வீட்டில் முருகனுடைய வேல் வாங்கி வைக்கலாமா? ஒவ்வொரு கிருத்திகை அன்றும் வேல் வழிபாடு செய்வது எப்படி?

murugan-vel

முருகப் பெருமானுடைய ஆயுதமாக இருக்கும் வேல் அசுரர்களை அழிக்க அன்னை பார்வதி தேவி அவருக்கு கொடுத்ததாக புராணக் குறிப்புகள் கூறுகின்றன. அன்னையிடம் பரிசாகப் பெற்ற இந்த வேல் பல சூர சம்ஹாரங்களை நிகழ்த்தி நியாயத்தை நிலை நாட்டி இருக்கிறது. இத்தகைய வேல் வழிபாடு செய்வது மகத்தான பலன்களை பக்தர்களுக்கு கொடுக்கும். வீட்டில் வேல் வைத்து வழிபடுவது சரியா? தவறா? என்கிற குழப்பமும் அனைவருக்கும் இருந்து வருகிறது. அதனை நிவர்த்தி செய்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Lord Murugan Vel

அசுரர்களை அழித்து பக்தர்களைக் காக்கக் கூடிய வேல் வீட்டில் இருப்பது மிகவும் நல்லது தான். வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகளை அழிக்கும் ஆற்றல் அந்த வேலுக்கு உண்டு. எனினும் வேல் வாங்கி வைப்பவர்கள் அதை உங்களுடைய உள்ளங்கையை விட சிறிய அளவில் வாங்க வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. வேல் வைத்திருப்பவர்கள் முறையாக பூஜைகள், அபிஷேகங்கள் செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் பெரிய வேல் வாங்குவது தவிர்ப்பது நல்லது. உள்ளங்கையை விட சிறிய அளவிலான வேல் சக்தி குறைவானது என்பதால் அதில் எந்த தோஷமும் ஏற்படுவது இல்லை.

முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. மேலும் ஒவ்வொரு மாதம் வரும் கிருத்திகை, சஷ்டி திதிகளில் முருகனையும், முருகனுடைய வேலையும் வழிபாடு செய்தால் சகல சம்பத்துக்களும், சவுபாக்கியங்களும் உண்டாகும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் பஞ்சலோக வேல் விற்பனைக்கு இருக்கும். தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை என்று எந்த உலோகத்திலும் வேல் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

Lord Murugan Vel

அப்படி வாங்கும் பொழுது உங்கள் கைகளால் வாங்காமல் வயதில் மூத்தவர்களை வாங்கிக் கொடுக்கச் சொல்லி அவர்கள் கைகளால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். வேல் வழிபாடு செய்பவர்கள் பூஜையறையில் முருகன் படத்தின் முன்பு சிவப்பு பட்டு துணி விரித்து அதில் வெள்ளி அல்லது செம்பு பாத்திரத்தில் பச்சரிசி நிரப்பி வேலை அதில் சொருகி வைக்க வேண்டும். ஒவ்வொரு முறை வேல் பூஜை செய்யும் பொழுதும் காய்ச்சாத பசும் பால், பன்னீர் ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் சாதாரண தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம். கீழ்வரும் வேல் விருத்தம் பாடலை பாடிக்கொண்டு பூஜை செய்வது இரட்டிப்பு பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

வேல் விருத்தம் பாடல் 1:
மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி
மதியும் இரவியும் அலையவே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
மகிழ்வு பெறும் அறு சிறையவான்

murugan1

சிகரவரை மனை மறுகு தொறு ஞுளைய மகளிர் செழு
செனெல்களொடு தரளம் இடவே
ஜகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி
திடர் அடைய ஞுகரும் வடிவேல்

தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி
தரு கவுளும் உறு வள் எயிறுன்
தழை செவியும் ஞுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்
தரு துணைவன் அமரர் குயிலும்

murugan

குகரமலை எயினர்க்குல மடமயிலும் என இருவர்
குயமொடமர் புரியு முருகன்
குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
குலையவிடு கொடிய வேலே

Murugan_ Swamimalai

இப்பாடல் முருகன் கையில் வைத்திருக்கும் வேலை பற்றி புகழ்ந்து பாடுவது ஆகும். அருணகிரிநாதர் அருளிய வேல் விருத்தம் முதல் தொகுப்பில் பத்து பாடல்கள் உள்ளன. அதில் இருக்கும் முதல் பாடல் இதுதான். இப்பாடலை பாடி வேலுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி அபிஷேகம் செய்து, அவல், பொரி, கற்கண்டு நைவேத்தியம் வைத்து முருக மந்திரங்களை உச்சரித்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். கிருத்திகை நட்சத்திரத்தன்று மாலையில் முருகனுக்கு 6 தீபங்களை ஏற்றி வழிபாடு செய்வது சகல செல்வங்களையும் வாரி வழங்கக் கூடியதாக அமையும்.