நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான வேண்டுதல்கள் என்பது இருக்கும். அவர் அவருடைய தேவைக்கேற்றார் போல் வேண்டுதல்களும் மாறுபடும். ஒரு சிலருக்கு குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், உடல் நோய்கள் தீர வேண்டும், வேலை கிடைக்க வேண்டும், திருமணம் விரைவில் நடைபெற வேண்டும், குழந்தை பாக்கியம் உண்டாக வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும். இந்த அனைத்து வேண்டுதல்கள் நிறைவேற்றுவதற்குரிய அற்புதமான தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வேண்டுதலை நிறைவேற்றும் தீப வழிபாடு
எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது தீபம் தான். தீபம் ஏற்றுவதற்கு நாம் பயன்படுத்தக்கூடிய விளக்கு பல வகைப்படும். எந்த விளக்காக இருந்தாலும் முழு மனதோடு எந்த தெய்வத்தை நினைத்து நாம் தீபம் ஏற்றுகின்றோமோ அந்த தெய்வத்தின் அருளை பெறுவதற்கு உதவும். அப்படிப்பட்ட தீபத்தை நாம் பல விதங்களில் சிறப்பு வாய்ந்த தீபங்களாக மாற்ற முடியும். அதன் அடிப்படையில் தான் இந்த பதிவில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கப் போகிறோம்.
நமக்கு நடக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் காரணமாக திகழக்கூடியவர்கள் நவகிரகங்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் என்பது இருக்கும். நம்முடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடைபெறாமல் தடைப்பட்டிருந்தால் அந்த நல்ல காரியத்திற்கு உரிய கிரகம் எதுவோ அந்த கிரகத்தை வழிபாடு செய்யும்பொழுது அந்த காரியம் எந்தவித தடைகளும் இல்லாமல் நல்ல விதத்தில் நடைபெறும்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு நல்லெண்ணெய் மற்றும் சந்தனாதி தைலம் வேண்டும். சந்தனாதி தைலம் என்பது நேர்மறை ஆற்றல் நிறைந்த ஒரு தைலமாக திகழ்கிறது. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கக் கூடியது. பொதுவாக இந்த தைலத்தை அனைத்து தெய்வ ஆலயங்களிலும் அபிஷேகம் செய்வதற்கு முன்பாக எண்ணெய் காப்பு சாற்றும் வழக்கம் இருக்கும் அல்லவா? அப்பொழுது உபயோகப்படுத்துவார்கள். இதை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த வேண்டுதலுக்குரிய கிரகம் எது என்பதை கண்டறிய வேண்டும். உதாரணமாக வேலை தொடர்பான வேண்டுதல், உடல் ஆரோக்கியம் தொடர்பான வேண்டுதலுக்கு ஞாயிற்றுக்கிழமை. குடும்பத்தில் ஒற்றுமைக்கு திங்கட்கிழமை. கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர, சொந்த வீடு அமைய செவ்வாய்க்கிழமை. குழந்தைகள் சிறப்பாக படிக்க புதன்கிழமை. மங்கள காரியங்கள் நடைபெற வியாழக்கிழமை. சுகபோகமான வாழ்க்கை வாழ வெள்ளிக்கிழமை. கர்ம வினைகளும் பாவங்களும் தீர சனிக்கிழமை.
இப்படி நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்றார் போல் கிழமையை தேர்வு செய்து அந்த கிழமைக்குரிய கோரையான காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் ஒரு தட்டை எடுத்து அதில் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதனுடன் ஒரு ஸ்பூன் சந்தனாதி தைலத்தையும் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இது கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். தரையில் ஒரு விரிப்பை விரித்து வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு இந்த தீபச்சுடரொலியை பார்த்தவாறு நம்முடைய வேண்டுதல் என்னவோ அதை முழு மனதோடு நம்முடைய நண்பர்களிடம் கூறுவது போல் கூற வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து நிமிடத்தில் இருந்து பத்து நிமிடம் வரை நம்முடைய வேண்டுதலை முன் வைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களையும் தடைகளையும் நீக்கும் வழிபாடு
தீப வழிபாடு சிறப்பு மிகுந்த வழிபாடு என்றாலும் இந்த தீப வழிபாட்டில் இருக்கக்கூடிய சூட்சமத்தை பின்பற்றி யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் வேண்டியது விரைவில் நடந்தேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.