உடம்புக்கு அத்தனை ஆரோக்கியம் தரக்கூடிய புதுவிதமான ‘வேர்க்கடலை நெல்லிக்காய் துவையல்’ ரெசிபி உங்களுக்காக.

peanut-chutney0
- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நெல்லிக்காய் வேர்கடலை இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து ஆரோக்கியமான சிம்பிளான ஒரு துவையல் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். சுட சுட சாதத்தோடு பிசைந்து சாப்பிட இந்தத் துவையல் மிக மிக அருமை. இந்த ஆரோக்கியமான துவையலுடன் ஒரு ஸ்பெஷல் பொட்டுக்கடலை சட்னி ரெசிபியும் இந்த பதிவின் இறுதியில் தெரிந்து கொள்ளலாம். இரண்டு சட்னியும் சுலபமாக 10 நிமிடத்தில் செய்து அசத்துங்க.

nellikai

முதலில் மூன்று நெல்லிக்காய்களை கொட்டையில் இருந்து நீக்கி விட்டு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய் – 4, மிகச் சிறிய துண்டு – இஞ்சி, இந்த 2 பொருட்களையும் லேசாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். கொட்டை நீக்கிய நெல்லிக்காய், வறுத்து வைத்திருக்கும் வர மிளகாய், இஞ்சி துண்டுகள், வறுத்த வேர்க்கடலை – 50 கிராம், தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு, கருவேப்பிலை – 1 கொத்து, சிறிய துண்டு – வெள்ளம், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து ரொம்பவும் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த சட்னியை துவையல் போல மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

paruppu-chutney3

அரைத்த சட்னியை ஒரு சிறிய கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். கொஞ்சமாக எண்ணெயில் கடுகு வெந்தயம் பெருங்காயம் கறிவேப்பிலை வர மிளகாய் தாளித்து, இந்த சட்னியில் கொட்டி நன்றாக கலந்து பரிமாறினால் ஆரோக்கியம் தரக்கூடிய வேர்கடலை நெல்லிக்காய் துவையல் தயார்.

- Advertisement -

அடுத்தபடியாக தேங்காய் சேர்க்காமல் சூப்பரான ஒரு பொட்டுக்கடலை சட்னி ரெசிபி. அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் ஓரளவுக்கு பொடியாக வெட்டிய பெரிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 6, இஞ்சி சிறிய துண்டு – 2, தோல் உரித்த பூண்டு பல் – 5, இந்தப் பொருட்களை சேர்த்து முதலில் 5 நிமிடம் போல நன்றாக வதக்கி விட வேண்டும். இறுதியாக 50 கிராம் அளவு பொட்டுக் கடலையை சேர்த்து, 2 நிமிடம் வறுத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த கலவை நன்றாக ஆறட்டும்.

ஆறிய இந்த எல்லா பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். 2 ஸ்பூன் எண்ணெயில், கடுகு, கருவேப்பிள்ளை, பெருங்காயம், உளுந்து, வர மிளகாய் சேர்த்து தாளித்து சட்னியில் கொட்டி பரிமாறினால் சூப்பரான பொட்டுக்கடலை சட்னி தயார்.

- Advertisement -