வெள்ளியங்கிரி மலையில் சிவ தரிசனம் – நேரடி காட்சிகள்

velliyangiri malai sivan
- Advertisement -

மலைகள் என்றாலே நம்மையறியாமல் நம்மிடம் ஒரு பரவசம் ஏற்படுவது இயற்கையே. அதிலும் இயற்கையான காடுகள் சூழ்ந்த மலைப்பகுதிகளில் பயணம் மேற்கொள்வோர் அனைவருமே ஒரு புத்துணர்ச்சியை பெறுவார்கள். அந்த வகையில் “ஏழுமலைகள்” கொண்ட “திருப்பதி, திருமலை” மலைத் தொடர்களைப் போலவே, தமிழ்நாட்டிலும் பல அதிசயங்களை தனக்குள் கொண்ட ஒரு புண்ணிய மலைத் தொடர் தான் வெள்ளியங்கிரி மலை. அந்த மலையில் கண்ட சிவதரிசனம் குறித்த வீடியோ இதோ.

- Advertisement -

வெள்ளியங்கிரி மலை சிவ பூஜை விடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

“தென் கயிலாயம்” என போற்றப்படும் கோவைக்கு அருகிலுள்ள பல சித்தர்கள் தவம் புரிந்த புனிதமான “வெள்ளியங்கிரி மலை” உள்ளது. இது திருவேங்கடம் மலைப் போல் ஏழு மலைகளால் ஆன, சித்தர்களும் ரிஷிகளும் தவம் புரியும் ஒரு ஆன்மீக பூமி. இந்த ஏழு மலைகள் ஒவ்வொன்றும் ஒரு வகையான அதிசயத்தை கொண்டிருப்பதாக கூறுகிறார்கள் இங்கு அடிக்கடி வருபவர்கள். மேலும் இங்கு ஒரு மலையிலுள்ள “ஆண்டி சுணை” எனப்படும் ஒரு நீர்நிலையின் தோற்றுவாயை யாரும் கண்டதில்லை எனவும், இச்சுனையில் ஒரு மனித எலும்பை வீசினோமென்றால், அது சிறிது காலத்தில் கல்லாக மாறிவிடும் எனக்கூறப்படுகிறது. மேலும் இந்த வெள்ளியங்கிரி மலைத் தொடரில் ஏழாவது மலை ஏறும் வழியில் உள்ள ஒரு மலை முழுவதும் “விபூதி” போன்ற மண்ணைக் கொண்டதாக இருக்கிறது. இதை இங்கு வரும் பக்தர்கள் எடுத்துச்செல்வதால், இம்மலையின் அமைப்பு பாதிக்கப்படுவதாக வருந்துகின்றனர் சிலர்.

கடினமான பயண வழிகளைக் கொண்ட அந்த ஏழாவது மலையில் ஏறி, விடியற்காலையில் அங்கிருந்து கிழக்கில் சூரியன் உதிக்கும் காட்சியை பார்க்கும் போது, சித்தர்களின் விருப்பத்திற்குரிய கடவுளான அந்த “சிவ பெருமானே” அந்த சூரியனின் ஒளி வடிவில் காட்சி தரும் அனுபவத்தை நாம் பெற முடியும். என்று இங்கு அடிக்கடி புனிதப் பயணமாக வருபவர்களும், இம்மலைகளில் நிரந்தரமாக தங்கியிருக்கும் சில யோகிகளும் கூறுகிறார்கள்.

- Advertisement -