வெங்காயத்தை மட்டும் வைத்து இப்படி ஒரு துவையலா? வேற லெவல் சைட் டிஷ். மிஸ் பண்ணாம ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

chutney3
- Advertisement -

வெங்காயத்துடன், வீட்டில் அத்தியாவசியமாக இருக்கும் இன்னும் சில பொருட்களை சேர்த்து காரசாரமாக சூப்பரான ஒரு வெங்காய துவையல் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். காலையில் இந்த துவையல் செஞ்சு வச்சு இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். மதியம் சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம். அவ்வளவு தான் இரண்டு வேலைக்கும் சமையல் முடிந்தது. நேரத்தைக் கடத்தாமல் நாமும் அந்த ரெசிபியை முதல்ல தெரிஞ்சு வச்சுக்கலாம்.

onion-rice1

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். மீடியம் சைஸில் இருக்கும் பெரிய வெங்காயம் நீளவாக்கில் வெட்டியது – 2, தோலுரித்த சின்ன வெங்காயம் –  100 கிராம், இந்த இரண்டு வெங்காயத்தையும் எண்ணெயில் போட்டு நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி வந்தவுடன் அதன்பின்பு, கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வதக்குங்கள்.

- Advertisement -

அதாவது வெங்காயம் பச்சை வாடை போகும் அளவிற்கு வரக்கூடிய ஸ்டேஜ் நமக்கு தெரியும் அல்லவா, அப்போது இஞ்சி – 1 சிறிய துண்டு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, மிளகாய் தூள் – 2 ஸ்பூன் நெல்லிக்காய் அளவு – புளி, சிறிய துண்டு வெல்லம், இந்த பொருட்களை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கவேண்டும். மிளகாய்தூளின் பச்சை வாடை முழுமையாக நீங்கட்டும் அவ்வளவு தான். அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த விழுது நன்றாக சூடு ஆறட்டும்.

onion-thokku2

மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வதக்கிய வெங்காயத்தை அப்படியே மிக்ஸி ஜாருக்கு மாற்றி தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் எதுவும் ஊற்றாமல் கொஞ்சம் கொரகொரப்பாக, வெங்காயம் ஆங்காங்கே தெரியும்படி அரைத்து இதை ஒரு சின்ன கிண்ணத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். இதற்கு 2 ஸ்பூன் நல்லெண்ணெயில், கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி கலந்து விடுங்கள். வேற என்ன வேணும். இந்த துவையலுக்கு அப்படி ஒரு சுவை. வெங்காயம் மட்டும் இருந்தால் வேலை சட்டென்று முடிஞ்சுது.

- Advertisement -

பின்குறிப்பு: இதை முழுக்க முழுக்க சின்ன வெங்காயத்தை வைத்தும் செய்யலாம். முழுக்க முழுக்க பெரிய வெங்காயத்திலும் செய்யலாம். அது நம்முடைய விருப்பம் தான். மிளகாய்த்தூளை அவரவர் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளுங்கள். மிளகாய்தூள் கட்டாயமாக எண்ணெயில் வெந்து இருக்க வேண்டும். ஏனென்றால் மீண்டும் இதை நாம் அடுப்பில் வைத்து சூடு செய்யப்போவது கிடையாது.

onion-chutney0

மிளகாய்தூள் வேகவில்லை என்றால் வயிற்றுப் பிரச்சனை வரும். வெங்காயம் நன்றாக வதங்க வில்லை என்றால் சட்னியில் பச்சை வாடை அடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -