நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டுமா? தொட்டதெல்லாம் துலங்க வேண்டுமா? இந்த வேர் இருந்தால் போதும். இதை கொண்டே எதையும் சாதிக்கலாம்.

lakshmi ver
- Advertisement -

நாம் செய்து முடிக்க வேண்டும் என்று நினைக்கும் காரியம் எந்தவித தடைகளும் இன்றி நடைபெற வேண்டும் என்பதே நம் அனைவரின் ஆசை. ஆனால் பலநேரங்களில் அவ்வாறு நடப்பதில்லை. ஏதாவது தடங்கல்கள் வந்து, நாம் செய்ய வேண்டிய காரியம் நின்றுவிடும். இப்படியான தடங்கல்களில் இன்று முற்றிலும் விடுபட்டு எடுத்த காரியம் அனைத்தும் ஜெயமாக ஒரே ஒரு மூலிகை வேர் நம்மிடம் இருந்தால் போதும். அது எந்த மூலிகையின் வேர் என்பதையும், அதை எவ்வாறு தயார் செய்வது என்பதையும் இந்த பதிவில் நாம் காண்போம்.

பொதுவாக ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக விநாயகரை வணங்கும் வழக்கம் அனைவருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த மூலிகைச் செடியாக கருதப்படுவது தான் எருக்கன் செடி. இந்த எருக்குன் செடியின் பூக்கள் விநாயகருக்கு உகந்த பூக்களாக கருதப்படுகிறது. ஆதலால் தான் விநாயகர் சதுர்த்தி அன்று எந்த வகை பூக்களை வைத்தாலும் எருக்குன் பூவை வைப்பதற்கு சமம் ஆகாது என்று சொல்கிறார்கள்.

- Advertisement -

பொதுவாக இந்த எருக்குன் செடியை யாரும் வீட்டில் வளர்ப்பது கிடையாது. இந்த எருக்குன் செடியில் இரண்டு வகைகள் உள்ளது. நீல நிற எருக்குன் செடி மற்றும் வெள்ளை நிற எருக்குன் செடி. அதிக மூலிகை தன்மையும், தெய்வீக சக்தியும் கொண்டது வெள்ளை எருக்குன் செடி தான். அதனால்தான் பலரின் இல்லங்களில் வெள்ளை எருக்கில் ஆன விநாயகரை வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்குவார்கள்.

அவ்வாறு வணங்குவதன் மூலம் வீட்டில் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அப்படிப்பட்ட வெள்ளை எருக்குன் செடியின் வேரை வைத்து தான் இன்று நாம் காரிய சித்திக்குரிய பரிகாரத்தை செய்யப் போகிறோம். முதலில் நாம் இந்த வெள்ளை எருக்குன் செடி வேரை வீட்டிற்கு கொண்டு வருவதற்குரிய நாளை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

குடும்பத் தலைவரின் ராசியில் இருந்து 5ம் இடம், 2ம் இடம் 11ஆம் இடம் நட்சத்திர நாளில் தான் இந்த வெள்ளை எருக்கு செடியின் வேரை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதாவது நீங்கள் மேஷ ராசியாக இருந்தால் இரண்டாம் இடமாக ரிஷப ராசியும் ஐந்தாம் இடமாக சிம்ம ராசியும் 11 ஆம் இடமாக கும்ப ராசியும் வரும். இந்த ராசிகளுக்குரிய நட்சத்திரம் வரும் நாளில் தான் நாம் வெள்ளெருக்கு செடி வேரை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

பிறகு நாம் அந்த வேர் முழுவதும் மஞ்சளை பூச வேண்டும். அடுத்ததாக கோமியத்தை ஊற்றி அந்த வேரை கழுவ வேண்டும். பிறகு சுத்தமான தண்ணீரை வைத்து கழுவ வேண்டும். அடுத்ததாக சந்தனத்தை அந்த வேர் முழுவதும் பூச வேண்டும். பிறகு பன்னீரை வைத்து அந்த வேரை கழுவ வேண்டும். பிறகு அந்த வேருக்கு சந்தனம் குங்குமம் வைத்து சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது அந்த வேரை எங்கு வைக்க வேண்டும் என்று பார்ப்போம். சாம்பிராணி காட்டிய வேரை உங்கள் வீட்டின் ஈசானிய மூலையிலோ அல்லது கன்னி மூலையிலோ கட்டி விடலாம். அதற்கு வசதி இல்லாதவர்கள் வீட்டின் பூஜை அறையிலேயே வைக்கலாம். தினந்தோறும் இந்த வேருக்கு நாம் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பர்ஸில் இந்த 1 பொருளை எடுத்துச் சென்றால், நாலு பேர் மதிக்கும் அளவுக்கு கை நிறைய சம்பளத்தோடு நல்ல வேலை கிடைக்கும்.

வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு முன் அந்த வேரை நம்முடைய மோதிர விரலால் தொட்டு வணங்கிய பிறகு சென்றால் நாம் நினைத்த காரியங்களை எந்த தடைகளும் இன்றி செய்யலாம். தினமும் இவ்வாறு தொட்டு வணங்கி செல்வதன் மூலம், நம்மிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் விலகி நேர்மறை ஆற்றல்கள் பெருகி ஒரு அபரிவிதமான சக்தி கிடைத்ததை போல் உணர முடியும். எளிமையாக கிடைக்கும் இந்த வெள்ளெருக்கு செடியின் வேரை வைத்து ஒருமுறை இப்படி செய்து தினந்தோறும் சாம்பிராணி தூபம் காட்டி மோதிர விரலால் தொட்டு வணங்கிச் சென்றாலேயே நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்ல விதமாக நடைபெறும்.

- Advertisement -