தினமும் இந்த தீபம் எரியும் வீட்டில் மகாலட்சுமி தாயார் நிரந்தரமாக வந்து அமர்ந்து அவர்களை சகல சௌபாக்கியத்தோடு கோடீஸ்வர வாழ்க்கை வாழ வைப்பார்.

mahalakshmi dheepam
- Advertisement -

பொதுவாகவே வீட்டில் காலை மாலை இரண்டு நேரமும் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது நாம் பாரம்பரியமாகவே பின்பற்றி வரும் ஒரு பழக்கம் தான். இப்படி தீபம் ஏற்றும் வீட்டில் பெரும்பாலும் எந்த ஒரு பெரிய பிரச்சனைகள் வராது என்பதும், அப்படியே வரும் பிரச்சனைகளும் நம்மை பெரும் அளவு பாதிக்காமல் நீங்கி விடும் என்பதும் நம்பிக்கை. அப்படி ஏற்றும் இந்த ஒரு தீபத்தின் மூலம் நம்முடைய வாழ்க்கையை மாற்ற முடியும் என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அப்படி ஒரு அற்புதமான தீப முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வீட்டில் லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும் லட்சுமி தீபம்:
நம்முடைய வாழ்க்கையை மாற்றக் கூடிய இந்த தீபத்தை நாம் என்றைக்கு வேண்டுமானாலும் ஏற்ற தொடங்கலாம். இதற்கென தனியாக நாள் கிழமை எதுவும் பார்க்க வேண்டியதில்லை. இதற்கு ஒரு மண் அகல் எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கொள்ளுங்கள். அடுத்ததாக இந்த விளக்கில் போட பஞ்சுத்திரி அதை கொஞ்சம் மஞ்சளில் நினைத்து காய வைத்து கொள்ளுங்கள். இந்த திரியை போட்டு தான் தீபம் ஏற்ற வேண்டும். இத்துடன் தீபம் ஏற்ற சுத்தமான பசு நெய். இது கிடைக்காதவர்கள் நல்லெண்ணெய் ஏற்றலாம். ஆனாலும் பசு நெய்யில் ஏற்றுவது தான் மிக மிக சிறந்தது.

- Advertisement -

இந்த தீபத்தை நாம் தினமும் சந்தி வேளையில் ஏற்ற வேண்டும். அதாவது ஆறு மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாக ஏற்ற வேண்டும். அதுவும் நம் நிலை வாசலின் உட்புறம் ஏற்ற வேண்டும். நிலை வாசலில் உள்புறம் தரையை சுத்தமாக துடைத்து விட்டு அதில் பச்சரிசி மாவில் சின்னதாக ஒரு கோலம் போட்டுக் கொள்ளுங்கள். அதன் மேல் வெற்றிலை வைத்து வெற்றிலை மேல் நீங்கள் தயார் செய்து வைத்த அகல் விளக்கை மஞ்சளில் நனைத்து திரி போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த தீபத்தை சுற்றி கொஞ்சமாக வாசனை மிக்க மலர் தூவி வைத்து மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த வீட்டில் நீங்கள் நிரந்தரமாக வந்து அமர்ந்து எங்களை செல்வ செழிப்புடன் வாழ வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தொட்டு வணங்கி விடுங்கள். மறு நாள் இதே தீபத்தை ஏற்றும் போது பழைய அகல்,திரி எல்லாம் அப்படியே பயன்படுத்தலாம் வெற்றிலையை மட்டும் தினமும் புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்த தீபம் ஒன்று கிழக்கு முகமாக பார்த்தபடி எரிய வேண்டும் அல்லது வடக்கு முகமாக ஏரிய வேண்டும்.

- Advertisement -

வெற்றிலை மகாலட்சுமி தாயார் அம்சம் பொருந்தியது. அதே போல பசு நெய், பஞ்சு திரி போட்டு மகாலட்சுமி தாயார் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு. நம்முடைய நிலை வாசலில் கிரகலட்சுமி ஆனவர் வீற்றிருப்பார் என்பது ஐதீகம். இத்தனை அம்சங்கள் பொருந்திய இந்த தீபம் நம் வீட்டில் தொடர்ந்து எரியும் பொழுது தாயாரின் முழுமையான அனுகிரகம் பெற்று உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை நிலை மாறி செல்வ செழிப்புடன் வாழ்வது உறுதி.

இதையும் படிக்கலாமே: முதல் ஆடி வெள்ளியில் இந்த 1 பொருளை வாங்க மறக்காதீர்கள்! செல்வம் கொழிக்க ஆடி வெள்ளியில் செய்ய வேண்டியவை?

நம்பிக்கையுடன் இந்த தீப வழிபாட்டு முறையை மேற்கொண்டு வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயரலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -