தான். இந்த பேக்கை மூன்று நாட்கள் வரை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -