இந்த எண்ணையில் தீபம் ஏற்றினாலே நம் வாழ்க்கையில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனைகள் தீரும்.

veppaennai deepam
- Advertisement -

நம்முடைய பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்று தான் தீபம் ஏற்றி வழிபடுவது. வழிபாடு என்றதுமே அதில் கண்டிப்பான முறையில் தீபம் என்ற ஒன்று இருக்கும். நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறும், வேண்டுதலுக்கு ஏற்றவாறும் பல வகைகளில் நாம் தீபம் ஏற்றி வழிபடுகிறோம். ஏன் தீபத்துக்கு என்றே திருநாள் எடுத்து கொண்டாடுவதும் நம்முடைய பண்பாட்டில் தான். இப்படி தீபம் என்பது நம்முடைய வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த எண்ணெயை பயன்படுத்தி எந்த நாட்களில் தீபம் ஏற்றினால் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நாம் காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு, அகல் விளக்கு, கார்த்திகை விளக்கு, துணை விளக்கு என்று பல விளக்குகளை வைத்து தீபம் ஏற்றுவோம். அதிலும் எந்த உலோகத்தில் ஆன விளக்குகளை வைத்து தீபம் ஏற்றுகிறோமோ அதற்கேற்ற பலன் நமக்கு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் எந்த திரியை பயன்படுத்தி தீபம் ஏற்றுகிறோமோ அதற்கும், எந்த எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றுகிறோம் அதற்கும், நமக்கு தனித்தனியாக பலன்கள் என்பது கிடைக்கும்.

- Advertisement -

மேற்சொன்ன இந்த அனைத்து விஷயங்களையும் மனதில் நிறுத்திக் கொண்டு நமக்கு என்ன பலன் வேண்டுமோ அந்த பலனிற்கு ஏற்றவாறு நாம் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பலரும் அவ்வாறுதான் வழிப்பட்டு கொண்டு வருகிறார்கள். இதில் சில எண்ணெய்களை கோவிலில் மட்டும் தான் ஏற்ற வேண்டும் வீட்டில் ஏற்றக்கூடாது என்ற விதிகளும் இருக்கிறது. இந்த பதிவில் நாம் வேப்பெண்ணையை வைத்து வீட்டில் எந்தெந்த கிழமைகளில் தீபம் ஏற்றினால் என்னென்ன பலன் கிடைக்கும் என்று தான் பார்க்க போகிறோம்.

வேம்பு என்றாலே நம் நினைவிற்கு வருவது கசப்பு தான். இந்த வேப்பெண்ணையில் பொதுவாக யாரும் தீபம் ஏற்றி வழிப்பட மாட்டார்கள். ஏனென்றால் அது ஒரு கசப்பான பொருள் அதனால் அதை வீட்டில் ஏற்ற கூடாது. அது முற்றிலும் தவறு. வேப்பெண்ணெயை வைத்து நாம் தீபம் ஏற்றி வழிபட்டால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய கசப்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்த வேப்பெண்ணெய் தீபத்தை நாம் மண் அகலில் தான் ஏற்ற வேண்டும். வேறு எந்த விளக்கிலும் ஏற்றக்கூடாது. வெள்ளிக்கிழமை அன்று காலையில் 6:00 மணியில் இருந்து 7:00 மணிக்குள் நாம் ஒரு அகலில் வேப்பெண்ணையை ஊற்றி தீபம் ஏற்றி, அந்த தீபத்திடம் நம்முடைய பிரச்சனைகளை கூறினால் அந்தப் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும் என்று கூறப்படுகிறது.

ஒரு மனிதனை பாடாய்படுத்தக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் அது உடல் உபாதைகள் தான். உடல் ஆரோக்கியம் இல்லாமல் நோய்வாய் பட்டு இருப்பவர்கள் சனிக்கிழமை அன்று காலை 6:00 மணியில் இருந்து 7:00 மணிக்குள் வேப்பெண்ணை தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அவ்வாறு வழிப்படுவதன் மூலம் அவர்கள் உடலில் இருக்கக் கூடிய நோய்களின் தாக்கம் குறையும்.

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அந்த முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நீக்குவதற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதன் மூலம் நம்மிடமும், நம் வீட்டிலும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலகி நேர்மறை ஆற்றல்கள் ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி அடி எடுத்து வைப்போம்.

இதையும் படிக்கலாமே: பணப்பிரச்சனை தீர புரட்டாசி மாதம் முழுவதும் உச்சரிக்க வேண்டிய பெருமாள் மந்திரம்

இப்படி அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல இந்த வேப்பெண்ணெய் தீபத்தை தொடர்ந்து 48 வாரங்கள் ஏற்றி வந்தால் அதன் பலனை நம்மால் மனப்பூர்வமாக உணர முடியும். நாமும் நம் இல்லத்தில் இந்த தீபத்தை ஏற்றி மனதார வழிபட்டு நன்மை அடைவோம்.

- Advertisement -