வெண்டைக்காயுடன் தயிர் சேர்த்து இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் இதன் சுவை நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு இருக்கும்.

vendai-curd-gravy
- Advertisement -

சமையல் ருசிக்க தினம் தினம் விருந்து படைக்க வேண்டிய அவசியமில்லை. நமக்குத் தெரிந்த சமையலயே சிறிது சிரத்தையுடன் பாரம்பரியமும், புதுமையும் கலந்து செய்தோம் என்றால் உணவு வேளை மிகவும் இனிதாக இருக்கும். வெண்டைக்காயை வைத்து சாம்பார், பொரியல், வறுவல் இதை மட்டும் தான் அடிக்கடி செய்து வருகின்றோம். வெண்டைக்காயுடன் தயிர் சேர்த்து செய்யும் இந்த சுவையான கிரேவியை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

vendaikai1

தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் – கால் கிலோ, தயிர் – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 2, இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், கொத்தமல்லி – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
வெண்டைக் காய்களை நன்றாக தண்ணீரில் அலசிக் கொண்டு சற்று நீளமாக அனைத்தும் ஒரே அளவில் இருக்குமாறு நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். வெண்டைக்காயை வதக்கும் பொழுது அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கிக் கொண்டால் வெண்டைக்காயின் கொழகொழப்புத் தன்மை குறைந்து சிறிது நேரத்திலேயே அவை நன்றாக வதங்கி விடும். பிறகு அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

vendikai1

அதே கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து அவை நன்றாக சிவந்து பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் அடுப்பினை சிறிய தீயில் வைத்துக் கொண்டு வெங்காயத்துடன் அரை ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் தனியா தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, அவை அனைத்தும் எண்ணெயில் நன்றாக வதங்கிய பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் சேர்த்து குழையுமாறு வதக்கிக் கொள்ள வேண்டும்.

thayir-kadaithal

பிறகு இவற்றுடன் கட்டிகள் இல்லாமல் கரைத்து வைத்துள்ள தயிரையும் அதனுடன் ஒன்றரை கப் தண்ணீரையும் சேர்த்து ஒன்றாக கலந்து விட வேண்டும். பிறகு கடாயை மூடி 5 நிமிடம் அப்படியே கொதிக்க விடவேண்டும். பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்றாக கலந்து விட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை அடுப்பை சிறிய தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் அருமையான ஹோட்டல் சுவையில் இருக்கும் வெண்டைக்காய் கிரேவி தயாராகிவிடும்.

vendai-curd-gravy1

இந்த மணமணக்கும் வெண்டைக்காய் கிரேவியை சுடச்சுட சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட நாவில் எச்சில் ஊறும் அளவிற்கு அவ்வளவு சுவையாக இருக்கும். இதனை இட்லி, தோசை, சப்பாத்திக்கும் கூட சைட் டிஷ்ஷாக வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -