இந்த தீபத்தை ஒரு நாள் ஏற்றினால் கூட போதுமே! ஆயுசுக்கும் உங்கள் வீட்டில் தரித்திரம் பிடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

deepam

சில பேர் வீடுகளில் சில வார்த்தைகளை உச்சரிக்க கூட தயங்குவார்கள். அதாவது தரித்திரம், பீடை, மூதேவி இப்படிப்பட்ட எதிர்மறை ஆற்றல்களை விளைவிக்கக்கூடிய, பிரச்சினைகளை நமக்கு தேடி தரக்கூடிய இந்த வார்த்தைகளை எல்லாம் குடித்தனம் செய்யும் வீட்டில் உச்சரிப்பதையே தவறாக, அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வைத்திருந்தார்கள். சில பேர், சில சமயங்களில் அடுத்தவர்கள் மனதை காயப்படுத்தும் அளவிற்கு, அடுத்தவர்களை திட்டுவதற்கு இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். முடிந்தவரை இப்படிப்பட்ட வார்த்தைகளை நம்முடைய வீட்டில் பேசுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. இந்த வார்த்தைகளை நாம் உச்சரித்தால் நாம் திட்டியவர்களுக்கு, இந்த வார்த்தைக்கான பலன் போய் சேருதோ இல்லையோ, யார் வாயால் இந்த வார்த்தையை உச்சரிக்கிறார்களோ, அவர்களுக்கு கட்டாயம் கஷ்டம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Neem

சரிங்க, வீட்டில் தரித்திரம் பிடிக்காமல் இருக்க, வீட்டை பிடித்திருக்கும் பீடையை ஓட ஓட விரட்ட, நம்முடைய வீட்டில் சுலபமான முறையில் எப்படி வழிபாடு செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதோடு சேர்த்து சுக்கிரன் யோகத்தை பெற, பண வரவு அதிகரிக்க ஒரு சின்ன டிப்ஸ் உங்களுக்காக இந்த பதிவின் இறுதியில்.

தெய்வீக விருட்சம் என்று சொல்லப்படும் வேப்பமரம், அந்த காலத்தில் நிறையபேர் வீட்டு வாசலில் இருந்தது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். இந்த வேப்ப மரம் ஆன்மீக ரீதியாகவும் நல்லது, ஆரோக்கிய ரீதியாகவும் நன்மை தரக்கூடிய ஒரு விஷயம்.

nila-vasal

இன்றைய சூழ்நிலை வேப்பமரத்தை பார்ப்பதே அரிதாகிவிட்டது. உங்களுடைய வீட்டில் நில வாசல் படியில் தீபமேற்றும் பழக்கம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, வேப்ப இலை எப்போதெல்லாம் கிடைக்கிறதோ அதை எடுத்து வந்து வாசப்படியில் இரண்டு பக்கத்திலும் வைத்து, அதன் மேல் இரண்டு மண் அகல் தீபங்களை வைத்து தீபம் ஏற்றினால் நம்முடைய வீட்டில் தரித்திரம் பிடிப்பதற்கும், மூதேவி அடைவதற்கும் வாய்ப்பே கிடையாது என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டை இத்தனை நாட்கள் தான் செய்ய வேண்டும். இப்போது தான் செய்யவேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. காலை நேரத்திலும், இந்த தீபத்தை நீங்கள் உங்கள் நில வாசல் படியில் ஏற்றலாம். மாலை நேரத்திலும் வேப்பிலையை வைத்து அதன்மேல் அகல் தீபத்தை ஏற்றலாம். வாசல்கால் என்று சொல்லப்படும் வாசல் படியின் மேல் வைத்து தீபத்தை ஏற்றி விடாதீர்கள். வாசல் படிக்கு கீழ் பக்கம் வைத்து தீபத்தை ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

deepam

இதேபோல் அத்தி மர குச்சி உங்களுக்கு கிடைத்தால் அதை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாம். சுக்கிரனின் அம்சம் கொண்ட இந்த அத்திமர குச்சியை, மஞ்சள் தண்ணீரால் கழுவி விட்டு, மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து, ஒரு மஞ்சள் துணியில் முடிச்சு போட்டு பூஜை அறையில் வைத்து விட்டால், உங்கள் வீட்டில் சுக்கிரனின் அம்சம் நிறைந்திருக்கும். பிறகென்ன அதிர்ஷ்டமும், பணமும் தானாக தேடி வரப் போகிறது.

aththimaram

அத்தி மரத்தால் செய்த பலகைகளை வாங்கி, பூஜை அறையில் வைத்து, அதன் மேல் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து வழிபாடு செய்தால் கூட, நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். அதாவது அத்தி மரத்தால் செய்யப்பட்ட மரப்பலகைகள், சிலைகள் இவற்றை நம்முடைய வீட்டு பூஜை அறையில் பயன்படுத்துவது நமக்கு அபரிவிதமான யோகத்தை பெற்றுத்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள்! நம்பிக்கையோடு முயற்சி செய்து பார்த்தவர்கள் பலன் அடைந்துள்ளார்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.