வீட்டில் நீங்கள் தெரியாமல் செய்யும் இந்த தவறுகள் கூட கடன்காரன் ஆவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திவிடும் தெரியுமா?

door-lakshmi-kitchen
- Advertisement -

நம் வாழ்க்கையை நவகிரகங்கள் ஆட்சி செய்வதாக ஐதீகம் உண்டு. ஒருவர் சுகபோக வாழ்க்கை பெறுவதற்கு சுக்கிர அருள் தேவை. இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும், ஒவ்வொரு கிரகங்கள் நம்மை ஆட்சி படுத்துகின்றன. நம் கர்ம வினைக்கு ஏற்ப கிரகங்களின் ஆளுமையின் மூலம் நமக்கு நல்லவையும், தீமையும் விளைகின்றன. இப்படி இருக்கும் பொழுது நாம் வீட்டில் தெரியாமல் செய்யும் இந்த சில தவறுகள் நம்மை கடன்காரன் ஆக்கி விடும் என்கிறது ஜோதிடம். அப்படி எல்லாம் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மட்டுமல்லாமல், வீட்டில் இருக்கும் சின்னஞ்சிறுசுகள் கூட தெரியாமல் இந்த விஷயத்தை அவ்வபோது செய்வது உண்டு. இந்த விஷயத்தை செய்வதன் மூலம் உங்களுக்கு கடன் சுமை அதிகரிக்கும். அதாவது வீட்டில் இருக்கும் கதவு, ஜன்னல்களை சில சமயங்களில் வேகமாக சாத்துவது உண்டு. நாம் அறியாமல் செய்யும் இந்த விஷயம் நம்மை கடன்காரன் ஆக்கிவிடும்.

- Advertisement -

வெளிச்சம் மற்றும் காற்றினை தரக்கூடிய கதவுகளிலும், ஜன்னல்களிலும் நல்ல தேவதைகள் வாசம் செய்கின்றன. குறிப்பாக நிலை வாசலில் உங்கள் இல்லத்தின் குலதெய்வம் வாசம் செய்கிறது. அப்படி இருக்கும் பொழுது கதவையும், ஜன்னலையும் வேகமாக சாத்துவது கூடாது. இவைகள் காற்றில் தானாக ஆடிக்கொண்டு இருக்கும்படி அமைக்கவும் கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம். கதவு, ஜன்னல்களில் இருக்கும் சிறு குறைபாடும் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும் எனவே கதவு, ஜன்னல்களை மெதுவாக சாத்துவதும், அதனை சுத்தமாக பராமரிப்பதும் கடன் தொல்லையில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

நீங்கள் சமையல் செய்யும் அடுப்பை அமைத்திருக்கும் இடத்திற்கு பின்னால் இருக்கும் சுவற்றில் படியும் எண்ணெய் பசையை அடிக்கடி சுத்தம் செய்துவிட வேண்டும். முந்தைய காலங்களில் விறகு அடுப்பில் சமைப்பது வழக்கம். அப்படி சமைக்கும் பொழுது அங்கு படியும் கரும்புகை மூலமாக சனி பகவான் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தார். இது ஒரு நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய விஷயமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அங்கு கரும்புக்கு பதிலாக, எண்ணெய் பசை படிய துவங்கி இருக்கிறது. இதனால் வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிக் கொண்டே இருக்கும். உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து நீங்கள் ஒரு திட்டம் தீட்டினால், அது வேறு ஒரு விஷயத்திற்கு செலவாகிவிடும்.

- Advertisement -

நம்மை சுற்றி இருப்பவர்களே நம்முடைய கஷ்டத்திற்கும், நஷ்டத்திற்கும் காரணமாக இருக்கிறார்கள். அதில் எல்லோருமே நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல! ஒருவன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இத்தகையவர்களின் பார்வையில் படும்படியாக ஒரு விஷயத்தை நாம் செய்வதும், அல்லது நம்மை பற்றிய பெருமைகளை தம்பட்டம் அடித்துக் கொள்வதும், கடன் பிரச்சினைக்கு காரணத்தை ஏற்படுத்துகிறது. தேவையற்ற விஷயங்களை, தேவையற்ற இடங்களில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

உதாரணத்திற்கு நீங்கள் புதிதாக ஒரு நகை வாங்குகிறீர்கள் என்றால் அது யாருக்கு தெரிய வேண்டுமோ, அவர்களிடம் மட்டும் சொன்னால் போதும் எல்லோரிடமும் தம்பட்டம் அடிப்பது அல்லது வெளியிடங்களில் காண்பித்து கொள்வது கண் திருஷ்டிகளை ஏற்படுத்தும். இதனால் கடன் பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பிக்கும். எனவே இத்தகைய அறியாமல் செய்யும் விஷயங்களை இனி தவிர்த்துக் கொள்வதால் கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

- Advertisement -