சத்தான சுவையான வேர்க்கடலை பொடி அரைப்பது எப்படி? நீங்களும் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க செம டேஸ்டா இருக்கும்.

- Advertisement -

என்னதான் சட்னி சாம்பார் இருந்தாலும் இட்லிக்கு தொட்டுக்கொள்ள, இட்லி பொடி இருந்தால் அதில் தனி சுவை தானே.  விதவிதமான இட்லி பொடியை அரைப்போம். அந்த வரிசையில் நிலக்கடலையை வைத்து சுவையான உடலுக்கு ஆரோக்கியம் தரும் இட்லி பொடி ரெசிபியை எப்படி அரைப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது அவ்வளவு பெரிய கஷ்டம் எல்லாம் ஒன்றும் இல்லை. சரியான அளவுகளில் எல்லா பொருட்களையும் எடுத்து போட்டு வறுத்து அரைத்தால், யார் வேண்டுமென்றாலும் சுவையான நிலக்கடலை இட்லி பொடியை தயார் செய்துவிடலாம். வாங்க ரெசிபிக்கு உள்ள போலாம்.

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ள வேண்டும். அதில் 1 கப் அளவு நிலக்கடலை, அதாவது வேர்க்கடலையைப் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். வறுத்த வேர்கடலை ஆக இருந்தால் கூட கடாயில் போட்டு ஒரு முறை சூடு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு உளுந்து – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், இரண்டு பருப்புகளையும் தனித்தனியாகப் போட்டு வறுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு அதே கடாயில் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, வர மிளகாய் – 20, கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, உப்பு தேவையான அளவு, கட்டி பெருங்காயம் – ஒரு சிறிய துண்டு, இந்த பொருட்களை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக வறுத்த வேர்க்கடலையை தோல் உரித்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தோல் உரிக்காமல் அரைத்தாலும் அது சத்து தான். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. எல்லா பொருட்களும் நன்றாக வறுபட்டு ஆறி விட்டதா. மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளுங்கள். இறுதியாக தோலுரித்து – 6 பல் பூண்டை சேர்த்து, மிக்ஸியை விட்டுவிட்டு ஓட்டி அரைத்துக் கொள்ள வேண்டும்

- Advertisement -

மிக்ஸியை ஒரேயடியாக ஓட விட்டு அரைத்தால் நிலக் கடலையில் இருந்து எண்ணெய் பிரிய தொடங்கிவிடும். அதன் பின்பு பொடி பிசுபிசுப்புத் தன்மையோடு நமக்கு கிடைக்கும். அது அவ்வளவு சரியான பக்குவத்தில் இருக்காது. அதனால் பல்ஸ் மோடில் அரைத்து விட்டு, அதன் பின்பு லேசாக விட்டு விட்டு மிக்ஸியை ஓட விட்டு பக்குவமாக அரைத்து எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

வேர்க்கடலை – 1 கப், உளுத்தம்பருப்பு – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், வரமிளகாய் – 10, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் – 1 சிறிய கட்டி, தோல் உரித்த பூண்டு பல் – 6. இவ்ளோதாங்க. அளவுகள் சரியாக வைத்தால் போதும். வறுக்கும் போது சரியான பக்குவத்தில் எல்லாப் பொருட்களையும் பொன்னிறமாக வறுத்து எடுத்தால் போதும். எல்லாப் பொருட்களையும் ஒரே கப்பில் அளந்து கொண்டால் போதும்.

தேவைப்படும்போது இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள நல்லெண்ணெயை ஊற்றி இதை பரிமாறி பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். கொஞ்சம் வித்தியாசமான வாசத்தோடு இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையான பொடி தயார். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -