வெட்டிவேரினை பற்றி நாம் அறியாத பல மருத்துவ பயன்கள்

vetiver
- Advertisement -

வெட்டிவேரை பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு பொருள் தான். வெட்டிவேர் ஒரு புல் இனத்தைச் சேர்ந்தது. ஆற்றுப் பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது. நாட்டு மருந்துவத்தில் இந்த வெட்டி வேருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த வெட்டி வேருக்கு உஷ்ணத்தைத் தணிக்கும் சக்தியானது அதிகமாக இருக்கிறது. வெட்டிவேரினை பற்றி நாம் அறியாத பல பயன்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

vetiver

கோடைகாலத்தின் தாகத்தை நீக்கும்
கோடை காலங்களில் மண்பானையில் உள்ள நீரில் வெட்டிவேரை போட்டு வைத்துவிட வேண்டும். அந்த தண்ணீரை நாள்தோறும் பருகி வந்தால் தாகம் தணிந்து உடல் சோர்வு நீங்கி உற்சாகம் வரும். வெயில் காலங்களில் உடம்பில் ஏற்படும் வியர்வை, துர்நாற்றத்தை நீக்க வெட்டி வேரினை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து, அந்த விழுதினை சுடு தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும்.

- Advertisement -

கோடைக்காலங்களில் வீட்டை குளிர்ச்சியாக்க
கோடைகாலங்களில், வீட்டிற்கு உள்பகுதியில் வெப்பத் தன்மை அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் நம் வீட்டு ஜன்னல்களில் வெட்டிவேரை கொண்டு செய்யப்பட்ட தடுப்புகளை வைத்து வர நம் வீட்டிற்குள் இருக்கும் வெப்ப நிலை குறைந்து குளிர்ச்சி தன்மையை அடைகிறது.

vetiver

நீர் கடுப்பு நீங்க
வெட்டிவேரை 100 கிராம் அளவிற்கு எடுத்துக்கொண்டு ஒரு மண்ணினால் செய்யப்பட்ட சட்டியில் போட்டு, நான்கு கப் நீர் ஊற்றி நன்றாக காய்ச்சி அதனுடன் திருநீற்றுப்பச்சை விதையைப் போட்டு, வெயில் நேரத்தில் குடித்து வந்தால் வெயில் சூட்டினால் ஏற்படும் உடம்பு எரிச்சல், கழுத்து வலி, சூட்டுக் கொப்புளங்கள், சிறுநீர் கடுப்பு ஆகியவை நீங்கிவிடும்.

- Advertisement -

காய்ச்சலுக்கு பின்பு
நமக்கு காய்ச்சல் வந்த பின்பு உடலில் வலியும், சோர்வும் அதிகமாக இருக்கும். இதனை நீக்க வெட்டி வேரை நீரில் போட்டு, கொதிக்க வைத்து, வடிகட்டி அந்த நீரைப் பருகி வந்தால் உடல் சோர்வும் உடல், வலியும் நீங்கும். இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் ஜீரண சக்தியும் அதிகரிக்கும். வயிற்றுப்புண்ணும் குணமடையும்.

vetiver

பருக்கள் நீங்க
துண்டுகளாக வெட்டிய வெட்டிவேர் சிறிதளவு, கொட்டை நீக்கிய கடுக்காய் 1. இவை இரண்டையும் முதல் நாள் இரவே சுடுநீரில் போட்டு ஊற வைத்து விடவேண்டும். மறு நாள் அதை அரைத்து விழுதாக்கி அந்த விழுதை பருக்கள் மீது தடவி வர பருக்கள் தழும்பு இல்லாமல் மறைந்துவிடும்.

- Advertisement -

தீக்காயம் ஏற்பட்டால்
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் வெட்டிவேரை அரைத்து அந்த விழுதினை தீக்காயத்தின் மேல் பூசி வந்தால் தீக்காயம் விரைவில் குணமாகும். தழும்பும் விரைவில் மறைந்துவிடும்.

vetiver

கால் வலி நீங்க
தேங்காய் எண்ணெயுடன் வெட்டிவேரை சேர்த்து நன்றாக காய்ச்சி அந்த எண்ணையை இரண்டு நாட்கள் கழித்து நம் காலில் எங்கு வலி உள்ளதோ அந்த இடங்களில் தடவி வரலாம். இப்படி தொடர்ந்து செய்து வர கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு
வெயில் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலி, வயிற்று கடுப்பை நீக்க வெட்டிவேரை நன்றாக காய வைத்து சுத்தம் செய்து பொடி செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பெருஞ்சீரகத்தை பொடி செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வெட்டிவேர் பொடி ஒரு ஸ்பூன், கருஞ்சீரகப் பொடி ஒரு ஸ்பூன் இவை இரண்டையும் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து 2 மில்லி கிராம் அளவிலான தண்ணீரை குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.

vetiver

மனநோய்க்கு மருந்து
ஆயுர்வேதத்தில் வெட்டி வேரில் இருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெயானது மன அமைதிக்கும், மன நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இவைத்தவிர வெட்டிவேரை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்படும் விசிறியை கொண்டு வீசினால் அதில் வரும் காற்றில் மூலம் உடல் எரிச்சல், தொண்டை வறட்சி போன்றவை நீங்கும்.

வெட்டிவேர் டானிக்
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வெட்டிவேர் டானிகிணை குடித்து வந்தால் செரிமான பிரச்சனை, சுவாசக் கோளாறு, நரம்புத்தளர்ச்சி, நீங்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்படுகிறது. அன்றாட வேலையை சுறுசுறுப்பாக செய்வதற்கு நம் உடலானது அதிக ஆற்றலை பெறுகிறது.

இதையும் படிக்கலாமே
வயதான பின்பும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இதை சாப்பிட்டால் போதும்

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vetiver benefits in Tamil. Vetiver uses in Tamil. Vetiver payangal in Tamil. Vetiver nanmaigal in Tamil.

- Advertisement -