மூணு தக்காளியும் ஒரு வெங்காயம் இருந்தா சப்பாத்தி பூரி தோசைக்கெல்லாம் ஒரு ஸ்பெஷலான ஆனியன் மசாலா ரெடி. அப்படியே இது ஸ்பெஷலா இருக்குறதுக்கான சீக்ரெட் டையும் தெரிஞ்சுக்கோங்க.

- Advertisement -

சப்பாத்தி பூரி மசால் தோசைக்கெல்லாம் செய்யப்படும் இந்த உருளைக்கிழங்கு மசாலா மிகவும் சுவையாகவே இருக்கும் ஆனாலும் சிலருக்கு இந்த உருளைக்கிழங்கை சேர்த்து செய்யும் போது பிடிக்காது. சிலருக்கு உருளைக்கிழங்கு ஒத்துக் கொள்ளாது. இந்த முறையில் செய்யும் பொழுது உருளைக்கிழங்குகே தேவை கிடையாது. உருளைக்கிழங்குகை சேர்த்து செய்யும் மசாலாவை விடவே இந்த ஆனியன் மசாலா ரொம்ப டேஸ்டா இருக்கும். அதை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த மசாலா செய்வதற்கு முதலில் மூன்று பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்து கொள்ளுங்கள். இத்துடன் ஒரு பெரிய தக்காளியும், ஐந்து பச்சை மிளகாய் பாதியாக கீறியும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஐந்து பல் பூண்டு ஒரு சிறிய துண்டு இஞ்சி இரண்டையும் ஒன்றும் பாதியுமாக நசுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த மசாலாவை தாளித்து விடுவோம். அதற்கு அடுப்பில் கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் ஒரு ஸ்பூன் கடுகு ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மூன்றும் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

இதன் பிறகு அரிந்து வைத்த வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் பச்சை மிளகாய் ஓரளவிற்கு வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு இரண்டையும் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கிய பின்னர் ஒரு டீஸ்பூன் சில்லி ப்ளாக்ஸ், கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் இவை எல்லாம் சேர்த்து மீண்டும் ஒரு முறை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதையெல்லாம் வதங்கி குழைந்து வரும் பொழுது அரிந்து வைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். தக்காளி அதிகம் குழைந்து வர வேண்டிய அவசியம் கிடையாது. இப்போது இதில் ஒரு டேபிள் ஸ்பூன் கடலை மாவை சேர்க்க வேண்டும் இந்த கடலை மாவு சேர்க்கும் விதம் தான் இதில் மிகவும் முக்கியம். இந்த கடலை மாவை நாம் அப்படியே சேர்த்து விடக் கூடாது இதை தனியாக ஒரு கடாயில் போட்டு மிதமான தீயில் லேசாக வறுத்த அந்த மாவை தான் இதில் சேர்க்க வேண்டும் அப்போது தான் சுவை அதிகமாக இருக்கும்.

இவையெல்லாம் சேர்த்த பிறகு கால் கப் தண்ணீர் ஊற்றி உப்பை சரி பார்த்து போதவில்லை எனில் கொஞ்சமாக சேர்த்த பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் மட்டும் கொதிக்க விட்ட பிறகு கொத்தமல்லி தழைகளை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். சுவையான ஆனியன் மசாலா தயாராகி விட்டது.

இதையும் படிக்கலாமே: இனி சமைக்கத் தெரியாதவர்கள் சாம்பார் வைத்தால் கூட அது, அமிர்தமாக சுவையாக தான் இருக்கும். வீட்டிலேயே மிக்ஸி ஜாரில் அரைக்கும் இந்த சாம்பார் பொடியின் ரகசிய குறிப்பு உங்களுக்கு தெரிந்தால்.

இனி சப்பாத்தி பூரி இவையெல்லாம் செய்யும் போது உருளைக்கிழங்கு இல்லை என்றாலும் சட்டு என்று வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து உடனடியாக இந்த ஆனியன் மசாலாவை செய்து விடலாம். உருளைக்கிழங்கு மசாலா பிடிக்காதவர்கள் கூட இந்த மசாலாவை விரும்பி கேட்டு சாப்பிடுவார்கள் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -