முழங்காலை தாண்டி முடி இருக்கவங்களை பார்த்து நமக்கு மட்டும் இப்படி முடி இல்லையேன்னு பீல் பண்றீங்களா? அப்படின்னா இத யூஸ் பண்ணி பாருங்க. அப்புறம் நமக்கா இவ்வளவு முடி நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

hair herbal shampoo
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் முழங்கால் தாண்டி முடி என்பதை கேட்டாலே அதிர்ச்சியாகும் நிலையில் தான் நாம் இருக்கிறோம். இதற்கு சூழ்நிலையும் ஒரு காரணம் தான். ஒரு சிலருக்கு இயற்கையாகவே இது போன்ற முடி வளர்ச்சி இருக்கும். பெரும்பாலானவருக்கு ஓரளவிற்கு மேல் முடி வளராது. அப்படி இயற்கையாக முடி வளர கூடிய தன்மை இல்லா விட்டாலும் இந்த ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தும் போது நிச்சயம் முடி வளர்ச்சி அதிகரிக்கும். வாங்க அந்த ஷாம்பு எப்படி தயாரிப்பது என்று அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஹெர்பல் ஷாம்பு தயாரிக்கும் முறை
இந்த ஷாம்பு தயாரிக்க 100 கிராம் சீயக்காய், 100 கிராம் பூந்திக்காய், 50 கிராம் காய்ந்த நெல்லிக்காய் இவை மூன்றையும் வாங்கி ஒரு முறை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய்ந்த பிறகு பூந்திக்காயில் உள்ள கொட்டைகள் அனைத்தையும் எடுத்து விடுங்கள். அடுத்து பூந்திக் காயை மட்டும் வீட்டில் இடி உரல் இருந்தால் அதில் போட்டு கொஞ்சமாக உடைத்து விட்டுக் கொள்ளுங்கள் அல்லது ஒரு பேப்பரை போட்டு கல் வைத்து நசுக்கினாலும் கூட போதும் ஓரளவிற்கு இது உடைந்து வந்து விடும்.

- Advertisement -

இதையே நீங்கள் அதிக அளவில் செய்வதாக இருந்தால் இந்த காயை வீட்டில் உடைக்க வேண்டாம். கடையில் கொடுத்தால் மிஷினில் அரைத்துக் கொடுத்து விடுவார்கள். நாம் எடுத்திருக்கும் அளவு கொஞ்சமாக இருப்பதால் மிக்ஸி ஜாரில் அரைக்கும் போது பூந்திக் காய் முழுதாக இருந்தால் ஜாரின் பிளேட் உடைந்து விடும் எனவே ஒன்றிரண்டாக தட்டி எடுத்துக் கொண்ட பிறகு மூன்றையும் மிக்ஸி ஜாரில் போட்டு முடிந்த அளவிற்கு பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த பவுடரை ஒரு பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம். காலையில் தலைக்கு குளிப்பதாக இருந்தால் முதல் நாள் இரவே அடுப்பில் இரும்பு கடாய் வைத்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி சூடு படுத்துங்கள். இதற்கு இரும்பு கடாய் பயன்படுத்தும் போது அதன் சத்தும் முடிக்கு சேரும். இரும்பு கடாய் இல்லையெனில் சில்வர் கடாய் பயன்படுத்துங்கள். அலுமினியத்தை பயன்படுத்த வேண்டாம்.

- Advertisement -

அடுத்து கொதிக்கும் தண்ணீரில் அரைத்து வைத்த இந்த ஹெர்பல் ஷாம்பு பவுடரில் இருந்து 2 ஸ்பூன் மட்டும் சேர்த்து கலந்து விடுங்கள். இது நன்றாக கொதித்து வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் வரை அப்படியே விட்டு அதன் பிறகு அடுப்பை அணைத்த பின் தட்டு போட்டு மூடி விடுங்கள்.

இது இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறு நாள் காலையில் இந்த ஷாம்புவை வடிகட்டியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நாம் என்ன தான் அரைத்தாலும் சீயக்காய், பூந்திக்காய் எல்லாம் கொஞ்சம் திப்பி திப்பியாக இருக்கும். எனவே வடித்த பிறகு எடுத்துக் கொண்டால் தலைக்கு தேய்த்து குளிக்க சுலபமாக இருக்கும். இப்போது வடிகட்டிய இந்த ஷாம்புவை பயன்படுத்தி நீங்கள் எப்போதும் போல தலைக்கு குளித்து விடுங்கள். இதில் பூந்திக்காய் சேர்த்திருப்பதால் நுரை வரும். ஆனால் ஷாம்பு அளவிற்கு வராது. எனவே சிறிது நேரம் எண்ணெய் பிசுக்கு போகும் வரை தேய்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை நீங்கள் அதிக அளவில் தயார் செய்து கூட ஃப்ரிட்ஜில் ஐஸ் க்யூப் ட்ரெயில் ஊற்றி எடுத்து வைத்து விடலாம் தலைக்கு குளிக்க சிறிது நேரத்திற்கு முன்பாக உங்கள் முடியின் அளவிற்கு ஏற்றார் போல் எடுத்து வெளியில் வைத்து பயன்படுத்தலாம். சீயக்காய் முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவி செய்யும். அதுவுமில்லாமல் முடியின் ஆரோக்கியத்திற்கு இது நல்லதும் கூட, அதே போல் நெல்லிக்காயும் முடியின் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இதில் இருக்கும் வைட்டமின் சி முடிவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும். இந்த பூந்திக்காய் நுரை வருவதற்காக மட்டுமின்றி முடி ஷைனிங் ஆகவும், வெடிப்புகள் இல்லாமலும், உடைந்து விடாமலும் இருக்க உதவி செய்யும்.

இதையும் படிக்காலமே: மூன்றே நாட்களில் உங்களுடைய வெள்ளை முடியை கருப்பாக மாற்ற இதோ ஒரு சூப்பரான ஐடியா. தொடர்ந்து இதை செய்து வந்தால் நிரந்தரமாக வெள்ளை முடி எல்லாம் கருப்பாக மாறிடும்.

இந்த மூன்று பொருள் மட்டும் இருந்தால் போதும். உங்கள் முடி எப்போதும் ஆரோக்கியமான முறையில் நீண்டு வளரும். இந்த ஹெர்பல் ஷாம்பு தயாரிக்கும் முறை உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்களும் இது போல தயார் செய்து வைத்து இயற்கையான முடி வளர்ச்சியை பெறலாம்.

- Advertisement -