கர்நாடகா ஸ்டைலில் வேர்க்கடலை சட்னி இப்படி செஞ்சு பாருங்க, டேஸ்ட் அசத்தலாக இருக்கும்

garlic-peanut-chutney_tamil
- Advertisement -

கர்நாடக மாநிலங்களில் பிரசித்தி பெற்ற இந்த கோலார் சட்னி வேர்க்கடலை, கடலை பருப்பு, தக்காளி சேர்த்து செய்யப்படுகிறது. எப்போதும் ஒரே போல அல்லாமல் இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சூப்பரான டேஸ்டியாக இருக்கக் கூடிய இந்த வித்தியாசமான சட்னியும் ட்ரை செஞ்சு பார்க்கலாம். தேங்காய், வெங்காயம் எதுவும் சேர்க்காமல் செய்யும் இந்த சட்னி புது விதமாகவும், சுவையாகவும் இருக்கும். கர்நாடகா ஸ்டைல் வேர்க்கடலை கோலார் சட்னி ஈசியாக நாமும் எப்படி செய்வது? அப்படின்னு இந்த பதிவில் இனி தெரிஞ்சிக்குவோம் வாங்க!

வேர்க்கடலை கோலார் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு – ஒன்றரை டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை – ஒரு கப், பூண்டு பல் – 12, சீரகம் – ஒரு டீஸ்பூன் வரமிளகாய் – 10, தக்காளி – 2, கருவேப்பிலை – இரண்டு கொத்து, புளி – சிறு எலுமிச்சை பழ அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – இரண்டு டீஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், காய்ந்த மிளகாய் – இரண்டு, கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

வேர்க்கடலை கோலார் சட்னி செய்முறை விளக்கம்:
இந்த வேர்கடலை சட்னி செய்ய முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். இது வறுபட்டு வரும் பொழுது வேர்க்கடலை ஒரு கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் 12 பூண்டு பற்களை தோலுடன் அப்படியே சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இவற்றை வதக்கும் பொழுது சீரகம், வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வதக்குங்கள். மீடியம் சைஸ் தக்காளி இரண்டு சுத்தம் செய்து பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்குங்கள். இவை மசிய வதங்கி வரும் பொழுது, ரெண்டு கொத்து கருவேப்பிலை, ஒரு சிறிய கோலி குண்டு அளவிற்கு புளி சேர்த்து வதக்குங்கள்.

- Advertisement -

ரெண்டு நிமிடம் நன்கு வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு தாளிப்பு கொடுக்க தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சட்னி அரைக்கிற நேரத்துல, சூப்பரான இந்த கருப்பு கொண்டை கடலை கிரேவியை செய்துவிடலாம். இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள ஆரோக்கியமான சைட் டிஷ்.

பின் உளுந்து, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து, ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு, இரண்டு காய்ந்த மிளகாய்களை கிள்ளி தாளித்துக் கொள்ளுங்கள். இதை அப்படியே சட்னியில் கொட்டி கலந்து வைத்துக் கொள்ளுங்கள். ரொம்ப சூப்பராக இருக்கக் கூடிய இந்த காரசாரமான வேர்க்கடலை சட்னி ரெசிபி இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்களுக்கும் ரொம்பவே பிடிச்சு போயிடும்.

- Advertisement -