வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை போடும் முறை

pray amman
- Advertisement -

அம்மன் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது என்றால் அது எலுமிச்சை பழ மாலை சாற்றுவது தான். அப்படி நாம் சாற்றும் எலுமிச்சை பழ மாலையை சாதாரணமாக கடைகளில் வாங்கியோ அல்லது பழத்தை வாங்கி வந்து அப்படியே மாலையாக தொடுத்தோ போடக் கூடாது. அந்த மாலையை கட்டி போடுவதற்கும் சில சம்பிரதாயங்கள் உண்டு. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளலாம்.

வேண்டுதல் நிறைவேற எலுமிச்சை பழ மாலை

இந்த மாலையை அம்மனுக்கு சாற்றுவதற்கு முன்பாக நல்ல தரமான எலுமிச்சை பழங்களை கடைகளில் பார்த்து வாங்கி வர வேண்டும். இந்த எலுமிச்சை பழங்களை 9, 18, 27,36, என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அதாவது பழங்கள் 9 ஒன்பதாக அதிகரிக்க வேண்டும் அது போல வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது.

- Advertisement -

இப்படி வாங்கி வந்த எலுமிச்சை பழங்களை வீட்டில் சுத்தமான தண்ணீரில் கொஞ்சம் பன்னீ ரையும் ஊற்றி அதில் இந்த பழங்களை போட்டு நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல் எலுமிச்சை பழங்களை கோர்க்க நூலோ கயிறு பயன்படுத்தாமல் நாரை பயன்படுத்த வேண்டும். முன்பெல்லாம் பூ கட்ட நாரை பயன்படுத்துவோம் அல்லவா அதை பயன்படுத்த வேண்டும். இது கிடைக்காதவர்கள் மட்டும் மஞ்சள் தேய்த்த நூலை பயன்படுத்துங்கள்.

அதன் பிறகு நீங்கள் எத்தனை எலுமிச்சம் பழங்களை வாங்கி இருக்கிறீர்களோ அத்தனை வெற்றிலைகளை வாங்கி கொள்ளுங்கள். ஒவ்வொரு வெற்றிலையும் உருட்டி நூல் போட்டு கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் கோர்க்கும் மாலையில் முதலில் எலுமிச்சை பழத்தை கோர்த்து விடுங்கள். அதன் பிறகு வெற்றிலையை சேர்த்து போடுங்கள். மறுபடியும் ஒரு எலுமிச்சம் பழம் அதன் பிறகு வெற்றிலை இவ்வாறாக மாலை முழுவதும் வெற்றிலையும் எலுமிச்சம் பழத்தையும் கலந்து கட்ட வேண்டும்.

- Advertisement -

இப்படி கட்டிய மாலையில் உங்கள் வீட்டில் வைத்து வேண்டிய பிறகு நீங்கள் எந்த அம்மனுக்கு சாற்றுவதற்காக வேண்டி இருக்கிறீர்களோ அங்கு கொண்டு சாற்றுங்கள். அப்படி வணங்கும் பொழுது நிச்சயம் ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தை அம்மனுக்கு வைத்து வணங்க வேண்டும்.

அடுத்து பெரும்பாலான செய்யும் தவறு இப்படி எலுமிச்சம் பழ மாலையை சாற்றி அதை வீட்டிற்கு வாங்கிக் கொண்டு வருவார்கள். அப்படி செய்யக் கூடாது. அம்மனுக்காக மாலை தொடுத்து கொடுத்தால் அது அவர்களுக்கானது அவர்களிடமே கொடுத்து விட வேண்டும். இந்த மாலையை தொடுத்து போடுவதற்கு முன் மூன்று நாட்கள் விரதம் இருந்து செய்ய வேண்டும். அப்போது தான் அதிக பலனை கொடுக்கும்.

- Advertisement -

அதே போல் இந்த மாலையை அம்மனுக்கு அனுவிக்கும் போது அந்த இடத்தில் இருக்கும் சூலத்திற்கும் இதே போல் சின்னதாக ஒரு எலுமிச்சை மாலையை வெற்றிலையுடன் சேர்த்து கட்டி போட வேண்டும். பொதுவாக எலுமிச்சை பழ மாலை என்றால் நாம் கோவிலுக்கு செல்வோம் அங்கு கடைகளில் விற்கும் மாலையை அப்படியே வாங்கி சாற்றி விட்டு விடுவோம். இது சாதாரணமாக அம்மனுக்கு சாற்ற விருப்பப்படுபவர்கள் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: சகல ஐஸ்வர்யம் தரும் கோமாதா மண்

ஏதேனும் ஒரு முக்கியமான வேண்டுதல் வைத்து அதை நிறைவேற செய்பவர்கள் இந்த முறையில் செய்தால் தான் நல்ல பலனை உடனடியாக பெற முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது விளையாட்டு இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதே போல செய்து நல்ல பலனை அடையலாம்.

- Advertisement -