கடவுளை வணங்கியும் கெடுதல் நடப்பது ஏன்? கோவிலுக்கு சென்று வந்தும் நிம்மதி இல்லாமல் போவது எதனால்?

bramma-praying
- Advertisement -

எந்த ஒரு மனிதனும் அதிகமாக நம்புவது இன்னொரு மனிதனை அல்ல, அந்த கடவுளைத்தான் அவன் அதிகமாக நம்புகிறான். நமக்கு எப்பொழுதும் தீங்கு இழைக்காத இறைவனை எந்த மதத்தினராக இருந்தாலும், எந்த சாதியினராக இருந்தாலும் அவரவர்கள் விருப்பப்படி அவரவர் வழக்கப்படி ஏற்றுக் கொண்டு முழு மனதாக நம்பி வழிபடுகிறோம். ஆனால் அந்த நம்பிக்கை சில சமயங்களில் வீணாகும் பொழுது கடவுளே இல்லை என்கிற முடிவுக்கு வந்து விடுகிறோம். ஏன் இப்படி நடக்கிறது? என்கிற கேள்விக்கு விடை காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

bramma1

ஒரு மனிதன் பிறக்கும் பொழுதே அவன் ஆயுளும் நிர்ணயிக்கப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை. நீங்கள் இறக்கும் தருவாயில் இறைவனை வேண்டினாலும், உங்களை படைத்த இறைவனால் கூட உங்களை காப்பாற்ற முடியாது என்பது தான் உண்மை. இந்த உண்மையை அனைவரும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். பிறக்கும் பொழுதே ஒரு மனிதனுக்கு 3 வெவ்வேறு சமயங்களில் கண்டங்கள் வரும். அந்த மூன்று கண்டங்களை தாண்டி தான் ஆயுட்காலம் முடிவடையும் என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

இப்படி முடிவடைவதற்குள் வரக்கூடிய இந்த மூன்று கண்டங்களை எதிர்கொள்வதற்கு தான் ஆன்மீகமும், பரிகாரங்களும், இறை வழிபாடுகளும், தான தர்மங்களும் உதவியாக இருக்கின்றன. நீங்கள் செய்யக் கூடிய புண்ணிய பலன்களுக்கு ஏற்ப இறைவன் உங்களுக்கு வரக்கூடிய இந்த 3 கண்டங்களில் இருந்து பாதுகாப்பு கொடுப்பார். பாவங்களை செய்து கொண்டிருந்தால் அந்த கண்டங்களில் இருந்து எப்படி தப்பிக்க முடியும்? பூர்வ புண்ணிய பலன்களும் இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் பாவங்களுக்கும் ஏற்ப அந்த கண்டங்களும் வந்து செல்லும்.

praying-god1

மூன்று முறை உங்களை காப்பாற்றிய அந்த கடவுளால் கடைசி முறை உங்கள் ஆயுள் முடிவடையும் பொழுது நீங்கள் என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாமல் போகும். விதிப்பயன் இந்த நேரத்தில், இந்த நாழிகையில் முடிவடையும் என்று ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டதால் அதனை மாற்றி எழுதும் சக்தி எவருக்கும் இல்லை. ‘நான் கடவுளை வேண்டினேன், ஆனால் என்னால் இந்த உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே’ என்று புலம்புவதில் நியாயமில்லை. அவரவர் செய்த பாவங்களுக்கும், புண்ணியங்களுக்கு ஏற்ப தான் பலன்களும் அமையும்.

- Advertisement -

புண்ணிய காரியங்களை அதிகமாக செய்யச் சொல்வதும் இதனால் தான். நல்லது செய்தால் நல்லது நடக்கும். நீங்கள் செய்த நல்லவைகளுக்கு ஏற்ப பலன்களும் உண்டாகும். நிர்ணயிக்கப்பட்ட ஆயுட் காலம் முடிவடையும் தருவாயில் இருக்கும் போது, நீங்கள் எந்த கடவுளை வேண்டினாலும் சரி, எந்த கோவிலுக்கு சென்றாலும் சரி நடப்பது நடந்து தான் தீரும். நான் கோவிலுக்கு தானே சென்றேன்? ஆனால் வரும் வழியில் விபத்து நேர்ந்து விட்டது! பிறகு நான் வேண்டியதன் பலன் என்ன? என்று பலரும் கூற நாம் கேட்டிருப்போம்.

praying-god

கோவிலுக்கு செல்லும் வழியில் விபத்து நடப்பது, இறைவனை வணங்கிய பின்னர் உயிர் பிரிவது போன்ற விஷயங்கள் எல்லாம் கடவுள் கையில் இல்லை. நாம் செய்யும் பாவ புண்ணிய பலன்கள் கையில் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே வாழும் பொழுதே உங்களால் எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ! அவ்வளவு நல்லது செய்யுங்கள். எவருக்கும் தீங்கு நினைக்காமல் நீங்கள் நல்லவர்களாக இருந்தால் உங்களுக்கு தான் நல்லது நடக்க போகிறது.

- Advertisement -