பலவிதமான காய்கறி குழம்புகள் செய்தாலும் இந்த தக்காளி குழம்பின் சுவைக்கு முன் எந்த சுவையும் ஈடாகாது

thakkali-kuruma1
- Advertisement -

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காய்கறிகளை சேர்த்து குழம்பு செய்து வைக்க வேண்டும். இவ்வாறு குழம்பு வைத்தால் மட்டுமே சாதத்துடன் சேர்த்து சாப்பிட நல்ல சுவையில் இருக்கும். அவ்வாறு சாம்பார், கீரை குழம்பு, காரக்குழம்பு, வத்த குழம்பு, குருமா, கூட்டு என பலவகை சமையல் வகைகள் செய்து வைக்கப்படுகிறது. என்றாவது ஒருநாள் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருந்தாலும் அல்லது உடல் சற்று சோர்வாக இருந்தாலும், காய்கறிகள் எதுவும் இல்லாமல் போனாலும் இரண்டு தக்காளி மட்டும் இருந்தால் போதும், இந்த எளிமையான தக்காளி குழம்பை உடனே செய்து விட முடியும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள் , தக்காளி குழம்பை இட்லி, தோசையுடன் தொட்டு கொண்டும் சாப்பிடலாம், அல்லது சுடச்சுட சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். தக்காளி குழம்பினை சாதத்துடன் சேர்த்து பிசைந்து வாயில் வைத்து பாருங்கள், அடடா! அவ்வளவு சுவையாக இருக்கும். வாருங்கள் இந்த சுலபமான தக்காளி குழம்பை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
நாட்டுத் தக்காளி – 2, பச்சை மிளகாய் – 1, பூண்டு – 2 பல், தேங்காய் – 2 சில்லு, சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், தனியாத்தூள் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன் , உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் – 1, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – சிறிதளவு, எண்ணெய் – 4 ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்க வேண்டும். அதன் பின்னர் இரண்டு பல் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்ய வேண்டும். பிறகு இரண்டு சில்லு தேங்காயை பொடியாக துருவி வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாய், பூண்டு மற்றும் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். இவற்றுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு, தட்டு போட்டு மூடி மிளகாய் தூள் வாசனை போகும் வரை குழம்பை கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு இறுதியாக ஒரு கொத்து கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட்டு, அடுப்பை அனைத்து விட வேண்டும்.

- Advertisement -