நினைத்த காரியம் நடக்க வெற்றிலை வழிபாடு

hanuman vetrilai
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் தெய்வத்தை தரிசிப்பதற்காக மட்டும் ஆலயம் செல்வம் மிகவும் குறைவு தான். நம்முடைய காரியங்கள் நல்லபடியாக நிறைவேற இறைவனின் அருளை வேண்டி தான் பெரும்பாலும் அனைவரும் கோவிலுக்கு செல்கிறோம். இதை தவறு என்றும் சொல்ல முடியாது நமக்கு வேண்டியதை இறைவனைத் தவிர வேறு யாரிடத்தில் சென்று கேட்பது. இந்த காரியம் நிறைவேறினால் இதை செய்கிறேன் என்று சிலர் வேண்டுவார்கள்.

சிலர் தெய்வத்திற்கு உகந்த பொருட்களை அவர்களுக்கு படைத்து தங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என கேட்டுக் கொள்வார்கள். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு பொருட்கள் மாறு படும். அந்த வகையில் ஆஞ்சநேயர் வழிபாட்டு எனில் வெற்றிலை மாலையை சாற்றி வணங்குவது தான் முறை. அந்த வெற்றிலை மாலை எப்படி சாற்றி வணங்கினால் நம்முடைய வேண்டுதல் உடனே நிறைவேறும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

நினைத்த காரியம் நடக்க வெற்றிலை மாலை

ஆஞ்சநேயருக்கு உகந்த இரண்டு பொருட்களில் ஒன்று வெற்றிலை. இன்னொன்று வெண்ணை. இது இரண்டையும் தான் பெரும்பாலும் அனைவரும் வைத்து வணங்குவார்கள். இவை அனைத்திலும் இந்த வெற்றிலை மாலை தனியான சிறப்பை பெற்றது. இதற்கு காரணம் வெற்றியை தர கூடிய வெற்றிலை மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபடும் பொழுது தங்களுடைய வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்மில் இருந்து வரும் அசைக்க முடியாத நம்பிக்கை.

அப்படி சாற்ற கூடிய வெற்றிலை மாலையை இந்த எண்ணிக்கையில் சாற்றி வழிபட்டால் நம்முடைய வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஆஞ்சநேயருக்கு 108 வெற்றிலைகள் வைத்து மாலையாக தொடுக்க வேண்டும். இந்த 108 நாம் அப்படியே தொடுக்கக் கூடாது. இந்த 54 வெற்றிலையில் உங்களுக்கு நிறைவேற வேண்டிய காரியத்தை எழுத வேண்டும். வெற்றிலையில் செந்தூரம், குங்குமம், மஞ்சள், சந்தனம் என ஏதாவது ஒன்றை குழைத்து எழுதலாம்.

- Advertisement -

இத்துடன் இந்த வெற்றிலையில் ஸ்ரீராம ஜெயம் என்ற நாமத்தையும் எழுத வேண்டும். மற்றொரு வெற்றிலையில் லேசாக வெண்ணை தடவி அதில் சீவல் கொஞ்சம் வைத்து கொள்ள வேண்டும். இப்போது முதலில் நீங்கள் எழுதிய வெற்றிலையில் இரண்டாவது வெண்ணை தடவிய வெற்றிலையும் ஒன்றாக வைத்து மடித்து கொள்ள வேண்டும். அதை ஒரு வெற்றிலையாக கணக்கில் கொண்டு கட்ட வேண்டும். இப்படியாக 108 வெற்றிலைகளை 54 என்ற எண்ணிக்கையில் கட்ட வேண்டும்.

இப்படி கட்டிய வெற்றிலையுடன் தயிர் சாதத்தை நெய்வேத்தியமாக செய்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு சாற்றி நெய்வேத்தியம் படைக்க வேண்டும். இந்த முறையில் வழிபடும் போது நீங்கள் வேண்டுமென அனைத்தும் விரைவில் கை கூடும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை போடும் முறை

ஆஞ்சநேயர் வழிபாடு எத்தனை சிறப்பானது என்பது ஆஞ்சநேயரை வணங்குபவர்களுக்கு தெரியும். அதிலும் அவருக்கு சாதாரணமாக வெற்றிலை மாலை வெண்ணெய் வைத்தாலே கொள்ளை பிரியம். இந்த முறையில் வைத்து வணங்கும் போது நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -