வேண்டுதல் நிறைவேற விநாயகர் வழிபாடு

venduthal
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காரியங்கள் நடைபெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த காரியங்களுக்காக முயற்சி செய்தும் அது நடக்காத பட்சத்தில் இறைவனிடம் அதை வேண்டுதலாக வைப்போம். உதாரணமாக நோய்கள் தீர வேண்டும், திருமணம் விரைவில் நடைபெற வேண்டும், குழந்தைகள் சிறப்பாக படிக்க வேண்டும், சிறந்த ஒழுக்கமான குழந்தையாக வளர வேண்டும், கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்க வேண்டும் இப்படி பல வேண்டுதல்கள் இருக்கின்றன.

இந்த வேண்டுதல்களுக்காக நாம் இறைவனை வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்யும்பொழுது எத்தனை நாட்களில் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது நமக்கு தெரியாது. முழு நம்பிக்கையுடன் நாம் அந்த வேண்டுதலை மட்டும் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஆனால் இந்த முறையில் நாம் விநாயகர் பெருமானை வழிபட்டால் அவரே எத்தனை நாட்களில் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பதை கூறிவிடுவார். அப்படிப்பட்ட வழிபாடு என்னவென்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதவியில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று தான் ஆரம்பிக்க வேண்டும். இந்த வழிபாட்டை ஆரம்பிப்பதற்கு முன்பாக 8 சதுர வடிவில் இருக்கக்கூடிய வெள்ளை காகிதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 8, 17, 26, 35, 44, 53, 62, 71 என்ற இந்த எட்டு எண்களை ஒவ்வொரு காகிதத்திலும் எழுத வேண்டும். பிறகு இதை நான்காக மடித்து விநாயகர் பெருமானுக்கு முன்பாக வைத்து விட வேண்டும்.

அடுத்ததாக விநாயகப் பெருமானுக்கு முன்பாக ஒரு சிறிய தட்டை வைத்து அந்த தட்டிற்கு மேல் அவருக்கென்று தனியாக ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு முன்பாக ஒரு வெள்ளை நிற நூலை எடுத்து அதில் மஞ்சள் தடவி கொள்ள வேண்டும். பிறகு அதை சுற்றி நாம் விநாயகருக்காக ஏற்ற இருக்கும் விளக்குக்கு அடியில் தாம்பாளத்திற்கு மேலே வைத்து விட வேண்டும். இப்பொழுது விநாயகப் பெருமானுக்கு தீபம் ஏற்றி வைத்து அவருக்கு வெற்றிலை பாக்கு வாழைப்பழத்தை நெய்வேத்தியமாக வைத்து காரிய சித்தி மாலையை பாட வேண்டும். அடுத்ததாக விநாயகர் அகவலை பாட வேண்டும்.

- Advertisement -

இந்த முறையில் தொடர்ந்து 48 நாட்கள் தினமும் காலையில் விநாயகருக்கு தீபம் ஏற்றி காரியசித்தி மாலையையும் விநாயகர் அகவலையும் படிக்க வேண்டும். 48 வது நாள் படித்து முடித்த பிறகு வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளை அழைத்து நாம் ஏற்கனவே மடித்து வைத்திருக்கும் எட்டு சீட்டுகளையும் விநாயகருக்கு முன்பாக வைத்திருக்கிறோம் அல்லவா? அதில் இருந்து ஒரு சீட்டை எடுக்க சொல்ல வேண்டும். குழந்தைகள் இல்லாத பட்சத்தில் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் அதை செய்யலாம். எடுத்த சீட்டில் எந்த எண் வந்திருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

உதாரணமாக 17 என்று வந்திருந்தால் நாம் விளக்குக்கு அடியில் நூல் வைத்திருக்கிறோம் அல்லவா? அந்த நூலை எடுத்து “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை கூறி 17 முடிச்சுகள் போட வேண்டும். 17 முறையும் மந்திரத்தை கூற வேண்டும். இது 62 என்று வந்தால் 62 முறை மந்திரத்தை கூறி மூச்சுகளை போட வேண்டும். முடிச்சுகளை போட்ட பிறகு அருகில் இருக்கும் அரச மரத்தடி விநாயகர் கோவிலுக்கு சென்று இந்த முடிச்சு போட்ட காப்பை வேண்டுதலை கூறி அரச மரத்தில் கட்டி விட்டு யாருக்காக இந்த வேண்டுதலை செய்தோமோ அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்ப வேண்டும்.

- Advertisement -

தங்களால் இயன்ற அளவு யாருக்காவது ஒருவருக்கு அன்னதானம், வஸ்திரதானம் போன்றவற்றை செய்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். நாம் வேண்டிய வேண்டுதல் எந்த எண் வந்ததோ, அதாவது 17 என்ற எண் வந்திருந்தால் நாம் இந்த வழிபாட்டை முடித்த 17 நாட்களுக்குள் நம்முடைய வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகள் நம்மை தேடி வரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தை அமாவாசை அன்று படிக்க வேண்டிய அபிராமி அந்தாதி

மிகவும் எளிமையான இந்த விநாயகர் வழிபாட்டை சுத்தமான மனதுடன் முழு நம்பிக்கையுடன் மேற்கொள்பவர்களுடைய வேண்டுதல் கண்டிப்பாக முறையில் நிறைவேறி விடும்.

- Advertisement -